நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை
இன்று
ஸ்ரீ சரஸ்வதி பூஜை
அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்
சகலகலாவல்லி மாலையைப் பாடி,
ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட அன்னையின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை..
ஸ்ரீ குமரகுருபரர் அருளிச் செய்த
சகலகலாவல்லி மாலை
(சில பாடல்கள் மட்டும்)
வெண்தாமரைக்கு அன்றி நின்
பதந்தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே. 1
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவில் நின்று
காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல்லியே. 4
பஞ்சப்பி இதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே
நெடுந் தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்
செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு ஒத்திருந்தாய்
சகல கலாவல்லியே. 5
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிது எய்த
நல்காய் எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங்
கனலும்வெங் காலும் அன்பர்
கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே. 6.
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே சதா
நன்றி
இணையம்
ஓம் சிவாய நம ஓம்
**
சிறுவயதில் இந்த சகலகலாவல்லி மாலை மனப்பாடமாக சொல்வேன். எப்படி மறந்தது என்று தெரியவில்லை. இப்போது முதல் பாரா மட்டுமே மனதில் ,மனப்பாடமாக இருக்கிறது!
பதிலளிநீக்குசரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்..
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..
அனைவருக்கும் சரஸ்வதி பூசை, ஆயுதபூசை நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசகலகலாவல்லி மாலை ஸ்ரீராம் கூறியதுபோல்தான் எனக்கும் ..பள்ளிக்காலத்தில் நவராத்திரி ஒன்பது நாளும் பாடி இருக்கிறோம் இப்பொழுது பார்த்துப் பாட வேண்டி உள்ளது. இன்று பாடித் துதித்தோம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
பதிலளிநீக்குநன்றியம்மா..
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..