-: சத்திய சோதனையிலிருந்து சிறுபகுதி :-
அண்ணல் காந்திஜி அவர்கள்
தம்மைச் சிறுவயதில் வழிப்படுத்திய
அரிச்சந்திர நாடகத்தைப் பற்றிக் கூறுகின்றார்..
நாடகக் குழுவினர் நடத்தி வந்த அரிச்சந்திரன் என்ற நாடகத்தைப் பார்ப்பதற்கு என் தந்தையாரின் அனுமதியைப் பெற்றேன்..
அரிச்சந்திர நாடகம் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது..
எத்தனையோ தரம் அந்த நாடகத்தைப் பார்த்திருக்கின்றேன்..
இருந்தும் சலிப்பு ஏற்பட்டதேயில்லை..
ஆனாலும்
ஒரே நாடகத்தைப் பார்ப்பதற்கு எத்தனை தடவைதான்
வீட்டில் அனுமதிப்பார்கள்?..
ஆயினும், அந்த நாடகம் சதா என் நினைவிலேயே இருந்து வந்தது..
எண்ணற்ற முறை எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருக்கின்றேன்..
அரிச்சந்திரனைப் போல எல்லாரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது?.. - என்று, அல்லும் பகலும் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கின்றேன்..
சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும் அதற்காக அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களை எல்லாம் அனுபவிப்பதுமாகிய லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது..
அரிச்சந்திரனின் கதை நடந்த சமயங்களில் உண்மையிலேயே அழுது விடுவேன்...
அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது - என்று
எனது பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகின்றது..
என்றாலும்,
என்னைப் பொறுத்தவரையில்
அரிச்சந்திரனும் சிரவணனும் வாழ்வின் உண்மைகள்..
அந்த நாடகங்களைத் திரும்பவும் இன்று நான் படித்தாலும்
முன்போலவே என் மனம் உருகிவிடும் என்பது மட்டும் நிச்சயம்..
***
பேச்சாலோ அல்லது எழுத்தாலோ
பிறரை நம் வசம் இழுக்க வேண்டும் என்ற தேவையில்லை..
வாழ்கநீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா.. நீ வாழ்க.. வாழ்க!..
-: மகாகவி பாரதியார் :-
அண்ணலின் பாதக் கமலங்களுக்கு
அஞ்சலி..
***
'பசுமரத்தாணி போல' என்று சொல்வதற்கு ஒப்பற்ற உதாரணம். சிறுவயதில் மனதில் ஏற்படும் எண்ணங்களின் தாக்கம் வாழ்வில் நம்மை நல்லமுறையில் பதித்துக்கொள்ள உதவுகிறது.
பதிலளிநீக்குஅஞ்சலிகள். சின்ன வயதிலேயே நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும்!
பதிலளிநீக்குஅனுபவமே வாழ்வை செம்மைபடுத்துகின்றன...
பதிலளிநீக்குமகாத்மா போற்றுவோம்
பதிலளிநீக்குகாந்தி. இவரைப் போன்றோரைப் பின்பற்றுவோம் என்பதைவிட சற்றாவது சிந்திப்போம்.
பதிலளிநீக்குமிக அரிய வார்த்தைகள்...
பதிலளிநீக்குவாழ்க நீ எம்மான்...
மனதில் பதிந்த மகத்தான விடயம் ஐயா!
பதிலளிநீக்குஅண்ணல் காந்தியின் நினைவோடு!
நல்ல பகிர்வு!
நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
காந்திஜி சத்திய்ச சோதனையை அவர் இறக்கும் முன் எழுதி இருந்தால் அவர் நேருவை தன்வாரிசாக நியமித்ததன் சரியான காரணம் சொல்லி இருப்பாரோ
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குவாழ்க நீ எம்மான்!
சிறு வயது நல் பழக்கம் கடைசிவரை வழி நடத்தும்.
அரிச்சந்திரன் கதை தெரியும், ஆனா எதையும் பார்க்கக் கிடைக்கவில்லை... படம் இருக்கிறது என நினைக்கிறேன்.. பார்க்கோணும்..
பதிலளிநீக்குமற்றவர்களைக் கவரோணும் அல்லது நம்வசம் இழுக்கோணும் என நினைத்து நாம் எழுதும் எழுத்துக்களோ., செய்யும் செயல்களோ நிலைக்காது, நாம் நாமாக இருக்கும்போது நம்மை விரும்பி வருவோர் தான் நம்மோடு என்றும் நிலைத்திருப்பர்.
பதிலளிநீக்குஆம்! அருமையான கருத்துகள் சிந்தனைகள்! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்லப்படுவது பெரும்பான்மையான விஷயங்களுக்கு மிகவும் பொருந்தும். நல்ல நடத்தை, சிந்தனை, செயல்கள் அனைத்தும் சிறுவயதில் ஆழ் மனதில் பதிந்தால் அது நம் மரணம் வரை நம்மை வழிநடத்தும். சில விஷயங்கள் நமக்கு நம் அனுபவம் எடுத்துரைக்கும் நாம் வளர்ந்து வரும் போது. அதுவும் மனதில் நிலைத்து நம்மை வழிநடத்தும்.
பதிலளிநீக்குநாம் அறிவுரைகள் தத்துவங்கள் என்று சொல்வதை விட நாம் உதாரணங்களாக இருத்தல்தான் நலம் என்றாலும் நாமும் மனிதர்கள் சில சமயம் வழுவுவதுண்டுதான்.
நாம் நல்ல மனதுடன் இருந்தால் மலரை நாடி வரும் வண்டுகள் போல நம்மைத் தேடி சுற்றமும், நட்பும் விரியும் தான்.
நல்லதொரு பதிவு...ஐயா/அண்ணா
கீதா: நேற்று முழுவதும் இணையம் இல்லாததால் தளம் வந்து எங்களின் கருத்தை இட முடியவில்லை அண்ணா. இரவுதான் வந்தது. அதான் தாமதமாகிவிட்டது