நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 11, 2018

முடிவில்லாதவன்


முதலில் ஆதவன்
முதலில்லாதவன்!..
முடிவில் ஆதவன்
முடிவில்லாதவன்!..

அறிவில் ஆதவன் 
நான் என்றான் - மனிதன்..
ஓசோனைத் துளைத்தான்..
உலகையும் தொலைத்தான்!..

அறிவில்லாதவன்
அக்னி முடிந்ததாய்
அறிக்கை விட்டான்
அட ... ஆணையிட்டான்..


அறிவில் ஆதவன்
அஞ்சுவனோ...
மட மானிடனை
அவன் கொஞ்சுவனோ?..

அகன்றான் இல்லை
ஆதவன்... அனல் 
குறைந்தான் இல்லை
ஆதவன்!..


பனிமலை துகளாய்
சரிகின்றது...
மணல்வெளி நடுங்கி
விரிகின்றது...



முகில் திரள் நொறுங்கி
விழுகின்றது...
கடல் அலை நூறடி
எழுகின்றது...


காரணம் இதற்கென
எந்த இனம்?..
கையறு நிலையில்
மனித இனம்..

படித்தான் அதனால் 
வாழ்வானது - உலகம்
படித்தவன் அவனால் 
பாழானது!..


அடுத்ததை அறிந்தது
மனித மனம்..
ஆயினும் திருந்தலை
மனித இனம்!...



முதலில் ஆதவன்..
முடிவில் ஆதவன்!..
உலக முடிவில்
எழுவான் ஆதவன்!..
***

அன்பின் ஸ்ரீராம் அவர்கள் 
எங்கள் Blog ன்
இன்றைய பதிவில் 
அனல் தகிக்கும் ஆதவனைப் பற்றி
கவிதை நாடகம் போல் எழுதியிருந்தார்...

அனல் தகிக்கும் ஆதவனின் தாக்கத்தால்
விளைந்தது ஒரு கவிதை..
அதுவே இன்றைய பதிவு...

இயற்கையை வாசிப்போம்
இனிமையாய் அதை சுவாசிப்போம்!..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!..
ஃஃஃ

23 கருத்துகள்:

  1. வரகவி கவிதை அருமை.
    ஆதவன் தாக்கத்தால் விளைந்த கவிதையும் படங்களும் அருமை.
    நான் என் தளத்தில் கவிதைக்கு ஒருநாள் ஒதுக்க கேட்டுக் கொண்டேன் உங்களை, அது செயலுக்கு வந்து விட்டதே!
    வாழ்க வையகம்!
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அன்றைக்கே தங்கள் பதிவில் சொல்ல எண்ணினேன்..

      வரகவி என்பதெல்லாம் அதிகம்..
      அதற்கு கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கின்றது...

      ஆனாலும் எப்படியோ ஓடிக்கொண்டிருக்கின்றது...

      வாழ்க வையகம்..
      வாழ்க வளமுடன்!..

      நீக்கு
  2. அன்பின் ஜி
    படங்களோடு சொல்லிச்சென்ற கவிதை வரிகள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இயற்கையை வாசிக்கவேண்டிய நேரம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கவிதையையும் வார்த்தைகளையும் மிகவும் ரசித்தேன். உங்களுக்கு இருக்கும் வேலைச் சூழலில் இதற்கென அவகாசம் மற்றும் மனநிலை கிடைப்பது அரிது. நல்ல முயற்சி. பாராட்டுகள்.

    எனக்கு அங்கு இருக்கும்போது எப்போதுமே ஒரு எண்ணம் தோன்றும். கெரசின் ஏசி வந்து 60+ வருடங்கள்தான் ஆகின்றன. அதற்கு முன்னால் பாலைவனத்தில் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று. அப்போதும் மனித இனம் நன்றாகத்தான் வாழ்ந்தது. துபாயில் மன்னர் பரம்பரையின் மாளிகை (70 வருடங்களுக்கு முந்தையது... சாதாரண மண் குழைத்து வனைந்த இடங்கள், அதில் ஒரு கிணறு, மேலே காற்று வருவதற்கு அரபுதேசத்திற்கே உரித்தான சாளரம் போன்று சாதாரண வீடு/குடிசை) - அதிலும் அவர்கள் வாழ்ந்திருந்திருக்கிறார்கள். ஆனால் ஏசி இல்லாமல் அங்கு ஒரு மக்களுக்கும் இப்போது பொழுது விடிவதில்லை. இதற்கு யார் காரணமாக இருக்கமுடியும்? நாம்தான். ஏசி உபயோகப்படுத்தி ஓசோனில் ஓட்டை இட்டு, சூடு அதிகமாக இருக்கிறதென்று, இன்னும் வலிய ஏசியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்....

    மிகவும் ரசித்த ஓரளவு சந்தத்துடன் கூடிய கவிதை. நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் உட்பட்ட அந்தக் காலத்து கட்டிடக்கலையில் ஏ ஸி ஏ தேவை இல்லாத அளவுக்கு வடிவமைத்திருந்தார்கள். உயர்ந்த மதில்கள். ஆங்காங்கே அதில் திறப்புகள்.. இப்போதும் கோவிலில் இருக்கும் இயற்கையான குளுமை ​நம் இல்லங்களில் இருக்காது. விஞ்ஞானம் என்கிற பெயரில் நவீன மனிதன்தான் அஞ்ஞானம் பிடித்து அலைகிறான்.

