நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 22, 2021

நரியின் சிரிப்பு

            

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று
அன்பின் திரு. கில்லர் ஜி
அவர்களது பதிவினைப் படித்ததும்
மனதில் தோன்றியவை
இன்று தங்களுக்காக!...


நரியே.. நரியே!..
உன்னைக் குறை கூறுவது
எனது நோக்கம் அல்ல..
அன்புடன் மன்னிக்கவும்..
***

கோடாங்கிப் பாட்டு..
(கில்லர் ஜி அவர்களுக்கு நன்றி..)
**
காலாங்கிச் சித்தர் வந்து
கதைத்தாலும் புரியாது..
கடுவெளியின் சித்தர் நின்று
உதைத்தாலும் விளங்காது..

குறள் வாங்கிப் படிக்காத
குணக்கேடர் மத்தியிலே
கோடாங்கி அடித்தாலும்
குருதியிலே ஏறாது.. ஏறாதப்பா!...

Go டாங்கி என்றாலும்
ஏ  Donkey என்றாலும்
பணப் பொட்டி 
நெறைஞ்சு விட்டா போதுங்க..
அதுக்கு சாலையில
உருண்டிடுவான் பாருங்க..
சாணி சகதியில
புரண்டிடுவான் பாருங்க!..

காலம் மாறிப் போச்சுங்க
பழய கதை ஏனுங்க...
சொந்த வீட்டை இருட்டாகி
தெரு விளக்கை எரிய வச்ச
தியாகம் எல்லாம்
தெருவோட போனதாலே
கூத்தாடி கும்மியடிச்சி
பொதுப் பணத்தைக்
கொள்ளை யடிச்சி
பொங்க வைக்கும்
பொழுதாகிப் போச்சுங்க...

நடை மறந்த நரி அதுக்கு
வாலறுந்து போன கதை
படிச்சிருக்கோம்..
பார்த்திருக்கோம் தெரியாதா!...

நரி வந்து ஞானியாகி
நமக்கு எல்லாம் உபதேசம் 
பண்ணும் போது உள்வேசம்
ஊருக்கெல்லாம் புரியாதா!..

குறி மறைக்க மறந்த நரி
கோவணத்தைத் துறந்து விட்டு
கூச்சலிட்டு வருவதையும் பாருங்க
கூச்சம் விட்டுப் போனதையும் பாருங்க..

அத நெனச்சு இத நெனச்சு
அதனால ரத்தம் கொதிச்சு
ஆகப் போவதேதும்
உண்டா கில்லர் ஜி..

நல்ல வழிய நாம் தேடி
நடக்கும்போது வழி தேடி
நானிலமே நமைத் தொடரும்
அண்ணாச்சி!..
***
அவ்வப்போது
இவ்வாறான
பதிவுகள் வரலாம்
என்பதனை அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறேன்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
ஃஃஃ

17 கருத்துகள்:

  1. ஹா..  ஹா..  ஹா..   ரசனையான பதிவு.  கில்லர் ஜிக்கும் நன்றி சொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. முன்பு இருந்த தலைவரின் தியாகத்தை புகழை சொன்னது கவிதை.
    இந்த காலத்தை நினைத்து வருந்தி பயனில்லை என்று கவிதையில் சொல்லியதும் அருமை.
    நல்லது வந்தால் அல்லது தானாக மறையும்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கு நன்றி...

      வாழ்க வையகம்...

      நீக்கு
  3. ஆஹா அருமை. தூக்குத்தூக்கி பாட்டு போல நல்லா இருக்கு. கில்லர்ஜி இப்பாட்டிற்க்கு பரிசு கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கு நல்வரவு..
      அனைவரது உற்சாகக் கருத்துரைகளே பதிவுகளுக்கான பரிசு...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. நல்லதையே நினைப்போம். இதை எல்லாம் பார்க்க/படிக்க ஓட்டுப் போடணுமா என்னும் எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியலை. அருமையான நடையில் எழுதி இருக்கீங்க. நரி நன்றாகவே சிரித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      வாக்களிப்பது நமது கடமை...கண்டிப்பாக வாக்களியுங்கள்.. நன்றியக்கா...

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் ஜி
      எனது பதிவால் விளைந்த GOடாங்கி பாட்டு அருமை

      இந்தப்பாடலை நகல் எடுத்து தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களிடம் கொடுத்து அவர்களைமே மேடையில் பாடச் சொல்ல வேண்டும்.

      பகிர்வுக்கு நன்றி அடிக்கடி உடுக்கையடி பாடல்களும் வரட்டும்.

      நீக்கு
    2. அன்பின் ஜி.. தங்களது எழுத்துக்கள் தான் இந்தப் பதிவுக்கு அடிப்படை... தங்களுக்குத் தான் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. வரிகளை மிக அருமையாக வடிவமைத்து இருக்கிறீர்கள். ஒவ்வொரு வரிகளும் உண்மையை சொல்கிறது. என்றுமே நல்லது நடக்க பிராத்தனைதான் நம்மால் செய்ய முடியும்.

    நேற்று சகோதரர் கில்லர்ஜி அவர்களின் பதிவையும் படித்தேன். இன்று தங்கள் கோடாங்கி பாட்டும் அருமையாக உள்ளது. நரியின் புன்னகை அதன் ராஜ தந்திரத்தை வெளிப்படுத்தும் வகையை குறிப்பதும் வேதனைதான். வேறு என்ன சொல்ல? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நல்லதே நடக்க வேண்டிக் கொள்வோம்...
      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..