அக்கா... அக்கா!..
வாம்மா.. தாமரை.. வா.. வா!..
என்னக்கா சேதி!... உடனே வரச் சொன்னீங்க?..
இன்னைக்கு ஞானசம்பந்தர் குருபூஜை... கோயில்ல விசேஷம்...
அதான் உன்னையும் கூட்டிட்டு போகலாம்..ன்னு!...
எங்கே அத்தான் பிள்ளைகள் எல்லாம்?..
அவங்க முன்னாலேயே போய்ட்டாங்க...ம்மா!..
முன்னால போய் என்ன செய்யப் போறாங்க?...
இந்த பசங்க எல்லாம்
சிவனடியார் திருக்கூட்டம்...ன்னு ஒன்னு சேர்ந்திருக்குதுங்க....
கோயில்ல விசேஷம் ..ன்னா தோரணம் கட்றது..
அங்கே இங்கே சுத்தம் செய்றது.. பிரசாத விநியோகம் செய்றது..ன்னு
ஏகப்பட்ட வேலைகள்... ஏதோ அவங்களுக்கு ஆர்வமா இருக்கு...
ஓ.. பரவாயில்லையே!... அதுசரி.. அக்கா..
நான் ஒன்னு கேக்கட்டுமா?..
கேளேன்!...
அந்தக் காலத்துல அவங்க.. யாரு ..என்ன பேரு சொன்னீங்க?..
ஞானசம்பந்தர்.. திருஞானசம்பந்தர்!..
திருஞானசம்பந்தர் பொறந்தாங்க... சாமிகிட்ட பால் குடிச்சாங்க...
சாமி பாட்டெல்லாம் பாடுனாங்க... சரி... இத்தனை வருசம் கழிச்சும்
அவங்களைக் கொண்டாடி கும்பிட்டுக்கிட்டு!...
இரு..இரு.. தாமரை.. ஞானசம்பந்தரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?..
அக்கா... தப்பா நினைக்காதீங்க!..
எனக்கு அவங்களப் பத்தி விவரமா தெரியாதுக்கா..
நீங்க கூப்பிட்டீங்களே..ன்னு வந்தேன்....
பூஜை....ல தேவாரம் எல்லாம் பாடுறே!... - வியப்புடன் கேட்டாள் - அக்கா...
ஆமாங்கா...
இந்த ஆன்மீக பத்திரிக்கைகள்..ல வர்றது ஒன்னு ரெண்டு..
அத வச்சிக்கிட்டுத் தான் நான் பாடுறேன்.. மத்தபடி,
உண்மையான வரலாறு..ன்னு எதுவும் தெரியாது..
கடவுள் வாழ்த்துப் பகுதியில -
தேவாரப் பாட்டு பள்ளிக்கூடத்தில சொல்லித் தரலையா!...
இருக்கும்.. நீங்களே படிச்சுக்குங்க.. ந்னு சொல்லிட்டு டீச்சர் போய்டுவாங்க!..
அதுக்கு அப்புறம் நாங்க எங்கே அதைப் படிச்சோம்!...
அந்த காலத் தமிழ் வாய்..ல நுழையாது..ன்னு நாங்களும் சும்மா இருந்துடுவோம்!....
அது தானே!...
ஆனா, தாத்தா அடிக்கடி பாடச் சொல்லுவாங்க....
அவங்களும் பாடுவாங்க... ஆனா புரியாது....
அதிகமா விளக்கம் கேக்கவும் பயமா இருக்கும்..
வீட்டுல.. ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருங்க.. ந்னு அதட்டல்...
போகட்டும் .. நான் ஒரு புத்தகம் தர்றேன்.. ஆதீன பதிப்பு அது!...
படிச்சுப் பாரு... அதுக்கப்புறம் ஞானசம்பந்தர் பாடின தேவாரம் படிக்கலாம்...
அக்கா.... தேவாரம் பாடுனா பணம் காசு சேரும்...
நோய் வராது... ஜூரம் போகும்... ன்னு சொல்றாங்களே...
அதெல்லாம் எப்படி..க்கா!..
உண்மை தாம்மா!... திருக்குறளை நீ நம்பறே!.. இல்லையா!..
ஆமாம்...
அதுல வள்ளுவர் என்ன சொல்றாரு!...
என்ன சொல்றாரு?...
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்...
அப்படி...ன்னு சொல்றார்... இல்லையா...
