தமிழமுதம்
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது..(102)
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது..(102)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 20
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்..
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
*
தித்திக்கும் திருப்பாசுரம்
சிவ தரிசனம்
திருத்தலம்
திருநெல்வேலி
திருநெல்வேலி
இறைவன் - ஸ்ரீ நெல்லையப்பர்
அம்பிகை - ஸ்ரீ காந்திமதி
அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலியுறை செல்வர்தாமே..(3/92)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருஅம்மானை
திருப்பாடல்கள் 03 - 04
திருப்பாடல்கள் 03 - 04
ஸ்ரீ காந்திமதி |
அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்தருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற்கொண்டான் தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்..
வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்...
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
பாசுரத்துக்கான படம் அழகு. அதற்கே தனியாய் ஒரு கவிதை எழுதலாம் - கவிதை என்று மற்றவர்கள் அதை ஒப்புக்கொண்டால்!!!!
பதிலளிநீக்குஇதுவரை நெல்லையப்பர் கோவில் சென்றதில்லை. நெல்லையை இருமுறை தாண்டிச் சென்றதோடு சரி.
பதிலளிநீக்குஇனிய வணக்கம் சகோ..எ பி யுடன் இதையும் திறந்து..இது திறக்க தாமதம் ஆக...அங்கு வணக்கம் சொல்லி வரும் சமயம் ..இணையம் போய்விட்டது....இது அலை பேசியிலிருந்து...
பதிலளிநீக்குஅழகான தரிசனம்...ஏரி காத்த ராமர் என்பது போல்....ஏழைக் குடியானவனின் நெல்லை மழையில் இருந்து காத்த நெல்லை அப்பனையும் அம்மையும் கண்டோம்...
இனிய நாளாய் அமைந்திடட்டும்..
கீதா
படங்கள் மிக மிக அழகு
பதிலளிநீக்குகீதா
நன்றி ஐயா
பதிலளிநீக்குபாடலைக் கண்டேன், இன்பமுற்றேன். நெல்லையப்பரைப் பல முறை கண்டுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.நன்றி.
பதிலளிநீக்குநானும் இதுவரை நெல்லை சென்றதில்லை இனியெனும் எல்லா கோவிலும் செல்லவேண்டும் ஜி
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஉள்ளம் உருகுதையா!
தரிசித்தேன்!
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
மிக இனிய தரிசனம்...
பதிலளிநீக்குநெல்லக்கு சென்றிருக்கிறோம் நெல்லையப்பர் காந்திமதி அன்னையையும் தரிசித்து இருக்கிறோம் ஆனால் புகழ் பெற்ற தாமிரபரணி நதியை கண்டதில்லை
பதிலளிநீக்குபடங்கள் அழகு. நெல்லையப்பர் கோயில் சென்று இறைவனை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது.
பதிலளிநீக்கு