      நீக்கு
    2. அன்பின் நெ.த..

      தாங்கள் சொல்வது உண்மையே...

      40/50 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து கப்பல்களில் தண்ணீரைக் கொண்டு வந்து இறக்கியிருக்கின்றார்கள்..

      இந்த நாட்டின் பழைய ஐந்து தினார் நோட்டில் நம்ம ஊர் திரிகைக் கல்லின் படம் அச்சிடப்படிருக்கும்..

      அன்றைக்கு கோதுமையை அரைத்து ரொட்டி சுட்டுத் தின்று
      ஏசி இல்லாமல் சுத்தமான நீர் இல்லாமல் -
      ஆனால் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கின்றார்கள்...

      இன்றைக்கு எல்லாமும் சுத்தமாகக் கிடைக்கின்றன...
      அந்த அளவுக்கு மருத்துவமனைகளும் பெருத்து விட்டன...

      இந்த சூழ்நிலை பிடிக்காவிட்டால் வெளி நாட்டினர் - தமது நாட்டுக்குத் திரும்பி விடலாம்..

      கால சூழ்நிலை பிடிக்காவிட்டால் இவர்களுக்குப் போக்கிடம் ஏது?..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    3. அன்பின் ஸ்ரீராம்..

      >>> விஞ்ஞானம் என்ற பெயரில் நவீன மனிதன் தான் அஞ்ஞானம் பிடித்து அலைகிறான்.. <<<

      உண்மைதான்.. ஆனாலும் நம்மால் அதிலிருந்து முற்றிலுமாக மீள முடியாத மாதிரி அல்லவா ஆகிவிட்டது..

      அல்லது அந்த சூழ்நிலைக்கு ஆக்கி விட்டார்கள்..

      நீக்கு
  5. மிக அருமை. கண்ணுக்குத் தெரியும் ஒரே கடவுள் ஆதவன்! கடவுள் தண்டிப்பாரா எனில்? ஆம்! ஆதவனாகிய கடவுள் நிச்சயமாய்த் தண்டிப்பார்/தண்டிக்கிறார்/ தண்டித்திருக்கிறார் சுட்டெரிப்பதன் மூலமும், மழையை உரிய நேரத்தில் அனுப்பாமலும், அதிக வெள்ளத்தையும் வறட்சியையும் உண்டாக்கியும்! எனினும் நாம் திருந்தவில்லை! திருந்துவோமா? சந்தேகமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      சூர்ய மூர்த்தியை - லோக சாக்ஷி என்கின்றனர்.
      ஏனெனில் அவன் ஒருவனே எல்லாம் அறிந்தவனாக கண் அறியும் கடவுளாக விளங்குபவன்..

      மானுடம் திருந்த வேணும்..
      அதற்கு எல்லாம் வல்ல இறைவன் சித்தம் கொள்ள வேண்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆஆஆ கவித கவித அதுவும் ஆதவன் கவித.. அழகாக சொல்லிட்டீங்க.. அடுத்து நிலவுக் கவிதையும் எழுதோணும் துரை அண்ணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      நிலவுப் பாட்டு.. எழுதி விடலாம்..

      மகிழ்ச்சி .. நன்றி..

      நீக்கு
  7. படங்களும் கவிதை வரிகளும் அழகு& அருமை ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமை துரை ஸார். வெயில் வரும் காரணம் என்னவென்றும் ஆராய்ந்து வரி வரியாய் சொடுக்கி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      விடியற்காலை 3.30க்கு பதிவைப் படித்து விட்டு அறைக்குத் திரும்பி -
      கணினியில் வாசித்த போது தான் கவிதை என்று தோன்றியது..

      எல்லாம் உங்களது கை வண்ணம் தான்!..
      தங்கள் பதிவுக்கு நன்றி..

      நீக்கு
  9. படிக்கும் பொது சில வரிகள் நம்மை வேறு சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லும். பார்க்கும் ஓவியங்கள், படங்களும் அப்படிதான். இன்று எங்கள் பதிவு அப்படி ஒரு அதிருஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது என்று தெரிகிறது. நன்றி துரை ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      நீங்கள் சொல்வது உண்மைதான்..

      சில படங்களும் நம்மை வேறு ஒரு நிலைக்கு இட்டுச் செல்கின்றன..

      கடந்த ஞாயிறன்று(7/10)பூக்களின் படங்களைப் பார்த்ததும் இப்படித்தான் -

      பூக்கள் புலரியில்
      பூத்திருக்கும்..

      என்று - சிறு கவிதை ஒன்றை எழுதியிருந்தேன்...
      அதைத் தாங்கள் இன்னும் கவனிக்கவில்லை!)
      எல்லாம் தங்களால் கிடைக்கப் பெற்றதே...

      மகிழ்ச்சி .. நன்றி...

      நீக்கு
  10. அனல் தகிக்கும் ஆதவனின் தாக்கத்தால் விளைந்த கவிதை குவைத்திலும் விளைவு தெரிகிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..