சென்னை , மயிலாடுதுறை, கும்பகோணம், ஆத்தூர், அரியலூர் பேருந்துகள் இவ்வழியாகத் தான் வருகின்றன...
16.2.2012 |
சரி இருக்கட்டும்... அது என்ன கோயில்?.. சிவன் கோயிலா?..
இல்லை!...
பெருமாள் கோயிலா?..
அதுவும் இல்லை!...
அப்புறம் என்ன?... புதிர் போட்டு விளையாடுகிறீரா!...
அந்தக் கோயிலின் பெயர் என்ன என்பது இன்னும் சரியாக யாருக்கும் தெரியாது!...
என்னது!... பேர் தெரியாதா?...
உண்மைதான்..
நீங்கள் சிவன் கோயில் என்று சென்றால் -
16.2.2012 |
16.2.2012 |
ஸ்ரீ சிவேந்த்ர மூர்த்தி |
அங்கே ஸ்ரீ சக்கரத்தில் திருமேனியுடன் பத்துப் பன்னிரண்டு வடிவங்களைத் தரிசிக்கலாம்...
சிவராத்திரியன்று திருக்கோலம் |
பெருமாள் கோயில் என்று சென்றால்
பிரம்மாண்டமாக ஸ்ரீ சுதர்சன மூர்த்தியை மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்...
மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன மூர்த்தி |
17/1/20 அன்று ஸ்ரீ சுதர்சனருக்கு அலங்காரம் |
இதனால் தான் இக்கோயிலை ராஜகோபாலசாமி கோயில் என்று சிலர் சொல்கிறார்கள்...
ஆனால் இங்கு தான் ராஜகோபாலன் இல்லையே!...
எங்கே போனான் - அந்த ராஜகோபாலன்!...
இங்கிருக்கும் காளி ஆடிய கூத்தினால்
செண்பகாரண்யம் எனப்படும் மன்னார்குடிக்கு
ராஜகோபாலன் சென்று விட்டதாக சொல்கிறார்கள்...
ராஜகோபாலன் சென்று விட்டதாக சொல்கிறார்கள்...
இது நாயக்கர்கள் காலத்தினால் நடந்ததாம்...
மன்னார்குடியில் பிரம்மாண்டமாகக் கோயிலைக் கட்டி எழுப்பி
அங்கே ஸ்ரீமந் ராஜகோபாலனை எழுந்தருளப் பண்ணினார்களாம்...
அங்கே ஸ்ரீமந் ராஜகோபாலனை எழுந்தருளப் பண்ணினார்களாம்...
அதன் பிறகு இந்த கோயிலைக் கவனத்தில் கொள்ளவில்லை என்கிறார்கள்...
தற்காலத்தில் வடக்கு வீதி காளி கோயில் என்றால் தான் புரியும்...
மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன மூர்த்தி...
அதற்குப் பின் புறமாக கன்னி மூலையில் பெரிய மண்டபம்..
அது தான் சிவேந்திரர் கோயில் எனப்படுவது...
இந்த மண்டபத்தினுள் தான் பல்வேறு சக்ர பீடங்களில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்றார்...
சிவபெருமான் என்றாலும் இருபுறமும் தேவியர் விளங்குகின்றார்களே!...
ஈசனுக்கு அப்படியான திருக்கோலம் எதுவும் கிடையாதே!..
சரியான கேள்விதான்... இருந்தாலும்
சிவ அம்சமும் நாராயண அம்சமும் ஒருங்கே விளங்குவதால்
அங்கே மேலராஜவீதி சங்கர நாராயணர் திருக்கோயிலில்
சங்கர நாராயண மூர்த்தி இருபுறமும் தேவியருடன் விளங்குவதைப் போல இங்கேயும் விளங்குவதாகத் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து...
ஓஹோ!.. இதுதான் முற்றான கருத்தா?...
அப்படியெல்லாம் இல்லை... இவ்வளவு நாள் இல்லாமல்
இந்தப் பதிவினை எழுதும்போது மனதில் உதித்த கருத்து இது!...
தங்களுக்கு உகந்தது எனில் உவப்புடன் கொள்க!...
தற்காலத்தில் வடக்கு வீதி காளி கோயில் என்றால் தான் புரியும்...
மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன மூர்த்தி...
அதற்குப் பின் புறமாக கன்னி மூலையில் பெரிய மண்டபம்..
அது தான் சிவேந்திரர் கோயில் எனப்படுவது...
இந்த மண்டபத்தினுள் தான் பல்வேறு சக்ர பீடங்களில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்றார்...
சிவபெருமான் என்றாலும் இருபுறமும் தேவியர் விளங்குகின்றார்களே!...
ஈசனுக்கு அப்படியான திருக்கோலம் எதுவும் கிடையாதே!..
சரியான கேள்விதான்... இருந்தாலும்
சிவ அம்சமும் நாராயண அம்சமும் ஒருங்கே விளங்குவதால்
அங்கே மேலராஜவீதி சங்கர நாராயணர் திருக்கோயிலில்
சங்கர நாராயண மூர்த்தி இருபுறமும் தேவியருடன் விளங்குவதைப் போல இங்கேயும் விளங்குவதாகத் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து...
ஓஹோ!.. இதுதான் முற்றான கருத்தா?...
