நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 27
புதன் கிழமை.
இன்று
கூடார வல்லி
தமிழமுதம்
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு.. 231
*
திவ்யதேச தரிசனம்
திருமாலிருஞ்சோலை
அழகர் கோயில்
ஸ்ரீ பரமசுவாமி
ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்
ஸ்ரீ சுந்தரவல்லி நாச்சியார்
சித்திரை நிறைநிலா நாளன்று வைகையில்
ஸ்ரீ கள்ளழகர் எழுந்தருள்வது
தென்னகத்தின் மிகப் பெரிய விழா..
நூபுரகங்கை
பிரயோக சக்ரத்துடன்
கிழக்கு நோக்கி
நின்ற திருக்கோலம்.
சோமசந்த விமானம்
மங்களாசாசனம்
பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்
108 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.. 500
*
திவ்யதேசத் திருப்பாசுரம்
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ.. 592
-: ஆண்டாள் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்
திருத்தலம்
திரு ஆரூர்
பாதிரி மரம்
கமலாலய தீர்த்தம்
திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர் மாணிக்க வாசகர்
மற்றும் புண்ணியர் பலர்.
*
தேவாரம்
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்து அணி
ஆரூரானை மறக்கலுமாமே.. 7/59/1
-: சுந்தரர் :-
*
திருவாசகம்
திருஅம்மானை
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.. 8/8/5
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
எங்கள் அழகர் விஜயமா இன்று... ? அனைவரையும் திருமாலிருஞ்சோலை அழகர் காக்கட்டும்.
பதிலளிநீக்குஅனைவரையும் அழகர் காக்கட்டும்..
நீக்குஅன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
வாழ்க வையகம்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நலம் வாழ்க..
நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலை ராமானுஜர் நிறைவேற்றியதாகச் சொல்லப்படுவதுண்டு. அது சுவாரசியமான நிகழ்வு. ராமானுஜர் ஆண்டாளை தன் இளைய சகோதரி என்றே குறிப்பிட்டிருக்கிறார்!
பதிலளிநீக்குகீதா
சிறப்பான செய்தி..
நீக்குஅன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
நலம் வாழ்க..
//https://sivamgss.blogspot.com/2008/01/blog-post_11.html//2008 ஆம் ஆண்டில் கூடாரவல்லித் திருநாளன்று எழுதிய பதிவு, இம்முறை பதிவும் எழுதலை. கூடாரவல்லிக்குச் சர்க்கரைப் பொங்கலும் பண்ணலை. :(
பதிலளிநீக்குஇறைவன் தங்களுக்கு பூரண நலம் அருளட்டும் ..
நீக்குஅன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் நெகிழ்ச்சி..
நன்றியக்கா..
நலம் வாழ்க..
பாடல் , படங்களுடன் அருமையான பகிர்வு .
பதிலளிநீக்குதரிசனம் செய்து கொண்டேன்.
அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குநலம் வாழ்க..
அருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
ஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
நலம் வாழ்க..
பெருமாள், சிவ தரிசனம் பெற்றோம் .
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குநலம் வாழ்க..