அருவமும் உருவம்ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள்ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
-: கச்சியப்ப சிவாச்சார்யார் :-
முருகப்பெருமான் சரவணத் திருப்பொய்கையில்
திருஅவதாரம் செய்தருளிய திருநாள்..
கந்தனுக்கு உகந்த திருநாட்களுள் ஒன்று..
அருணகிரி நாதர் அருளிய
திருப்பாடல்களுடன்
இன்றைய பதிவு..
***
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ...
புண்டரிகர் அண்டமும் கொண்டபகிரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெனச்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் தம்பிரானே...
-: திருச்செந்தூர் திருப்புகழ் :-
இன்றைய பதிவு..
***
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ...
புண்டரிகர் அண்டமும் கொண்டபகிரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெனச்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் தம்பிரானே...
-: திருச்செந்தூர் திருப்புகழ் :-
விழிக்கு துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.. (070)
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.. (072)
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.. (090)
மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே.. (093)
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குடிகொண்டவே.. (102)
செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந்தெதிர் நிற்பனே.. (104)
-: கந்தரலங்காரம் :-
***
ஆறிருதடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்..
-: கந்தபுராணம் :-
முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்..
ஃஃஃ
காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎன் அப்பன் முருகன் தரிசனமா? ஆஹா...
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவைகாசி விசாகமா இன்று? ஆஹா... உள்ளூர் விடுமுறை ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டுமே....
பதிலளிநீக்குஉள்ளூர் விடுமுறை.. யா!...
நீக்குகேட்டுப் பாருங்க..
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச் சதங்கையும் வரிகள் டி எம் எஸ் குரலில் காதில் ஒலிக்கிறது. அந்தப் படத்தில் முத்தைத் தரு பத்தித் திருநகை பாடல் மட்டும்மே நிறைய பேர் கேட்பார்கள். இந்தப் பாடலும் பிரபலம்.
பதிலளிநீக்குஸ்ரீராம்..
நீக்குஅருணகிரி நாதருக்கு
திருச்செந்தூரில் சிவநடனம் காட்டியருளினான் திருமுருகன்...
TMS அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது....
இந்தப் பாடலை விடியற்காலையில் பாராயணம் செய்யுங்கள்... மிகவும் விசேஷம்..
'விழிக்குத்துணை' வரிகள் சீர்காழி அவர்கள் குரலில் காதில் நினைவுக்கு வருகிறது!
பதிலளிநீக்குஸ்ரீராம்...
நீக்குஇசைமணி சீர்காழியாரின் கந்தரலங்காரத்தைக் கேட்கும்போது மனம் தன்னையே மறந்து விடும்..வேறொன்றும் செய்யத் தோன்றாது...
மிக அருமையான பகிர்வு. முருகன் தரிசனம் மனதுக்கு மகிழ்வையும் அமைதியையும் கொடுத்தது.
பதிலளிநீக்குதங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகாலையில் முருக தரிசனம் நன்று.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி .. நன்றி...
இன்று திருபரங்க்குன்றத்தில் பால்குடம் சிறப்பாய் தங்கை வீட்டில் செய்வார்கள் அவர்கள் பால்குடம்தான் முதலில் முருகனுக்கு. வருடா வ்ருடம் அழைப்பார்கள்.
பதிலளிநீக்குஇந்த வருடமும் அழைத்தார்கள், அத்தை இறந்து ஒருவருடம் நிறைவு பெறவில்லை என்பதால் மலைக் கோவில் போககூடாது. பக்கத்தில் உள்ள கோவிலில் முருகனை தரிசிக்க போக வேண்டும்.
உங்கள் தளத்தில் திருப்புகழ் பாடலை பாடி முருகனை தரிசனம் செய்து விட்டேன். பிரசாதம் சாமை பாயசம் பெற்றுக் கொண்டேன்.
நன்றி.
ஹை! இன்று என்னப்பன் முருகனைக் கண்ணாரக் கண்டேன்!!
பதிலளிநீக்குஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
எல்லோரும் இன்புற்றிருக்க அருள்வாயப்பா என்று வேண்டிக் கொள்வோம் அழகனை!!!வடிவேலனை!!!
கீதா
அருணகிரிநாதர் பாடல்கள் படிப்பதற்குள் பல்லுக்கு வலி எடுத்துவிடும். எவ்வளவு அருமையா தமிழ்ல பாடியிருக்கிறார்.
பதிலளிநீக்குமன்றாடி மைந்தன் - அர்த்தம் நோக்கவேண்டும்.
மன்றம் என்று பொன்னம்பலத்தைக் குறிக்கின்றார்...
நீக்குதில்லை அம்பலம் தொட்டு ஏனைய திருக்கோயில்களின் மன்றங்களில் ஆடல் நிகழ்த்தும் பெருமானின் மகன் முருகன்..
மன்றாடி - சிவபெருமான்..
மைந்தன் - திருமுருகன்...
நாம் ஒரு பிரச்னைக்காக மன்றாடி நிற்கிறோமே - அதுவல்ல அர்த்தம்.
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
துரை சார் - குலப்பெயராக உபயோகப்படுத்தும் 'மன்றாடியார்' (ராஜ்குமார் மன்றாடியார் போன்று) சிவபெருமான் பெயரைத்தான் குறிக்கிறதோ?
நீக்குமுருகனின் தரிசனம் ஆயிற்று. இடுகை அருமை. குக்குடம்-சேவல்.
பதிலளிநீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குவைகாசி விசாகம் சிறப்பு தரிசனம் தங்களின் பதிவின் வழி. படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குதுளசிதரன்
இனிய தரிசனம்...
பதிலளிநீக்குமுருகா சரணம்...
நன்னாளில் அருமையான தரிசனம்.
பதிலளிநீக்கு