நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 30, 2018

அழகர் தரிசனம் 2

27/4 அன்று மாலைப்பொழுதில்
அழகர் மலையிலிருந்து புறப்பட்ட
எம்பெருமான் - வழி நெடுகிலும் மக்களின்
அன்பினை ஏற்றுக் கொண்டவராக
மதுரை தல்லாகுளத்தில் எதிர்சேவை கண்டார்..

28/4 இரவு - தல்லாகுளம்
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் திருக்காட்சி நல்கினார்...

29/4 வைகறைப் பொழுதில்
ஆயிரம் பொன் சப்பரத்தில் சேவை..

இன்று அதிகாலையில்
பச்சைப் பட்டுடுத்திய கள்ளழகர்
ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எதிர்கொள்ள வைகையில் இறங்கினார்...


இன்று மதியம் ராமராயர் மண்டபத்தில்
எழுந்தருளும் எம்பெருமான்
இரவு வண்டியூரில் எதிர் சேவை கொள்கிறார்..








நாளை (1/5) பகல் 11 மணிக்கு
சேஷ வாகனத்தில் தேனூருக்கு எழுந்தருளல்..

மதியப் பொழுதில் கருட வாகனராக
மண்டூக மகரிஷிக்கு திருக்காட்சி...

இரவு முழுதும் தசாவதாரத் திருக்கோலம்...

2/5 காலை ஜகன்மோகினித் திருக்கோலம்...
இரவு பூம்பல்லக்கு....

மறுநாள் காலையில்
மக்களிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு
திருமாலிருஞ்சோலைக்குத் திரும்புகின்றார்..


கள்ளழகர் வருகிறார் - என்று,
தேரோடிய வைகைக் கரை
நீரோடித் திளைத்தது...

இனிவரும் நாளில்
கள்ளழகரின் பெருங்கருணையால்
சோணாட்டுக் காவிரியும்
நீரோடிச் செழிக்க வேணும்...

இன்றைய பதிவின்
மனதிற்கினிய காட்சிகளை
அழகிய நிழற்படங்களாக வழங்கிய
திரு. ஸ்டாலின் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
...


கள்ளழகர் திருவடிகள்
போற்றி.. போற்றி..
ஓம் ஹரி ஓம்..
ஃஃஃ

8 கருத்துகள்:

  1. தளபதி திரு. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி படங்கள் அவ்வளவு தெளிவு.

    பதிலளிநீக்கு
  2. அழகர் தரிசனம் சிறப்பாக ஆயிற்று. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. என்ன கூட்டம்!!! தரிசனம் அருமை. ஃபோட்டோக்கள் தெளிவு கலர்ஃபுல்!! ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் சிறப்பாக எடுத்திருக்கிறார்..

    இருவரின் கருத்தும்

    பதிலளிநீக்கு
  4. பச்சைப் பட்டுடுத்தி இறங்கினால் அந்த வருடம் வளமாய் இருக்கும் என்கிற நம்பிக்கை முன்னாளில் இருந்தது!

    பதிலளிநீக்கு
  5. அழகரை தரிசனம் செய்தேன். மிக அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்கல்.
    அழகர் வருகையால் எங்கும் பசுமை நிறையட்டும்.
    வளம் சேர்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..