நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
" ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த
மா மணியைத் தோற்போமோ?.. "
- என்று மகாகவி
மனம் வருந்தி உருகிய
மா மனிதர்
கப்பலோட்டிய தமிழர்
ஸ்ரீ வ.உ. சி. அவர்களது
நினைவு நாள்..
இம்மண்ணுக்காக
நமது சுதந்திரத்துக்காக
கற்பனைக்கெட்டாதபடி
துன்பங்களைச் சுமந்த
பெருமகன்..
ஆங்கிலேயரை எதிர்த்து
கப்பல் நிறுவனத்தை
நடத்தியதற்காக
சிறைக் கொட்டடியில்
கருங்கல் உடைக்கவும்
கடுஞ்செக்கு இழுக்கவும்
என்று - சொல்லொணாத
துயரங்களை அனுபவித்து
மறைந்தார்..
மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள்
செக்கடியில் நோவதுவும்
காண்கிலையோ..
-: மகாகவி :-
இன்று நாம் சுவாசிக்கும்
சுதந்திரக் காற்றில்
தீயாய்க் கனன்ற
தியாக தீபங்களின்
உயிர் மூச்சும் கலந்திருக்கின்றது
என்பதை மறவாது
தாய் நாட்டின் நலனுக்கு
இயன்றதைச் செய்வதே
அன்னவர் தமக்கு
நாம் செலுத்தும் மரியாதை..
வாழ்க
கப்பலோட்டிய தமிழர் புகழ்!..
வந்தேமாதரம்..
வந்தேமாதரம்!..
***
கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மலை நினைவு கூர்வோம்.
பதிலளிநீக்குஆமாம், ஆங்கிலேய அரசு காந்தியைத் தன் வசதிக்காகக் கொண்டு வந்ததும் லாலா லஜ்பத்ராய், பாலகங்காதர திலகர், விபின் சந்திர பால் போன்றோர் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். அவர்களை ஆதரித்த காரணத்தால் வ.உ.சி. அவர்களின் தியாகமும் வெளிப்படவில்லை. :( என்ன செய்வது? ஆனால் இப்போதெல்லாம் ஒரு சிலரால் இவர்களின் தியாகங்கள் வெளிவருகின்றன. அனைவருக்கும் அஞ்சலிகள்.
பதிலளிநீக்குஇங்கேயும் ரோபோவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குவரலாற்றில் சொல்லப்பட்ட ஒரு சிலரது தியாகங்கள் அல்லது போராட்டங்கள் மட்டுமே பேசப்பட்டு நினைவுகூரப்படுகின்றன. சிறப்பான பதிவு துரை அண்ணா.
பதிலளிநீக்குசெக்கிழுத்த செம்மலை நினைவுகூர்வோம்.
கீதா
இவரை நினைவு கூர்ந்த தங்களுக்கு எமது நன்றிகள் பல!
பதிலளிநீக்குமேலோர்கள் வெஞ்சிறையில் என்ர பாரதியின் பாடலை கேட்கும் போது எல்லாம் மனம் உருகி கண்ணில் நீர் வரும்.
பதிலளிநீக்குதன் வீட்டை நினைக்காமல் நாட்டை நினைத்த மனிதர். சிறப்பான பகிர்வு.
தியாகசெம்மலை வணங்குவோம்.
என்ற என்பதற்கு பதில் என்ர என்று வந்து இருக்கிறது.
பதிலளிநீக்குகண்ணில் நீர் மறைத்து விட்டது.