அப்படி உறுதியான நம்பிக்கையோட ஒரு பாடலையோ ஒரு பதிகத்தையோ பக்தி சிரத்தையா நாம பாராயணம் செய்றப்போ அதனோட பலன் கைமேல!...
உறுதியா சொல்றீங்களா அக்கா!...
இந்த மாதிரி பலன் அடைஞ்சவங்க எத்தனையோ ஆயிரம் பேர்..
அதையெல்லாம் வெளிக்காட்டிக்க மாட்டாங்க....
எங்க வீட்டுல சின்னாத்தா.. ன்னு இருந்தாங்க.. உனக்கு சொல்லியிருக்கேன்...
ஆமா.. சொல்லியிருக்கீங்க!...
அவங்க என்ன படிச்சாங்க... ஒன்னும் இல்லை..
ஆனா, எனக்கு காய்ச்சல் தலைவலி...ன்னா
அடுப்புச் சாம்பலை எடுத்து காளியாயி... மகமாயி..ன்னு சொல்லிட்டு
நெத்தியில பூசி விடுவாங்க.. அது அத்தோட சரியாயிடும்...
கஷாயம் கொடுப்பாங்க...ன்னு சொன்னீங்க!..
அது வேற... கஷாயம் கை கொடுக்காத நேரத்துல என்ன செய்றது?...
ஒவ்வொரு சமயத்தில எனக்கு கடுமையான வயித்து வலி இருக்கும்..
நடு ராத்திரியில டாக்டரத் தேடி எங்கே போறது?..
அவங்க தான் என்னை மடியில போட்டுக்கிட்டு விபூதி பூசி விடுவாங்க!...
..... ...... .....!..
அப்போ அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா...
சிவ சிவ ஹரனே.. ஹர ஹர சிவனே!... அவ்வளவு தான்!..
இதுக்கு பெரிய உபதேசம் எல்லாம் தேவையில்லை...
மனசு சுத்தம் இருந்தாப் போதும்!...
இதைத் தான் -
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினைஅடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே...
- அப்படின்னு, ஞானசம்பந்தர் சொல்றாங்க...
தும்மல் இருமலுக்கு சரி.. பெரிய நோய் ஏதும் வந்தா!?.. இது சரியாகுமா?...
ஆகியிருக்கு....
எங்கே!?...
எத்தனையோ ஆயிரம் இருக்கு.. ஆனாலும்,
அங்கே இங்கே..ன்னு போக வேண்டாம்...
எங்க அண்ணாச்சி அவுங்களைத் தெரியுமில்லே!...
ஆமா.. வலைத்தளத்தில எழுதுறாங்களே!..
அவங்க தான்... இந்த வருசம் ஆரம்பத்தில அவங்களுக்கு
சட்டுன்னு.. நரம்பு தளர்ச்சியாகி கைகால் அசைக்க முடியலை...
துணைக்கு யாரும் இல்லாத அந்த சமயத்தில -
அவங்களுக்கு கை கொடுத்தது - தேவாரமும் பிரார்த்தனையும் தான்!...
..... ..... ..... .....!..
இப்போ தான் ஊருக்கு வந்துட்டுப் போனாங்க....
டாக்டர் கிட்ட காட்டுனாங்களாமா!..
ம்.. இயற்கை மருத்துவம் தான்... உடம்புக்கு ஒன்னும் இல்லை...ன்னு சொல்லிட்டு தைலம் கொடுத்திருக்காங்க... ஆனா,
அதுக்கு முன்னாலேயே அவங்க குலதெய்வம் என்ன கொடுத்தது தெரியுமா!..
என்ன அது!?..
தீர்த்தமும் திருநீறும் அபிஷேக எண்ணெய்யும் தான்!...
இது எல்லாருக்கும் பொருந்துமா!?...
நம்பிக்கை வைக்கிறவங்களுக்கு நடராசன்....ன்னு சொல்வாங்க...
அவங்க அவங்க விதிப்படி ஆகும்... இருந்தாலும்,
வெல்லத்தை வாயில போட்டுக்கிட்டா தான் அருமை தெரியும்!...
நம்பிக்கை வைக்கிறவங்க கிட்ட நடராசன் போறதில்லை...
நம்பிக்கை வைக்காதவங்க கிட்ட யமராசன் போறதில்லை...
இதுக்கு என்ன சொல்றீங்க!..
யமராஜன் போறது சர்வ நிச்சயம்...
நடராஜன் போறதைப் பார்க்க முடியலை தான்...
நீ சொல்றது நிஜம்.. ஆனாலும்,
இதுக்கு நெறைய விளக்கம் இருக்கு..
