நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 22, 2023

அழகே.. அருளே..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 10
   புதன்கிழமை

அன்றைக்கு
காணும் பொங்கலன்று 
எழுதிய கனவுப் பாட்டு.


பாதமணிக் கொலுசுக்குள்
பவளம் என மாறேனோ..
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து மனம் ஆறேனோ!..

செங்காந்தள் கைகளிலே
செவ் வளையாய் மாறேனோ..
சிலுசிலுக்கும் வேளையிலே
செந்தமிழாய் வாரேனோ!..

காதோரம் கவி பாட
செவிப்பூவாய் மாறேனோ..
கரு மையாய்க் காத்திருந்து
கண்ணழகைப் பாரேனோ!..

பனிமுல்லைப் பூவாகி
பூங்குழலில் சேரேனோ..
செந்தூரத் துகளாகி
நெற்றியில் நான் வாழேனோ!..

வாத்யாரே.. 
இது உமக்கே நியாயமா!?..
(இல்லை தான்!..)

கன்றாத தமிழெடுத்துக்
கனி மகளைப் பாடுகையில்
காற்றோடு ஊடாடி
காலம் அது திரும்பிடுதே..

திகட்டாத சொல்லெடுத்துத்
திருமகளைப் பாடுகையில்
தித்திக்கும் தெய்வநலம்
திசையெங்கும் பரவிடுதே!..
***
அது அப்படியே
மாறி விட்டது..

அதன் புது வடிவம் 
அம்பிகையிடம்
வேண்டுதலாக - 
இன்று..

அப்போதே இது
கூடிவந்தாலும்
இப்போது தான்
இன்றைய பதிவில்!..


ஆடிவரும் தென் காற்றே
அன்னையிடம் செல்வாயா
அன்னையிடம் செல்லுங்கால்
அன்புடனே சொல்வாயா!..

அவளிடத்தில் சொல்லுதற்கு
அடியேனின் ஆசை ஒன்று..
ஆதரவு என்று அளித்தால்
அன்பில் மனம் வாழும் நின்று..

பாதமணிக் கொலுசுக்குள்ளே
பவளம் எனப் பதிந்தாலும்
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து தினம் பணிவேனே!..

செங்காந்தள் கரந்தனிலே
செவ்வளையாய் சேர்ந்தாலும்
செந்தமிழின் சொல்லெடுத்து
சிறு கவியாய் இழைவேனே!..

காதோரம் குழையானால்
குன்றாமல் குளிர்வேனே..
கரு மையாய கண்ணருகில் 
கலையாமல் வாழ்வேனே!..

பனிமுல்லைப் பூவானால்
பூங்குழலில் சேர்வேனே
செந்தூரத் துகளானால்
பிறைநெற்றி வாழ்வேனே!..

கன்றாத தமிழெடுக்கக்
கைகொடுக்கும் அன்னையவள்
கால்மலரில் மலராகிக்
காலமெல்லாம் வாழ்வேனே!..
**
ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம்
***

14 கருத்துகள்:

  1. கசிந்துருகும் காதல் அபப்டியே பக்தியானது சிறப்பு. மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் பாடல் தீம் போல அமைந்துள்ள கவிதை வரிகளை இரண்டிலும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்‌ரீராம், இறைவன் மீது பாடுவதும் பக்தியுடனான காதல்தானே!!! அபப்டித்தானே நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடியிருக்காங்க!

      கீதா

      நீக்கு
    2. // மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் .. //

      குலசேகர ஆழ்வார் திருமலையில் வேண்டிக் கொண்டது மாதிரி தான்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
    3. @ கீதா..

      // இறைவன் மீது பாடுவதும் பக்தியுடனான காதல் தானே!.. //

      ஆண்டாள் காட்டிய வழியல்லவா இது...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  2. இரு கவிதைகளும் மிக அருமை.
    //கால் மலரில் மலராகி காலமெல்லாம் வாழ்வேனே !//
    அன்னைக்கு அருமையான பாமாலை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அன்னைக்கு அருமையான பாமாலை.. //

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. அன்று நீங்கள் எழுதியது நன்றாக நினைவிருக்கிறது எழுதிவுட்டு உங்களையே நீங்கள் கேள்வி கேட்டுக் கொண்டது!!!! ஹாஹாஹா

    இன்று பக்தியாக வடிவெடுத்த வரிகள் அருமை. ரசித்து வாசித்தேன் அண்ணா,

    கீதா

    பதிலளிநீக்கு
  4. //இன்று பக்தியாக வடிவெடுத்த வரிகள் அருமை. ரசித்து வாசித்தேன்..//

    அன்றைக்கு அப்படி..
    இன்றைக்கு இப்படி..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி சகோ ..

    பதிலளிநீக்கு
  5. கவிதைகள் அருமை. அன்னையை சரணடைவோம் அவள் பாதம் பணிவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அவள் பாதம் பணிவோம்..//

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..