நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 09, 2020

ஸ்ரீரங்க தரிசனம்

    


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ ரங்கத்தில்
ஊஞ்சல் உற்சவம்
நடைபெற்றுக் கொண்டிருக்கும்
இவ்வேளையில்
இன்று 
திரு அரங்க தரிசனம்..





மனத்திலோர் தூய்மை இல்லை
வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்
தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே
எனக்கினி கதி என் சொல்லாய்
என்னை ஆளுடைய கோவே.. (901)
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
***
அழகிய படங்களும்
இனிய காணொளியும்
ஸ்ரீ ரங்க அரங்கம் எனும்
தளத்திலிருந்து
பெறப்பட்டவை...

அவர்தமக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்!..
***

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

19 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அரங்கனைக் கண்ணார கண்டு தரிசித்தேன்.  காணொளியும் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கோயிலுக்குப் போகத்தான் முடியலை. ஆனால் தினம் யார் மூலமாவது அரங்கனைத் தரிசித்துக் கொண்டே இருக்கோம். இங்கே துலாக் காவிரி ஸ்நானத்துக்குத் தங்கக்குடத்தில் நீர் எடுத்துச் செல்லும் ஆண்டாளைப் பார்க்கக் கூடக் கீழே போக முடியவில்லை. இந்த வருஷம் சீக்கிரமாகவே போய் விடுகிறது ஊர்வலம். இன்னும் நான்கைந்து நாட்கள் தாம்! அதுக்குள்ளே போக முடியுமானு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. இந்தக் காணொளி எனக்கும் 2,3 பேரிடமிருந்து வந்திருந்தது. ஆனால் மொபைல் மூலம் பதிவுக்குக் கொண்டுவரவெல்லாம் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Fb ல் தங்கள் வருகையைக் கண்டேன்..
      கணினியுடன் இணைய இணைப்பு இல்லாததால் மூன்று மாதங்களுக்கு மேலாக சிறுகதை உட்பட எல்லாவற்றையும் கைத் தொலைபேசி வழியே தான் செய்து கொண்டிருக்கிறேன்..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
    2. என்னால் எல்லாம் மொபைல் மூலம் செய்வது என்பது பிரம்மப் பிரயத்தனம். பேசுவதற்கு/முக்கியமாக வாட்சப்பில் குழந்தைகளைப் பார்ப்பதற்கு என்று தான் மொபைலின் தேவையே!

      நீக்கு
  5. அரங்கனின் தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அரங்கனை தரிசனம் செய்து கொண்டேன், காணொளி கண்டு மகிழ்ந்தேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அரங்கன் தரிசனம் அருமை.
    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம்.
    நம் கீதா அங்கேயே இருக்கக் கொடுத்து வைத்திருப்பவர்.
    இந்த அசுர காலம் எல்லோரையும்
    கைகட்டி இருக்க வைத்திருக்கிறது. இன்னும் எத்தனை நாளோ.
    இறைவன் வழி விடட்டும்.
    நன்றி அன்பு துரை.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. அரங்கனின் தரிசனம் கண்ணாற கண்டு கொண்டேன். மனமாற தரிசித்தும் கொண்டேன். ஸ்ரீரங்கம் சென்று வர வேண்டுமென சில வருடங்களாக ஆசையுடன் நினைத்துள்ளேன. அவன் விரும்பி அழைக்க இன்னமும் சமயம் வாய்க்கவில்லை. இன்று தங்கள் பதிவில் அவனே வந்து என்னை ஆட்கொண்ட மாதிரியான படங்கள் மெய்சிலிர்க்க வைத்தன. ஊஞ்சல் தரிசன காணொளியும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல தரிசனம் துரை அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அரங்கனையும், தாயாரையும் கண்டதும் மனம் நெகிழ்ந்தது. 

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..