இப்போ கோயிலுக்கு நேரம் ஆச்சு!...
அக்கா.. ஞானசம்பந்தர் அவங்களப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...
அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தியது ஐதீகம்...
நாடு முழுதும் நடந்து பக்தி நெறியை வளர்த்தார்...
திருக்குலத்தவரான திருநீலகண்ட யாழ்ப்பாணரையும்
அவரோட மனைவி மதங்க சூளாமணியையும்
கடைசி வரையில் தன்னுடன் பேணிக்காத்து ஆதரித்தார்...
அப்பர் ஸ்வாமிகளோட சேர்ந்து
திருவீழிமிழலை..ல மக்கட்பணி செய்தார்..
திருமருகல்....ல -
ஏழை வாலிபனை மரணத்திலிருந்து மீட்டு அவனை நம்பி வந்த
பணக்கார வீட்டுப் பெண்ணோடு திருமணம் செய்து வைத்தார்...
மயிலாப்பூர்...ல -
சிவநேசஞ்செட்டியார் மகள் பூம்பாவையை உயிருடன் மீட்டுக் கொடுத்தார்..
மதுரை...ல -
சைவத்தை மீட்டு கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கினார்...
பெரியோர்களுடைய விருப்பத்துக்காக
ஞானசம்பந்தர் திருமணக் கோலம் கொண்டார்...
ஸ்தோத்திர பூர்ணாம்பிகா..ன்னு பொண்ணோட பேரு...
மாங்கல்யதாரணம் ஆனதும்
எம்பெருமானும் அம்பிகையும் அருட்பெருஞ்ஜோதியா காட்சி கொடுத்தாங்க...
அந்த ஜோதி மயத்தில
தன்னோட மனைவி கையப் பிடிச்சுக்கிட்டு ஐக்கியமானார்...
ஞானசம்பந்தப் பெருமானோட எப்பவும் இருந்த
திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவருடைய மனைவி மதங்க சூளாமணியார், திருநீலநக்கர், முருக நாயனார் ஆகியோரும் சிவசக்தியோட ஐக்கியம் ஆனாங்க...
அந்த நேரத்தில -
அருளப்பட்ட திருப்பதிகத்தோட திருப்பாட்டு தான் இது...
மனம் உருகி சொல்றவங்களை
நல்ல நெறியில் செலுத்துவது நம சிவாய மந்திரம்...
நாம நல்ல வழியில நடக்க ஆரம்பிச்சுட்டா
நம்மைச் சுற்றி நடக்கிறதும் நல்லதாகவே நடக்கும்...
நம்மைச் சுற்றி நடக்கிறதெல்லாம் நல்லது தான்....ன்னா
அதை விட வேறென்ன வேணும் சொல்லு!..
அக்கா.. நல்லா தான் சொல்றீங்க!...
தாமரை... இல்லறத்தார் நாளும் பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இது..
மறந்திடாம மனசுல வைச்சிக்க....
சரிங்க அக்கா!...

ஞானசம்பந்தர் - திருமணக்கோலம்.. |
ஞானசம்பந்தர் திருமணக் கோலம் கொண்டார்...
ஸ்தோத்திர பூர்ணாம்பிகா..ன்னு பொண்ணோட பேரு...
மாங்கல்யதாரணம் ஆனதும்
எம்பெருமானும் அம்பிகையும் அருட்பெருஞ்ஜோதியா காட்சி கொடுத்தாங்க...
அந்த ஜோதி மயத்தில
தன்னோட மனைவி கையப் பிடிச்சுக்கிட்டு ஐக்கியமானார்...
ஞானசம்பந்தப் பெருமானோட எப்பவும் இருந்த
திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவருடைய மனைவி மதங்க சூளாமணியார், திருநீலநக்கர், முருக நாயனார் ஆகியோரும் சிவசக்தியோட ஐக்கியம் ஆனாங்க...
அந்த நேரத்தில -
அருளப்பட்ட திருப்பதிகத்தோட திருப்பாட்டு தான் இது...
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நம சிவாயவே!..
நல்ல நெறியில் செலுத்துவது நம சிவாய மந்திரம்...
நாம நல்ல வழியில நடக்க ஆரம்பிச்சுட்டா
நம்மைச் சுற்றி நடக்கிறதும் நல்லதாகவே நடக்கும்...
நம்மைச் சுற்றி நடக்கிறதெல்லாம் நல்லது தான்....ன்னா
அதை விட வேறென்ன வேணும் சொல்லு!..
