நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 26
செவ்வாய்க் கிழமை.
தமிழமுதம்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.. 226
*
திவ்யதேச தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ வடபத்ரசாயீ
ஸ்ரீ கோதை நாச்சியார்
திருமுக்குளம்
புஜங்கசயனம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
ஸம்சன விமானம்.
மங்களாசாசனம்
பெரியாழ்வார், ஆண்டாள்
இரண்டு பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 26
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.. 499
*
திவ்யதேசத் திருப்பாசுரம்
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என்
பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடிசிலோடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக்கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்.. 549
-: ஆண்டாள் நாச்சியார்:-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்
திருத்தலம்
திருநள்ளாறு
ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர்
ஸ்ரீ போகமார்த்த பூண்முலையாள்
சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று
நள மகாராஜனைத்
தொடர்ந்து வந்த கலி நீங்கிய தலம்.
தர்ப்பை
நளதீர்த்தம்.
*
தேவாரம்
மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
மாயனை நால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானை
அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந்து என்நினைக் கேனே.. 7/68/7
-: சுந்தரர் :-
*
திருவாசகம்
திருஅம்மானை
வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.. 8/8/4
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
மாலே மணிவண்ணா ரசிக்கத்தக்க பாடல்களில் ஒன்று. இறைவன் அனைவரையும் காக்கட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குநலம் வாழ்க..
மாலே மணிவண்ணா உன் திருவடிகளே சரணம்
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அனுபிரேம்..
நீக்குநலம் வாழ்க..
மாலே மணிவண்ணா அழகான ராகத்தில் அமைந்த பாசுரம். எல்லோருக்கும் நலம் விளைந்திடட்டும்.
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குநலம் வாழ்க..
ஸ்ரீவில்லிப்புத்தூர், திருநள்ளாறு தரிசனம் கிடைத்தது இன்று.பாடல்களை பாடி கொண்டு தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
நல்ல தரிசனங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஸ்ரீவில்லிபுத்தூர், திருநள்ளாறு தலங்கள் கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..