பல்வேறு திருக்கோயில்களில் நடைபெற்ற
வைபவங்களின் திருக்காட்சிகளைப் பகிர்ந்திருந்தேன்...
நிறைய படங்கள் - நண்பர்கள் அனுப்பியிருந்தவை..
அவற்றுள் சிறந்தவற்றைத் தேர்வு செய்து
நமது தளத்தில் வெளியிட்டது போக இன்னும் இருக்கின்றன...
அவற்றை வேறொரு சமயம் பார்க்கலாம்..
எனினும் -
தஞ்சை பெரியகோயிலில்
நவராத்திரி முதல்நாள் தொட்டு விஜயதசமி வரையிலும்
ஸ்ரீ ப்ரஹந்நாயகி அம்பிகைக்கு செய்விக்கப்பெற்ற
அலங்காரங்களை இன்றைய பதிவில் வழங்குகின்றேன்...
அத்துடன் மற்றும் சில கோயில்களின்
அலங்காரத் திருக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன..
இன்றைய பதிவிலுள்ள படங்களை வழங்கியவர்
தஞ்சை திரு. ஞானசேகரன் அவர்கள்..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
ஸ்ரீமனோன்மணி |
ஸ்ரீ மீனாக்ஷி |
சதஸ் - தர்பார் |
ஸ்ரீ காயத்ரி |
ஸ்ரீ அன்னபூரணி |
ஸ்ரீ கஜலக்ஷ்மி |
ஸ்ரீ சரஸ்வதி |
ஸ்ரீ ராஜேஸ்வரி |
ஸ்ரீ மகிஷாஸுரமர்த்தனி |
ஸ்ரீ காமாக்ஷி |
தாமம் கடம்பு படை பஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளிசெம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே.. (73)
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளிசெம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே.. (73)
-: அபிராமி அந்தாதி :-
ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில் - தஞ்சை |
ஸ்ரீ துர்கை ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில் |
ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் மேலராஜவீதி, தஞ்சை |
ஸ்ரீ ப்ரசன்னவேங்கடேசப்பெருமாள்., ஐயங்கடைத்தெரு - தஞ்சை. |
ஸ்ரீ முத்துமாரியம்மன், மேலராஜவீதி, தஞ்சை.. |
ஸ்ரீ முத்துமாரியம்மன், புன்னைநல்லூர் - தஞ்சை.. |
சந்த்ர சடாதரி முகுந்த சோதரி துங்கசல சுலோசன மாதவி
சம்ப்ரம பயோதரி சுமங்கலி சுலக்ஷணி சாற்றருங் கருணாகரி
அந்தரி வராஹி சாம்பவி அமரதோத்ரி அமலை ஜகஜால சூத்ரி
அகிலாத்ம காரணி விநோதசய நாரணி அகண்டசின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரைராச சுகுமாரி கௌமாரி உத்துங்க
கல்யாணி புஷ்பாஸ்திராம் புயபாணி தொண்டர்கட்கருள் சர்வாணி
வந்தரி மலர்ப்பிரமராதி துதிவேதஒலி வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே..
-: அபிராமிபட்டர் :-
***
எங்கும் நலம் வாழ்க
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ
எங்கும் நலம் வாழ்க
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ
காலை வணக்கம். திரு ஞானசேகரன் அவர்களுக்கும் உங்களுக்கும் எங்கள் நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குவணக்கம்.. தங்களுக்கு நல்வரவு..
வாழ்க நலம்.
கொங்கணேஸ்வரர் கோவில் ஸ்ரீ துர்க்கை... பழைய நினைவுகள் வருகின்றன. அப்பா ஒரு தாயத்து கட்டி இருந்தார். அதை வெள்ளிக்கிழமைகளில் கழற்றி எங்களிடம் தருவார். மாலை ஆனதும் இக்கோவில் சென்று துர்க்கை அம்மன் சன்னதியில் வைத்து அர்ச்சனை செய்து கொண்டுவருவோம்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குசில கோயில்களில் பிரம்பினை வைத்து எடுப்பார்கள்...
மேலதிக செய்திகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நன்றி ஐயா
பதிலளிநீக்குதங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குஒவ்வொன்றும் சிறப்பு...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அம்மன் தரிசனம், கருட சேவை த்ரிசனம், பெருமாள் தரிசனம் அனைத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அனைத்து படங்களும் அருமை. அனுப்பிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.
தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குவாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
அம்மன் படங்களையும் பெருமாள் படங்களையும்
நீக்குபதிவில் வைக்கும்போது தோன்றவில்லை..
அன்புத் தங்கையின் வைபவப் படங்களையும்
ஆருயிர் அண்ணனின் வைபவப் படங்களையும் -
ஒரே பதிவில் காணும்போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றது...
வாழ்க நலம்..
படங்கள் அனுப்பிய நண்பருக்கு எமது நன்றிகளும்...
பதிலளிநீக்குஅன்பின் ஜி...
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
அனைத்து தரிசனங்களும் அருமையாக இருந்தது. நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் அருமை அது பற்றிய கருத்துகளும்பேஷ் பேஷ்
பதிலளிநீக்குமிக மிக அருமையான படங்களுடன் அம்பாளையும் பெருமாளையும் தரிசனம் செய்தது மனம் நிறை மகிழ்வு. அலங்காரம் செய்தவர்களுக்குத் தான் எத்தனை கலை நயம்.
பதிலளிநீக்குபடங்களை அனுப்பித் தந்தவர்க்கும்,பதிவிட்ட உங்களுக்கும்
மனம் நிறை நன்றி.
தேவியரின் வருகை மனதிற்கு நிறைவு. அருமையான தரிசனம்.
பதிலளிநீக்கு