அக்கா.. நல்லா தான் சொல்றீங்க!...
தாமரை... இல்லறத்தார் நாளும் பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இது..
மறந்திடாம மனசுல வைச்சிக்க....
சரிங்க அக்கா!...
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே...(3/24)
இன்று வைகாசி மூலம்..
திருஞானசம்பந்தர் குருபூஜை..
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ
ஆஜர்! துரை அண்ணா. ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ....ஹா ஹா ஹா ஹா கர் சத்தம் வருமே!!!
பதிலளிநீக்குகீதா
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் காதடைக்குது நேக்க்கு:)) துரை அண்ணன் கொஞ்சம் மெதுவாக் கத்தச் சொல்லுங்கோ:) இங்கே ஒரு சுவீட் சிக்ஸ் ரீன்ன் நித்திரை கொள்ளுதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பொம்பிளைப்பிள்ளைக்கு அடக்கொடுக்கம் வாணாம்ம்???:)) ஓவரா சவுண்டு விட்டுக்கொண்டு:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ இப்போ எதுக்கு கீதா கல்லெடுக்கிறா..:)
நீக்குதுரை அண்ணன் கொஞ்சம் ஸ்ரெடியா நில்லுங்கோ.., மீ உங்களுக்குப் பின்னால ஒளிச்சிடுறேன்ன்ன்ன்ன்:))..
ஆமாம் எதையுமே சிரத்தையாகச் செய்தால்தான் பலன் உண்டு. நானும் பாட்டுக்கச்சேரிக்குப் போறேன் என்பது போல் எல்லோரும் சொல்கிறார்க்ளே என்பதற்காக இறைவன் பாடல்களைப் பாடித் துதிப்பதால் பயனில்லை. ஆழ்ந்து இறைவனைத் துதித்துப் பாடினால் தான்…
பதிலளிநீக்குகீதா
காதலாகிக் கசிந்து - பாடும்போதே நாவுக்கரசரின் முன்பு, ஞானசம்பந்தர் பாடுவதாக திருவிளையாடலில் வரும் பாடல் மனதில் ஒலிக்கிறது.
பதிலளிநீக்கு'மண்ணில் நல்ல' பதிகம் இதுவரை படித்ததில்லை. அர்த்தம் தேடியபோது,
வைகலும் - எப்போதும்
கண்ணினல் லஃதுறும் = கண்ணுக்கினிய
கழுமல வளநகர் - கழுமலம் என்ற அழகிய ஊர் - சீர்காழிக்கு கழுமலம் என்ற ஒரு பெயர் உண்டு, சங்ககாலத்தில். இதுபோல சேர நாட்டிலும் ஒரு கழுமலம் என்ற பெயருடைய ஊர் உண்டு. இந்தப் பாடலில் சீர்காழி குறிப்பிடப்படுகிறது.
'மண்ணில் நல்ல வண்ணம்' என்ற பாடல் சைவ வீடுகளில் திருமண அழைப்பிதழில் அடிப்பார்கள். சிலர், இந்தப் பாடல், 'மண்' என்று தொடங்குவதால், மங்கலம் பொருந்திய திருமண நாளுக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும் சொல்வார்கள் (மண் என்பது தூற்றுவதை, அமங்கலச் சொல்லைக் குறிப்பதால்)
அம்மையினும் துணை ஐந்து எழுத்துமே (நமசிவாய) - அருமை, எப்போதும்போல். இன்னும் சில நாவுக்கரசர் பதிகங்களும் சேர்த்திருக்கலாம்.
நெல்லை... திருவிளையாடலில் வரும் பாடல் மனதில் ஒலிக்கிறது என்று நீங்கள் சொல்வது திரைப்படமாயின், அது தவறு. அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் திருவருட்ச்செல்வர்.
நீக்குஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீராமின் ஞாபக சக்தி பார்த்து மீ வியக்கேன்ன்ன்:))
நீக்குஎழுத்துப்பிழை ஶ்ரீராம். மனதில் திருவருட்செல்வர்தான் இருந்தது. இந்தப் பாடலைத்தொடர்ந்து "தாழ் திறவாய்" வரும்.
நீக்குநன்றி அதிரா... ஹிஹிஹிஹி...
நீக்குஅண்ணாச்சி நம்ம துரை அண்ணாதான்!! அதிரா நோட் திஸ் பாயின்ட்!!!!
