பசுமை நிறைந்த நினைவுகளே..
பாடித் திரிந்த பறவைகளே..
- என்று தாராளமாக பாடிக் களிக்கலாம்..
அதே வேளையில் -
பழைமையான அந்த பள்ளி நாட்களில் மனம் சற்றே உறைந்தும் போகலாம்.....
இன்றைக்கு எங்கள் பிளாக்கில் எளியேனின் சிறுகதை ஒன்று வெளியாகின்றது...
அதன் தாக்கம் தான் இன்றைய பதிவு...
ஆனாலும் இதனை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம்...
இருக்கின்ற சூழ்நிலையில் இது தான் முடிந்தது...
பாடித் திரிந்த பறவைகளே..
- என்று தாராளமாக பாடிக் களிக்கலாம்..
அதே வேளையில் -
பழைமையான அந்த பள்ளி நாட்களில் மனம் சற்றே உறைந்தும் போகலாம்.....
இன்றைக்கு எங்கள் பிளாக்கில் எளியேனின் சிறுகதை ஒன்று வெளியாகின்றது...
அதன் தாக்கம் தான் இன்றைய பதிவு...
ஆனாலும் இதனை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம்...
இருக்கின்ற சூழ்நிலையில் இது தான் முடிந்தது...
இட்லி, வடை - சாம்பாருக்குப் பதிலாக குருமா!...
வற்றல் குழம்பு சாதம் .. துணைக்கு சுட்ட அப்பளம்..
தயிர் சாதம்.. அருகில் மாங்காய் ஊறுகாய்...
எலுமிச்சை சாதமும் உருளைக்கிழங்கு சிப்ஸும்..
கறிவேப்பிலை பொடி சாதம் கூடவே உருளைக்கிழங்கு சிப்ஸ்..
இதற்கும் உ. கி. சிப்ஸ் தானா?...
இல்லையில்லை.. செய்து கொடுத்தது உருளைக்கிழங்கு மசாலா...
மசாலாவை பத்தாங்கிளாஸ் ரவுடிகள் லாவிக் கொண்டு போய் விட்டார்கள்..
யார்!.. பசங்களா?...
பசங்களா?... அவிங்க நல்லவனுங்க!...
பின்னே?!..
பொண்ணுங்க தான்!..
சர்க்கரைப் பொங்கல்...
மத்தியான சாப்பாட்டுக்கு சர்க்கரைப் பொங்கலா?..
இது பாடித்திரியும் பறவைகள் அனைத்திற்கும் ஒவ்வொரு கவளம்..
பொண்ணுகளானாலும் பசங்களானாலும்
கூச்சலும் கும்மாளமுமான
அந்தப் பசுமையான பழையான நாட்கள்
இனி ஒரு சமயத்துக்குத் திரும்பக் கிடைக்குமா?...
ஆயிரம் தான் சொல்லுங்கள்..
இடக்கையில் டிபன் பாக்ஸை வைத்துக் கொண்டு
வலக்கை நுனி விரல்களால்
அளைந்து அளைந்து உண்டு மகிழ்ந்த சந்தோஷம்
தலை வாழை இலையில் பலவித பட்சணங்களுடன்
உண்ணும்போது கிடைப்பதேயில்லை!...
மலரும் நினைவுகள் எல்லாருடைய மனங்களிலும்
என்னென்ன உணர்வுகளுட்ன் மலருமோ தெரியவில்லை!..
மனம் வறண்டு கிடக்கும் சமயங்களில்
நாவூறும் நினைவுகளே தேன்மழை...
மனம் வறண்டு கிடக்கும் சமயங்களில்
நாவூறும் நினைவுகளே தேன்மழை...
அந்த மகிழ்ச்சி ஒன்றே மனங்களில் நிறையட்டும்!..
வாழ்க நலம்
ஃஃஃ
ஆஹா... மதிய உணவாக விதம் விதமாக.... இப்படி எடுத்துச் சென்று அனைத்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட நாட்கள்.... அலுவலகத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
குட்மார்னிங். வகைவகையாக உணவுகளை லன்ச் பாக்சில் கண்டதும் நாவூறுகிறது...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குவறண்டு கிடக்கும் மனங்களில் நாவூறும் நினைவுகளே தேன்மழை...
