நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 08, 2020

தைப் பூசம்

பழந்தமிழரது திருநாட்கள் இன்னமும்
சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன..

அவற்றுள் தைப் பூச நன்னாளும் ஒன்று..

திருஞானசம்பந்தப் பெருமான் - திருமயிலையில்
சிவனேசஞ்செட்டியாரது திருமகளாகிய பூம்பாவையை
சாம்பற்குடத்திலிருந்து உயிர்ப்பிக்கும் போது -

மா மயிலைக் கபாலீச்சரத்தானும்
கற்பகவல்லி அம்பிகையும் 
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.. (2/47)


தைப்பூச நன்னாளைக் காணாமல் போகலாமா!.. - என்று வினவுகின்றார்...

மேலும் காவிரிக்குத் தென்கரைத் தலமாகிய
திருவலஞ்சுழியில் திருப்பதிகம் அருளும்போது -

பூசநீர் பொழியும் புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர் திரு நீர் சிறுமான் மறியீர் சொலீர்
ஏச வெண்தலை யிற்பலி கொள்வதி லாமையே..(2/2) 

- என்று பரவுகின்றார்...

இத்திருப்பாடலில் திகழ்ந்து வரும்
தேச நீர் திரு நீர் - என்ற திருவாக்கிற்கு
இந்தத் தேசமும் நீர், திருவாகிய பெருஞ் செல்வமும் நீர் -
என்பதாக தருமபுர ஆதீனத்தார் உரை செய்கின்றனர்...

பூச நன்னாளுக்குரிய திருத்தலமாகிய திருஇடைமருதூருக்கு
திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளும்போது -

ஸ்ரீ மகாலிங்கப்பெருமான் - திரு இடைமருதூர் 
வாசங் கமழ் மலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்தீண்டி யொர்செம்மை யுடைத்தாய்ப் 
பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ..(1/32)

- என்று புகழ்ந்துரைக்கின்றார்...

அப்படியான பெருமையுடையது தைப் பூச நன்னாள்...
அப்பர் ஸ்வாமிகளும் திரு இடைமருதூரில் தரிசனம் செய்யும் போது -

திருவிடைமருதூர் தரிசனம் 
அன்ன வாகனத்தில் அம்பிகை
பாசம் ஒன்றி லராய்ப் பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
இசன் எம்பெருமான் இடைமருதினிற்
பூச நாம் புகுதும் புனலாடவே//(5/14)

- என்று திருப்பதிகம் செய்தருள்கின்றார்...

இப்படியாகத்
திருஇடைமருதூரில் நிகழும் தைப் பூச வைபவத்தினை
ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும்
குறித்தருள்கின்றனர் எனில் தைப் பூசத்தின் பெருமை தான் என்னே!..

தை மாதத்தின் பௌர்ணமி பூச நட்சத்திரத்தை ஒன்றி அமையும்...


இடைமருதுறையும் எந்தை 
இந்நாளில் திருவிடைமருதூரிலிருந்து
எம்பெருமான் தீர்த்தவாரிக்கு காவிரிக்கு எழுந்தருள்வார்

காவிரி நதியில் நீராடுவது சிறப்பு - என்றாலும்

எங்கும் விளங்கும் நீர்நிலைகளில் மூழ்கிக் குளித்து
சிவ தரிசனம் செய்தல் சிறப்பு!.. - என்றே கொள்ளலாம்...

இதன் உட்பொருள்
நீர்நிலைகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே!..

ஊர்க்கும் உண்டு உடையானின் சிறப்பு என்பதைப் போல -

சிவபெருமானுக்குரிய தைப் பூசம்
செந்தமிழ்க் குமரனுக்கும் ஆகி வருவது பெருஞ்சிறப்பு..

தென்பழனித் திருக்குமரன் 
திருப்பரங்குன்றத் திருக்கோலம் 
இன்றைய நாளில் முருகன் திருக்கோயில்களில்
சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன என்றாலும்

பழனியம்பதியில் பெருந்திருவிழா நடைபெறுகின்றது...


தைப்பூச நாளில் தான்
வள்ளலார் பெருமான் 
ஜோதியாக நிறைந்தார்...


பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் 
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் 
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்து ஓங்கும் 
நமசிவாயத்தை நான் மறவேனே.. 
-: வள்ளலார் :- 
 ***
இன்றைய பதிவில்
தஞ்சைப் பெருங்கோயிலில்
திருக்குட முழுக்கினை அடுத்து
ஈசன் எம்பெருமானுக்கு நிகழ்த்தப்பெற்ற
திருமுழுக்கு தரிசனம்..

முதலாவது காணொளி திருமுழுக்கு..
இரண்டாவது தீப ஆராதனை..




அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசா யினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே...
-: திருமூலர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. தரிசனப்படங்களை அளித்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. தைபூச தரினம் செய்து மகிழ்ந்தேன்.


    காணொளிகள் கண்டேன், நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. அப்பனின் திருமுழுக்கு, தீப ஆராதனையும் கண்டு மகிழ்ந்தேன்.  தைப்பூசத்திருநாள் சிறப்புகள் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அழ‌கிய படங்கள்! சிறப்பான தகவல்கள்!!

    பதிலளிநீக்கு
  5. திரு இடை மருதூர் தைப்பூசத்துக்கு உரிய தலம் என்பதை இப்போதே அறிந்தேன். இத்தனைக்கும் பல முறை போய் வந்திருக்கும் கோயில்! :( நல்ல செய்தியைத் தந்தமைக்கு நன்றி. இப்போதெல்லாம் முருகன் திருத்தலங்களே தைப்பூசச் சிறப்புக்கெனப் பெயர் பெற்று வருகின்றன. அருமையான பொருளுடன் கூடிய திருமந்திரப்பாடலைக் கடைசியில் சேர்த்திருப்பதும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றியக்கா...

      நீக்கு
  6. பெருமை மிகு நாளைப் பற்றிய பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..