அப்படியெல்லாம் இல்லை... இவ்வளவு நாள் இல்லாமல்
இந்தப் பதிவினை எழுதும்போது மனதில் உதித்த கருத்து இது!...
தங்களுக்கு உகந்தது எனில் உவப்புடன் கொள்க!...
அவ்வளவு தானா?...
இருக்கிறதே... மூலஸ்தானத்துக்கு ஈசான்ய மூலையில் இன்னொரு மண்டபம் அதனுள் இரு பிரிவாக ஒன்றில் ஏகப்பட்ட சிவலிங்கங்கள்...
16.2.2012 |
மேலும் யந்த்ர பீடத்துடன் கூடி வித்யாசமாக விளங்கும் நவக்ரக மூர்த்திகள்..
அந்தப் படங்கள் ஒன்றையும் இங்கே காணோம்!...
உண்மையைச் சொல்வதானால் -
அந்தத் திருவுருவங்கள்.. அங்கிருக்கும் அதிர்வலைகள் எல்லாம் சேர்ந்து கொள்ள அதிர்ந்து போனேன்... படமெடுக்கத் தோன்றவில்லை...
அப்படியானால் யாரும் வருவதில்லையா அங்கே!...
நல்ல கேள்வி கேட்டீர்கள்... காளி கோயில் என்றிருக்கும் போது பெண்கள் வராமலா இருப்பார்கள்!... நான் அங்கிருந்த போதே ஏராளமான பெண்கள் அவர்களாகவே சிவலிங்கங்களுக்கு மலர் சூட்டி தீபமேற்றி வழிபட்டுச் சென்றார்கள்...
எனக்குத் தான் சற்று நடுக்கம்... மண்டபத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன ஓட்டைகள்.. பிளவுகள்.. சுப்புக்குட்டிகள் இருக்குமோ என்று...
எல்லாவற்றுக்கும் மேலாக அங்கே பெரிய சுப்புக் குட்டிகளின் திருமேனிகள் வேறு...
எல்லாம் சரிதான்... அம்பிகையின் படம் ஒன்றையும் காணோமே!...
அம்பிகை வந்தாள் என்று தலைப்பு மட்டுமா!...
அவள் வந்து தானே பதிவைப் போடு!.. - என்றாள்...
இந்தப் படங்கள் எடுக்கப்பட்டு எத்தனை வருடங்கள் தெரியுமா!..
சரியாக எட்டு ஆண்டுகள்...
இத்தனை ஆண்டுகளாக ஏன் போடவில்லை?...
அப்படியிருக்க இப்போது என்ன திடீரென்று!...
அவள் தான் சிவராத்திரி அன்று வந்தாளே!.. சிரித்துக் கொண்டே வந்தாளே!..
எதையாவது உளறிக் கொண்டு இருக்காமல் எட்டு வருடங்களுக்கு முன்னால் எடுத்த மற்ற படங்களையும் பதிவில் போட்டு விட்டு மறு வேலை பார்க்கவும்...
ஆகா!.. அதை விட எனக்கு வேறு வேலை என்ன எனக்கு!..
உங்கள் ஆசைக்காக ஒன்றே ஒன்று.. மற்றவை அடுத்த பதிவில்!...
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.. (077)
-: அபிராமபட்டர் :-
-: அபிராமபட்டர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
அரிய தகவல்கள் ஜி தரிசித்தேன்
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மகிழ்ச்சி.. நன்றி..
அறியாத தகவல்கள் ஐயா
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
இக்கோயிலை மதனகோபாலப் பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலைப் பற்றி 2016இல் விக்கிப்பீடியாவில் தஞ்சாவூர் ராஜகோபாலசுவாம கோயில் என்ற தலைப்பில் எழுதி (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D) உரிய புகைப்படத்துடன் இணைத்துள்ளேன். உங்களால் மறுபடியும் இன்று கோயிலுக்குச் சென்ற உணர்வு. நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கும் மேலதிகச் செய்திகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
மிக அருமை. அம்பிகை நேரில் வந்தாள் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅம்பிகையால் அழகான கோவில் தரிசனம் கிடைத்தது.
நன்றி.
தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குபுதுக் கோவில் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைக்கும்... தரிசனம் செய்யுங்கள்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
கேள்வியும் பதிலும், மிகவும் அருமை ஐயா...
பதிலளிநீக்குபுதிய தகவல்கள். முனைவர் ஜம்புலிங்கம் ஸார் கொடுத்திருக்கும் விவரங்கள் சென்று பார்க்கவேண்டும்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அழகான கோவில்.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் நன்று.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான கோவிலை அறிய தந்தமைக்கு நன்றிகள் பல...
பதிலளிநீக்குஅழகிய படங்களுடன், அற்புத தகவல்கள்...
அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி...
நீக்குஇத்தகையதொரு கோயில் இருப்பதே தெரியாது. அரிய தகவல்களைப் படங்களோடு அளித்தமைக்கு நன்றி. ஈசன் அருளும், அழைப்பும் இருந்தால் சென்று தரிசிக்கலாம். பகிர்வுக்கு நன்றி. தொடரக் காத்திருக்கேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...
நீக்குஅரிய தகவல்கள். புகைப்படங்கள் தெளிவாக இருக்கின்றன. பாக்கியம் இருந்தால் தரிசனம் செய்யக் கிடைக்கும். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி..