நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 09, 2023

நன்னெஞ்சம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 26
  வியாழக்கிழமை

கடந்த திங்களன்று
துருக்கி  மற்றும் சிரியாவில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்பட்டோர் பலியான நிலையில் -

ஆதி பௌதிகத்தினால் ஏற்பட்ட இத்துயர சம்பத்திற்கு கோளாய நீக்கும் கோளிலி பெருமானிடம் - தருமபுர ஆதீனத்தின் சார்பாக வழிபாடு நடத்தப்பட்டது.. 

இடரில் இறந்தோர்க்கு மோட்ச தீபமும் ஏற்றப் பெற்றது..

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,

துருக்கிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி அவர்கள்..  

அதன்படி, நமது தேசிய பேரிடர் மீட்புக் குழுவின்
நூறு வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவும், மருத்துவக் குழுவும் தனி விமானத்தில் துருக்கிக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டு அதன்படி மீட்புப் படையினருக்குத் தேவையான உபகரணங்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

நேற்று வரை நான்கு விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சென்றிருக்கின்றன..

பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் செயல்படும் நாடாக துருக்கி உள்ளது..

இந்தியாவுக்குள் புகுந்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் என்னும் மூர்க்கர்களின் புகலிடமாக சிரியா உள்ளது.. 

எனினும், அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் துருக்கிக்கு இந்தியா உதவிக் கரத்தை நீட்டியுள்ளது சிந்திக்கத்தக்கது..

மேலும்,
இந்திய குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் பாக்கிஸ்தான்,  பங்களாதேஷ்,  ஆப்கானிஸ்தான் -  முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை மறுக்கப் பட்டால் இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைத்து வஹாபிஷ கூட்டணி அமைத்து இந்தியாவின் மீது ஜிஹாதி யுத்தம் நடத்துவோம் என்று வாய்ச் சவடால் விட்டவன் தான் துருக்கியின் அதிபர் எர்டோகன் என்பதும் குறிப்பிடத்தக்கது..

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 
நன்னயம் செய்து விடல்.. (314)

இன்னா மொழிந்தாரை ஒறுத்தல் அவர் நாண 
நன்னயம் செய்து விடல்..
***

இந்நிலையில்


சீர் வளர் சீர்
தருமபுரம் சந்நிதானம் அவர்களது 
வாக்கின்படி,


நாம் அனைவரும் 
துயருற்ற மக்களுக்காக
அப்பர் பெருமானின் 
பதிகப் பாடலைப் பாடி 
பிரார்த்தனை செய்து கொள்வோம்..


ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
உள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே
பேராது என்சிந்தை இருந்தார் தாமே
பிறர்க்கென்றும் காட்சிக்கு அரியார் தாமே
ஊராரும் மூவுலகத்து உள்ளார் தாமே
உலகை நடுங்காமல் காப்பார் தாமே
பாரார் முழவத்து இடையார் தாமே
பழனநகர் எம்பிரானார் தாமே.. (6/36/8)
-: திருநாவுக்கரசர் :-

பகைவனுக்கு
அருள்வாய் நன்னெஞ்சே
-: மகாகவி :-
***

8 கருத்துகள்:

  1. என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாய் இருப்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. இவ்வுதவி வழியாக பகைத்தீ ஒழியட்டும்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா09 பிப்ரவரி, 2023 14:59

    இதுதான் இந்த மாதிரியான செயல்கள்தான் இந்தியா! பாரதியின் வரிதான் நினைவுக்கு வருகிறது....."பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்! பகை நடுவினில் அன்புருவான நம்
    பரமன் வாழ்கின்றான்!! தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
    சிந்தையில் போற்றிடுவாய்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா09 பிப்ரவரி, 2023 14:59

    என் கருத்து வந்ததா?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா09 பிப்ரவரி, 2023 15:00

    ஓ அனுமதி பெற்ற பின் - புரிந்துவிட்டது துரை அண்ணா,

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இன்னல் புரிவோர் , எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருந்தால் அவர்களும் மனதிருந்தி நல்வாழ்வு பெறக் கருணையோடு வாழ்த்துவோம் என்பார் மகரிஷி.

    வாழ்த்துவோம்.
    அப்பர் பாடலை பாடி வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. நன்னயம் செய்த இந்திய மக்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..