பதிலளிநீக்குஅண்ணா நான் கூட சிலவற்றிற்குப் பிரார்த்தனை செய்வதில நம்பிக்கை...மருந்து எடுத்துக் கொள்ளுபவனவற்றிற்கும் கூட அது வேலை செய்யணுமே ஸோ பிரார்த்தனைதான்.
உங்கள் நரம்புத் தளர்ச்சி இயற்கை பிரார்த்தனையிலும், இயற்கை மருத்துவத்திலும் இறைவனின் திருநீரிலும் குணம் ஆகியிருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அண்ணா.
கீதா
பெரியவங்க என்ன ஜொள்ளியிருக்கினம்.. கடவுளையும் கும்பிடோணும் மருந்தையும் சாப்பிடோணும்:)).....
நீக்குஅது கீதா.. ஹீரோ வராமல் கலா அண்ணி உரையாடலில் வருவாவோ?:)... இதில் வரும் தாமரைதானே துரை அண்ணனுக்கு மச்சாள்.. ஹையோ நேக்கு எதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))...
ஸ்ஸ்ஸ்ஸ் சமயப் பதிவில கண்டபடி பேசப்படாது கீதா:).. அபச்சாரம் அபச்சாரம் வாயை மூடுங்கோ:))
நம்பிக்கை வைக்கிறவங்ககிட்ட நடராசன் போவதில்லை....நம்பிக்கை வைக்காதவங்ககிட்ட எமராசன் போவதில்லை// ஹா ஹா ஹா ஹா இது எதையோ சொல்வது போல இருக்கே!!!
பதிலளிநீக்குஆனால் இதிலும் அர்த்தங்கள் விளக்கங்கள் நிறைய சொல்லலாம்தான்....
கீதா
தப்பு தப்பு.. “நம்பிக்கை வைக்காதவங்ககிட்ட.. அதிரா போவதில்லை” இப்பூடி வரோணும்:))
நீக்குஅன்பின் ஜி
பதிலளிநீக்குஎல்லாம் நம்பிக்கையின் பலனேயன்றி வேறில்லை.
காதலாகிக் கசிந்து....அருமையான பாடல்...மனப்பாடமாயும் தெரியும் சொல்லுவதுண்டு.
பதிலளிநீக்குஎன் தோழியின் திருமணம் 5 வருடங்களுக்கு முன் நடந்தது. சைவ திருமுறைப்படி தமிழில் சைவப்பெரியோர் வந்து நடத்தினார்கள். அப்போது மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்பதையும் பாடி அர்த்தம் கூறினர். தோழியின் தந்தையும் சைவத் திருமறை கற்று அதற்கான தேர்வு எழுதி பின்னர் ஒரு சிவன் கோயிலில் இறை சேவை செய்துவந்தார். தன் பணி ஓய்விற்குப் பிறகு.
கீதா
படம் அத்தனை அழகு! பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு.
பதிலளிநீக்குகீதா
அருமை
பதிலளிநீக்குஒரு சிறு கால இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வலையுலகிற்குத் திரும்பியுள்ளேன்.
இனி தொடர்வேன்
நன்றி
பகிர்ந்த விதம் மிகவும் அருமை....
பதிலளிநீக்குநம்பிக்கை இருக்கறவங்களுக்கு நடராஜனா? நாராயணனா?
பதிலளிநீக்குஇதில டவுட்டு வேற கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)):)... ஏதோ நிறைய ஞாபகசக்தி இருக்கிறவர் மாஆஆஆஆதிரியே ஒரு பேச்சு:))..
நீக்குஹையோ கீதா பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சேவ் மீஈஈஈஈஈ:)) நல்லவேளை என் செக்கைக் காணம் இங்கின:))
யாரோ என்னை தேடினமாதிரி இருந்ததே !!
நீக்குhttps://vetstreet-brightspot.s3.amazonaws.com/5c/1d/29740f154636858af697dbc3a217/cat-hiding-thinkstock-147061125-225sm121813.jpg
நீக்குஅதிரா... நிறைய ஞாபக சக்தி இருந்தால் நான் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கப்போகிறேன்?!!!!
நீக்குஞானசம்பந்தர் குரு பூஜை பற்றிய விவரங்களை அறிந்தேன்.
பதிலளிநீக்குஇப்போதான் ஒரிஜினல் அதிரா:) பேசுகிறேன்:).. துரை அண்ணன் அக்கா தங்கை உரையாடலை வைத்தே மிக அழகாக பாடம் நடத்திட்டீங்க.. உண்மையில் நீங்க ஒரு புரொபிஸராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
பதிலளிநீக்குஏனெனில் மருத்துவம் சமயம் இப்படியான பாடங்கள் நேரடியாக சொன்னால் நித்திரை வரும், இப்படி நகைச்சுவை கலந்து கதைபோல சொன்னால் மனதில் பதிஞ்சிடும்.
