நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 20, 2021

சிவ தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி மாதத்தின்
நிறைநிலா நாள்..


சகல சிவாலயங்களிலும்
சிவலிங்கத் திருமேனிக்கு
அன்னாபிஷேகம்
நடைபெறுகின்றது..

முளைத்தெழுகின்ற
வித்துகள் எல்லாம்
சிவலிங்க வடிவம்..
அதுபோல
அருள் வடிவாகிய
அன்னத்தின் வடிவமும்
சிவலிங்கம்..

தற்சமயம்
விரிவானதொரு
பதிவினைச் செய்வதற்கு
இயலவில்லை..

இன்றைய பதிவில்
தேவார - திருவாசகத்
திருப்பாடல்களுடன்
சிவதரிசனம்..

ஆருயிர்கள் அனைத்தும்
பசியும் பிணியும் இன்றி
வாழ்வதற்கு
எல்லாம் வல்ல இறைவனிடம்
இந்நாளில் வேண்டிக் கொள்வோம்..


நாளாய போகாமே
நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்
மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங்
கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன
கோளிலியெம் பெருமானே..1!62/1
-: ஸ்ரீ திருஞானசம்பந்தர் :-



மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகும் ஆயி னானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே..6/44/1
-: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-



எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே..7/72/1
-: ஸ்ரீ சுந்தரர் :-



அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே..
-: ஸ்ரீ மாணிக்கவாசகர் :


வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்..
-: ஸ்ரீகச்சியப்ப சிவாச்சார்யார் :-
***
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
-:-:-:-

16 கருத்துகள்:

  1. ஓம் நம சிவாய! அன்னபிஷேக கோலத்தில் சிவ பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை தீர்த்தது உங்கள் பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      படங்கள் எல்லாம் சேமிப்பில் இருந்தவை..

      மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  2. சிவாய நம ஓம்... நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. முளைத்தெழுகின்ற வவித்துக்கள் எல்லாம் சிவலிங்க வடிவம் அது போல அருள்வடிவாகிய அன்னத்தின் வடிவமும் சிவலிங்கம்//

    ஆம்! ரசித்து வாசித்தேன். எனது இஷ்டதெய்வமான உயிர்மூச்சாகிய சிவதரிசனம் பெற்றேன்.

    மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  4. சிவதரிசனம் உங்கள் விளக்கத்துடன் அருமை துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  5. அருமையான சிவ தரிசனம். அநேகமாகக் கருவிலி சற்குணேஸ்வரரின் அன்னாபிஷேஹப் படங்கள் நாளை அல்லது மறுநாள் வரலாம். நவராத்திரிப் படங்கள் வந்தன. சில சமயம் வீடியோ காலில் அழைத்து எங்களை தரிசனம் செய்யவும் சொல்வார்கள். அப்படியும் தரிசித்திருக்கிறோம். இந்த வருஷம் படங்கள் வரலாம். எல்லா ஊர்க்கோயில்களின் சிவலிங்கங்களின் தரிசனத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      படங்கள் எல்லாம் பழைய சேமிப்பு..

      இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரிவாராக..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  6. எனக்கு நிறைய அன்னாபிஷேக காட்சிகள் தரிசனத்திற்கு அனுப்பினார்கள் ஊரிலிருந்து.

    உங்கள் தளத்தில் தேவார பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    youtube ல் இரண்டு மூன்று கோயில்களில் நேரடி ஒளிபரப்பு பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

      இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரிவாராக..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. இன்றைய நிறைந்த பௌர்ணமி நன்னாளில் தங்கள் பதிவின் மூலமாக சிவ தரிசனம் பெற்றுக் கொண்டேன். அடியார் நால்வரின் தேவார, திருவாசகப் பாடல்களும் இனிதாக இருந்தது. சிவனின் பரிபூரண அருள் நம் அனைவருக்கும் நல் வழி தந்து காக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

      இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரிவாராக..

      வாழ்க வையகம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..