தமிழமுதம்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு..(212)
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு..(212)
***
சமணத் துறவியர் அருளிய
நாலடியார்
- கல்வி -
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.. (131)
***
அருளமுதம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 21
ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
ஓம் ஹரி ஓம்
***
அதிபத்தரை எம்பெருமான் ஆட்கொண்டநாள்
ஆவணி மாதத்தின் ஆயில்யம்..
அன்றைய நாளில்
அதிபத்த நாயனாரின் பொருட்டு
காயாரோகணர் நீலாயதாட்சியுடன்
கடற்கரைக்கு எழுந்தருள்கின்றார்...
அதிபத்தர் வலைவீசி
தங்க மீன் பிடிக்கும் வைபவமும்
அதன்பின் அதிபத்தர்க்கு முக்தி நலம் அருளும்
வைபவமும் நிகழ்கின்றது..
விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கு அடியேன்!..
- ஞானசம்பந்தப் பெருமான் -
***
சிவ தரிசனம்
சப்த விடங்கத் திருத்தலங்கள்
மூன்றாவது திருத்தலம்
மணிபூரகம்
மணிபூரகம்
திருநாகைக்காரோணம்
அம்பிகை - ஸ்ரீ நீலாயதாக்ஷி, கருந்தடங்கண்ணி
தீர்த்தம் - தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்
தலவிருட்சம் - மா
சுந்தர விடங்கர் - வீசி நடனம்..
பராவதரங்க நடனம் என்றும் சொல்வர்..
கடலில் அலைகள் பயில்வது போன்ற நடனம்
பராவதரங்க நடனம் என்றும் சொல்வர்..
கடலில் அலைகள் பயில்வது போன்ற நடனம்
சக்தி பீடங்களுள் இத்தலமும் ஒன்று..
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி எனும் வரிசையில்
நாகை நீலாயதாட்சி
மிக்க புகழுக்குரியவள்..
கருந்தடங்கண்ணி - என்று
அப்பர் ஸ்வாமிகள் போற்றுகின்றார்..
கருந்தடங்கண்ணி - என்று
அப்பர் ஸ்வாமிகள் போற்றுகின்றார்..
ஆதிசேஷன் வழிபட்ட திருத்தலம்..
மகா சிவராத்திரியின் நான்காம் காலத்துக்குரிய
திருத்தலம்..
அதிபத்த நாயனார் வாழ்ந்து நிறைந்த திருத்தலம்..
அதிபத்தரை எம்பெருமான் ஆட்கொண்டநாள்
ஆவணி மாதத்தின் ஆயில்யம்..
அன்றைய நாளில்
அதிபத்த நாயனாரின் பொருட்டு
காயாரோகணர் நீலாயதாட்சியுடன்
கடற்கரைக்கு எழுந்தருள்கின்றார்...
அதிபத்தர் வலைவீசி
தங்க மீன் பிடிக்கும் வைபவமும்
அதன்பின் அதிபத்தர்க்கு முக்தி நலம் அருளும்
வைபவமும் நிகழ்கின்றது..
விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கு அடியேன்!..
என்று, சுந்தரர் திருத்தொண்டத்தொகையில்
புகழ்ந்துரைக்கின்றார்..
ஈசனிடம் - சுந்தரர்
பொன் பெற்ற திருத்தலங்களுள்
நாகையும் ஒன்று..
எண்ணற்ற சிறப்புகளைத்
தனனகத்தே உடையது கடல் நாகை..
108 திவ்ய தேசங்களுள் கடல் நாகையும்
ஒன்றாக விளங்குகின்றது..
இன்றைய நாளில் நாகை என்றும்
நாகப்பட்டினம் என்றும் அழைக்கப்படுகின்றது..
எண்ணற்ற சிறப்புகளைத்
தனனகத்தே உடையது கடல் நாகை..
108 திவ்ய தேசங்களுள் கடல் நாகையும்
ஒன்றாக விளங்குகின்றது..
இன்றைய நாளில் நாகை என்றும்
நாகப்பட்டினம் என்றும் அழைக்கப்படுகின்றது..
- திருப்பதிகம் அருளியோர் -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் தலைசூடி
வினையில் அடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனியுங் கடல்நாகைக் காரோ ணத்தானே..(1/84)
***
ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிய தேவாரம்
அருளிய தேவாரம்
பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச்
சீரார் செழும்பவளக் குன்றொப்பானைத்
திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பேராயிரம் உடைய பெம்மான் தன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காணலாமே!..(6/22)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
(07 - 08)
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!..
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்!.
***
- அபிராமிபட்டர் -
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
கருத்திட ஏதும் தெரியவில்லை இருந்தாலும் தொடர்கிறேன்
பதிலளிநீக்குநான்காம் காலத்துக்குரிய திருத்தலம் பற்றிய சிறப்புகள் அறிந்தேன்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குமார்கழிப் பூக்கம் தொடர்ந்து மணம் வீசுகின்றன
பதிலளிநீக்குநன்றி ஐயா
அருமை ஜி வாழ்க நலம்
பதிலளிநீக்குகில்லர்ஜி
அருமை.... தகவல்கள், படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்கு