ஆஹா!! அருமை நம்பினோர் கெடுவதில்லை .
பதிலளிநீக்குநாம நல்லவழியில் நடக்க ஆரம்பிச்சிட்டா !!
இப்போ உலகில் எல்லாரும் அப்படி நல்லவங்களா நடந்து நல்லதையே நினைச்சி நல்லவற்றையே செஞ்சா நினைக்கவே சந்தோஷமா இருக்கு
நம்ம நாட்டுக்கு இப்போதைய தேவை இதுதான்
நீங்க எந்த நாட்டைச் சொல்றீக?:)
நீக்குஇல்லை நாடு வேணாம் உலகத்துக்கே நல்லது :)
நீக்குமிக அருமையான கருத்துகள். இந்த மந்திரமாவது நீறு பாடலையும் மழை நிற்க வேண்டிப் பாடின சுந்தரர் பதிகமும் ஹூஸ்டனில் இருக்கும் எங்க பொண்ணுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன். நாங்க இருக்கும்போது அவளுக்கு என்ன மருந்துகள் சாப்பிட்டாலும் விடாத ஜூரம். நாங்கள் திரும்பும் நாட்களோ நெருக்கத்தில். அப்போத் தான் சட்டென்று "மந்திரமாவது நீறு" நினைவுக்கு வந்து அதைப் போட்டுக் கேட்டுக் கூடவே சொல்லச் சொல்லிட்டு ஸ்வாமிக்கு ஒரு ரூபாய் எடுத்தும் வைத்தேன். மாலைக்குள் ஜுரம் இறங்கி விட்டது. அதுக்கு அப்புறமா போன செப்டெம்பர்
பதிலளிநீக்குமாசம் குட்டிக் குஞ்சுலுவின் முதல் பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடு செய்தப்போ அங்கே ஹூஸ்டனின் மழையால் நகரமே மிதந்தது! மழை!மழை என்றால் அப்படி ஒரு மழை! பையரும் அவர் குடும்பமும் வீட்டை விட்டு வெளியேறி அக்கா வீட்டில் (எங்க பொண்ணு) வீட்டில் தஞ்சம். அந்தச் சமயம் சுந்தரரின் பதிகம் பாடிக் கேட்கச் சொன்னோம். அதற்கும் பலன் இருந்தது. "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்!" பாடல் எப்போதும் படிக்கவும் கேட்கவும் செய்வோம்.
// இந்த மந்திரமாவது நீறு பாடலையும்//
நீக்குஇந்த வரிகளை வைத்து ஒரு பி சுசீலா பகுதி பாடல் ஆரம்பமாகும். 'ஆலவாய் அழகனே... ஓம் ஐந்தெழுத்தின் அரசனே.." என்று தொடங்கும் அந்தப் பாடல் மறுபடி கேட்கத் தெடிக் கொண்டே இருக்கிறேன். கிடைக்கவே இல்லை.. அதே போல "துறவி நெஞ்சினராய்.." என்று தொடங்கி "குயில் பாடும் கும்பகோணம் கோவில் கண்டேன்" என்று டி எம் எஸ் பாடும் பாடலும் கிடைக்கவில்லை. மழை நிற்க என்ன பதிகம்?
சென்னை வெயிலில் அவனவன் பொரிஞ்சிக்கிட்டு இருக்கான். இப்போ "மழை நிற்க என்ன பதிகம்" கேள்வி தேவையா? அதை டிசம்பர்ல கேட்கக்கூடாதா?
நீக்குபேசாம அமிர்தவர்ஷினி ராக திரைப்பாடலைக் கேளுங்கள்.
அதானே
நீக்குகாய்ச்சல் வந்தால அவ்வினைக் கிவ்வினையாம் பாடல் பாடுவார்கள் காய்ச்சல் சரியாகிவிடும்.
பதிலளிநீக்குதுன்பம் போக்க மறையுடையாய் என்று ஆரம்பிக்கும் பதிகம் பாடுவார்கள்.
வெப்பத்தினால் உண்டாகும் காய்ச்சல் என்றால் மந்திரமாவது.
நீங்கள் சொல்வது போல் நம்பிக்கையுடன் திருமுறை பாடல்களை பாடினால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
நல்ல பதிவுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.