நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி உத்திரத் திருநாள்..
அனைத்து ஆலயங்களிலும்
சிறப்பான வழிபாடுகள்...
இந்நாளில்
செல்வ முத்துக்குமரனை நினைந்து
சிறியதொரு பாடல்...
***
வேலும் மயிலும் துணையாக
வேலவன் மலரடி மனதாக
நாயகன் அழகே மொழியாக
நானும் வாழ்வேன் வாழ்வாக...
வள்ளி நாயகி தாயாக
வளர் குஞ்சரி மடியினில் சேயாக
அருள் தரும் அரசு அவனாக
அடிமலர் பாடும் கிளியாவேன்...
செந்தமிழ் தந்த குருநாதன்
சந்ததம் அருளும் சிவபாலன்
செல்லும் வழிதனில் இனிதாவான்
சொல்லில் கனிந்த கனியாவான்...
குற்றம் கொடுமைகள் பொறுத்திடுவான்
பெற்றவன் என்னைத் திருத்திடுவான்..
தினம் என்னை நல்வழி நடத்திடுவான்..
திரும்பவும் என்னைப் படைத்திடுவான்..
ஹரஹர சிவசிவ மால் மருகன்
அன்பினில் மலரும் திருக்குமரன்
அடியவர் குறைகள் தீர்த்திடுவான்
அமுதொடு திருவருள் சேர்த்திடுவான்..
அருணகிரி வளர் அருள்வேலன்
தருணம் அறிந்து வரு வடிவேலன்
சிக்கலில் வேல் கொண்ட செல்வனவன்
செந்திலில் சேவற் கொடி கொண்டான்..
அடியவர் அன்பே மயிலாக
அறிவெனும் சுடரே அழகாக
அழகெனும் அழகே முருகாக
அவனும் வருவான் அருகாக..
மனமே மனமே கலங்காதே...
மதி கெட்டு இனியும் தயங்காதே..
தமிழ் வளர் தலைவன் அருகிருக்க
நாளும் பொழுதும் நலம் தானே!..
ஃஃஃ
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
வீரவேல் முருகனுக்கு அரோஹரா..
ஃஃஃ
முருகனுக்கான பாமாலை வெகு ஜோர். எல்லோரும் மறுபடியும் பிறவா வரம் கேட்பார்கள். நீங்கள் மறுபடி என்னை படைத்திடுவான் என்கிறீர்கள்!!
பதிலளிநீக்குஅன்பு முருகன் அனைவரையும் காக்கட்டும்.
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
காரைக்கால் அம்மையார் - மறுபடி பிறந்தாலும் உன்னை மறவாமை வேண்டும் என்கின்றார்...
அப்பர் பெருமானும் அவ்வாறே புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியனை மறவாதிருக்க வரம் வேண்டுகிறார்..
குலசேகர ஆழ்வாரும் திருவேங்கடச் சுனையில் மீனாகப் பிறக்க வேண்டுகின்றார்..
அந்த வழியில் நாமும் செல்வோமே!...
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
இன்றைய தினம் குலதெய்வ வழிபாட்டுக்கும் உகந்தது ஆகும். அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...
நீக்குசெல்வமுத்துக்குமரனைத் தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்தால் அவனைக் குறித்த பாடல் பகிர்வு. அருமை, இனிமை! நன்றி.
பதிலளிநீக்குமுருகன் திருவருள் முன்னின்று காக்க...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பங்குனி உத்தர திருநாளில் நல்ல பக்திப் பாமாலை. முருகனை தொழுது அவனருள் பெறும் வகையிலான அன்புத் தமிழ் பாமாலை. சிறப்பாக தொடுத்திருக்கிறீர்கள். பாடி மகிழ்ந்தேன். முருகனருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென நானும் பக்தியுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. முருகன் திருவருள் முன்னின்று காக்கட்டும்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
பங்குனி உத்திர திருநாளில் நீங்கள் எழுதிய களக்கோடி சாஸ்தா கவிதையை படித்தேன்.
பதிலளிநீக்குஇங்கும் உங்கள் கவிதை மிக அருமை.மயிலாடும் அழகை கண்டு மனம் ஆடி வருகுதப்பா, மனம் ஆடும் அழகை கண்டு மக்கள் கூட்டம் வருகுதப்பா.
முருகன் எல்லோரையும் காக்க வேண்டும்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. முருகப் பெருமானின் திருவருள் களக்கோடி சாஸ்தாவின் நல்லருளும் அனைவரையும் காக்கட்டும்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா...
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
தினம் நல்வழி நடத்திட வேண்டும்.
பதிலளிநீக்குமுருகன் திருவருள் முன்னின்று காக்க..
நீக்குபாமாலை சிறப்பு. நெய்வேலியில் பங்குனி உத்திர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது இன்னமும் நினைவில் பசுமையாக.
பதிலளிநீக்குவடிவேலன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
அன்பின் வெங்கட்..
நீக்குமுருகன் திருவருள் முன்னின்று காக்கட்டும்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
உள்ளம் உருகுதையா முருகா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
மிகச்சிறப்பான பாமாலை!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்கு