வாழ்க நலம்...
வத்தக்குழம்பு சாதம்.... சுட்ட அப்பளம்... என்கணக்கில் இது முதலிடம் பெறுகிறது. காலை சமைத்து, மதியம் உண்கையில் சுவை கூடியிருக்கும்.
பதிலளிநீக்குஉண்மை.. உண்மை.. இதை அடித்துக் கொள்ள வேறொன்றும் இல்லை...
நீக்குமலரும்நினைவுகள் என்றுமே சுவாரஸ்யம். நீங்கள் தஞ்சையில்தான் படித்தீர்களா? எந்த ஸ்கூல்?
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குமுதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே தஞ்சையில்..
அரண்மனைக்குள் இருக்கிற பீட்டர்ஸ் பள்ளியில்..
அதன்பிறகு - தந்தைக்கு அரசுப் பணியில் கிராமப் புறத்திற்கு மாற்றல் ஆனதால் பல ஊர்களிலும் படிப்பு.. எல்லா ஊர்களும் நினைவில் இருக்கின்றன...
ஒன்பது முதல் பன்னிரண்டு வரை - பசுமை கொஞ்சும் பந்தநல்லூர்!...
இன்னொரு சமயம் பேசுவோம்.. வேலைக்குக் கிளம்ப வேண்டும்..
வாழ்க நலம்...
எங்கள் ப்ளாக்கில் என் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன் இந்த பாடலை பாடி.
பதிலளிநீக்குஇங்கு வந்தால் அந்த பாடல் தலைப்பு!
பத்தாவது படிக்கும் போது 11 வது மாணவிகளுக்கு பிரிவு உபசார விழாவிற்கு எல்லோரும் பாடும் பாடல்.
டிபன் பாக்ஸ் உணவுகள் மிக அருமை.
இன்று என்ன ஆவலுடன் டிபன் பாக்ஸ் திறக்கபடும்.பேச்சு பேச்சு டிபன்பாக்ஸை அளைந்து அளைந்து கொண்டு இருக்கும் கைகள் இடை இடையே வாயுக்குள் உணவு.
இனிமையான காலங்கள்.
என் தோழிகள் நினைவுக்கு வருகிறார்கள்.
அருமையான பதிவு.
நானெல்லாம் பள்ளி நாட்களில் மோர் சாதம், (கவனிக்க, தயிர் சாதம் இல்லை) மாவடு தவிர்த்து வேறே எதுவும் கொண்டு போனதில்லை. எப்போவானும் ரசம் சாதம், ஏதேனும் காய் அல்லது கூட்டு! ஒரே ஒரு முறை வெண் பொங்கல் கொண்டு போயிருக்கேன். எப்படி நினைவு இருக்குன்னா, அன்னிக்கு என்னோட சாப்பாடுச் சம்புடத்தைப் பார்த்த பெண்கள் செய்த கேலியும் ஆசிரியையின் ஆச்சரியமும்! எட்டாம் வகுப்பில் என நினைவு.
பதிலளிநீக்குஆஹா அங்கிட்டு டிபன் பாக்ஸ்னு கதைனா பிள்ளைங்க கொண்டு வந்தது எல்லாம் இங்கிட்டு பரப்பிப் இப்படி உசுப்பேத்திவிடுவாங்காளாக்கும் ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குபசுமையான நினைவுகள் தான் அதாவது நட்பு...எங்கள் வீட்டில் பழைய சாதம் அதுவும் நீர்க்கத்தான் தந்துவிடுவார்கள் அதனால் பிள்ளைகள் என்னுடன் சாப்பிட விரும்ப மாட்டார்கள். நான் தனியாகத்தான். அப்புறம் கொண்டு வருவதையே விட்டுவிட்டேன்...சாதத்திற்காக அல்ல....எனக்கு அதில் தயக்கம் கிடையாது ஆனால் நட்புகள் என்னோடு வருவதில்லையே என்ற வருத்தத்தில். பகிர்ந்து உண்ணவும் முடியவில்லையே என்ற வருத்தத்தில்....நட்புகள் எனக்கு ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொண்டு தருவார்கள். மறக்க முடியாத நாட்கள்...
கீதா
கீதா ரங்கன்.... என் நினைவலையைக் கிளப்பி விட்டுவிட்டீர்கள்.... நல்ல வேளை நிறைய காலம் ஹாஸ்டல் வாழ்க்கை எனக்கு
நீக்குGeetha தெரிந்திருந்தால் நான் உங்களை அழைத்துக் கொண்டிருப்பேனே.
நீக்குமூன்று குழந்தைகளுக்கும் கட்டும் சாப்பாடு உங்களுக்கும். விதம் விதம் இல்லை. கலந்த சாதமும்.கரேமதும் தான்.
வத்தக் குழம்பு சுட்ட அப்பளம் ஆஹா நாவில் தண்ணீர்! என் சாய்ஸ் முதல் சாய்ஸ் அது. இங்கு நீங்க கொடுத்திருப்பவை எல்லாமே ரொம்பப் பிடித்தவை....(எனக்கு எதுதான் பிடிக்காது?!! ஹிஹிஹிஹி.....என்னவோ தெரியலை எல்லாமே பிடித்திருக்கிறது!!)
பதிலளிநீக்குசர்க்கரைப் பொங்கல் "பாடித்" திரியும் பறவைகளுக்குத்தானோ!!!! ஹா ஹா ஹா ஹா
நான் கொஞ்சமே கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்..
எல்லாமே டேஸ்ட் பட்ஸைக் கிளப்பிவிட்டுவிட்டன..
கீதா
வித வித டிபன் பாக்ஸ். ம்.. நான் பள்ளிக் காலங்களில் தயிர் சாதம், எலுமி ஊறுகாய் தவிர எதையும் கொண்டுபோனதில்லை. கல்லூரியிர் ஓரிரு வருடங்கள் கொண்டுபோயிருக்கிறேன், பகிர்ந்துகொண்டதில்லை.
பதிலளிநீக்குஇட்லி குருமா காம்பினேஷன் உதைக்குது. எனக்கு ஆல் டைம் ஃபேவரைட், தோசை, மிளகாய்ப்பொடி, ஆடைத் தயிர், அதன்மேல் அடுத்த தோசை.... என்ற காம்பினேஷன்.
எங்கள் பிளாக்கில்
பதிலளிநீக்குதங்கள் கதை படித்தேன்
அருமை
பதிவு எனது நினைவுகளையும் மீட்டி விட்டது ஜி.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை...
உண்மையே மதிய உணவு ஒரு பெரிய சபையாகக் கூடும். ஜாதி,மதம் பேதம் ஒன்றும் கிடையாது.
பதிலளிநீக்குதங்கம் சிக்கன், நான் ரசம் சாதம் அவசரப் பொரியல், இல்லை தயிர் சாதம் ,கிடாரங்காய்.,ஷாந்தி அமிர்தமான இட்லியும் சட்டினியும்,
மெஹருன்னிசா நல்ல புலாவ் கொண்டுவருவாள்.
சூசை மேரிக்கு சாப்பாடே வராது. ஒரு இட்லி, கொஞ்சம் புலவ், என்று ஒப்பேத்திவிடுவோம்.
எங்கே இருக்கிறார்களோ என் தோழிகள்.
இனிய நினைவலைகளுக்கு என்றும் நன்றி துரை செல்வராஜு.
பள்ளிக்காலங்கள் மறக்க முடியாதவைதான்..
பதிலளிநீக்குஅதுசரி உந்தச் சாப்பாடெல்லாம் துரை அண்ணன் இப்போ செய்ததோ உங்கு?
அன்பின் தீர்க்கதரிசி..
நீக்குஇட்லி வடையைத் தவிர மற்ற சாப்பாடெல்லாம் நான் செய்ததே...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...