நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 20, 2016

வெற்றி விழைக..

ஒலிம்பிக்..

பண்டைய கிரேக்கத்தில் எப்போதிருந்து இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன என்பது சரியாகத் தெரியவில்லை..

அப்போது இடம்பெற்றவை மற்போர், குதிரைப் பந்தயம், தேர்ப்பந்தயம் எனும் தடகள விளையாட்டுகளே..

பின்னர், கிமு 776 வாக்கில் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டபோது ஓடுதலுடன் பாய்தல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவைகளும் சேர்ந்து கொண்டன..

கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா என்னும் பகுதியில் நடத்தப்பட்டதாலேயே ஒலிம்பிக் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது..

அவ்வப்போது தடை ஏற்பட்டாலும் பொதுவாக நான்காண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன..

புகழ் பெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில் திறமையாளர்கள் வெற்றி பெற்று பதக்கம் வெல்வது தான் லட்சியம் என்றிருந்தாலும் -

போட்டிகளில் கலந்து கொள்வதே பெருமைக்குரிய விஷயம்..


இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் 21 வரை நிகழும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய வீரர்கள் வீராங்கனைகள் என,

118 பேர் - பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ சென்றுள்ளனர்..
விளையாட்டுஆடவர்பெண்கள்மொத்தம்போட்டிகள்
வில்வித்தை1343
தடகள விளையாட்டு17173419
இறகுப்பந்தாட்டம்3474
குத்துச் சண்டை3033
வளைதடிப் பந்தாட்டம்1616322
குழிப்பந்தாட்டம்2132
சீருடற்பயிற்சிகள்0111
யுடோ1011
துடுப்பு படகோட்டம்1011
குறி பார்த்துச் சுடுதல்931211
நீச்சற் போட்டி1122
மேசைப்பந்தாட்டம்2242
டென்னிசு2243
பாரம் தூக்குதல்1122
மற்போர்5387
மொத்தம்645411868

மேலும் கீழுமாக உள்ள இரண்டு பட்டியல்களும்
விக்கிபீடியாவில் இருந்து பெறப்பட்டவை..

இரண்டு பட்டியல்களுக்கிடையே -
மற்போர் (Wrestling) பிரிவில் வேறுபாடு இருப்பதைக் காணலாம்..
SportsMenWomenTotalEvents
Archery1343
Athletics17173419
Badminton3474
Boxing3033
Field hockey1616322
Golf2132
Gymnastics0115[2]
Judo1011
Rowing1011
Shooting931211
Swimming1122
Table tennis2242
Tennis2243
Weightlifting1122
Wrestling4377
Total635411767


சில நாட்களாக பாரதம் முழுவதும் மிக ஆர்வமுடன் காத்துக் கிடக்கின்றது..

சாய்னா நெஹ்வால்
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால்..

ரியோ ஒலிம்பிக் பயிற்சியின் போது முழங்கால் மூட்டில் வீக்கம் ஏற்பட்டது.. 
அதன் விளைவாக ஏதொன்றும் சாதிக்க இயலவில்லை..
தொடக்க சுற்றிலேயே சாய்னா வெளியேறினார்..

சாய்னா நேஹ்வால் - விரைவில் நலம்பெற வேண்டும்.. 

எதிர்வரும் காலங்களில் சிறப்பாக விளையாடி 
நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துவோம்.. 
*** 

தீபா கர்மாகர்
இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் நூலிழையில் வெண்கலத்தை தவற விட்டாலும் அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது பெருமைக்குரியது..

நான்கு வகையான போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 51.665 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றார்.


இந்திய ஒலிம்பிக் (ஜிம்னாஸ்டிக்) வரலாற்றில் வால்ட் போட்டியில் முதலாவதாகப் பங்கேற்றவர் எனும் பெருமையைப் பெற்றிருக்கின்றார்..

இந்தப் பிரிவிற்குள் 52 ஆண்டுகளுக்குப் பின் - இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையும் அவருடையதே!..

தான் - பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே,
இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளார் - தீபா..


இறுதிச் சுற்றில் வெங்கலம் வென்ற ஸ்விஸ் நாட்டின் வீராங்கனை ஜியுலியா பெற்ற புள்ளிகள் 15.216..

தீபா கர்மாகர் பெற்ற புள்ளிகள் - 15.066

நூலிழையில் வெங்கலப் பதக்கம் கைதவறிப் போனது..

ஆனாலும், அவரது சாதனை மகத்தானது.. சிறப்பானது.. 

அடுத்து வரும் நாட்களில் -
தீபா கர்மாகர் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி 
தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பெய்த வாழ்த்துவோம்..
***

ஆகஸ்ட் 17..

மற்போர் வீராங்கனை சாக்ஷி மாலிக்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கென முதல் பதக்கத்தை வென்றெடுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்..

மற்போர் பிரிவில் வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்தை வென்றார்..

சாக்ஷி மாலிக் - மகளிருக்கான (58 Kg) காலிறுதிப் போட்டியில்
ரஷ்யாவின் வெலெரியாவிடம் தோல்வி கண்டார்..

ஆனாலும், ரெபிசேஜ் எனும் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு சாக்ஷிக்குக் கிட்டியது..

தொடக்கத்தில் போட்டி மிகக்கடுமை.. சாக்ஷிக்கு சாதகமாக அமையவில்லை..

ஆயினும்,

கடைசி 15 நிமிடங்களில் நிலைமை தலைகீழானது..




கிர்கிஸ்தானைச் சேர்ந்த டைனி பெகோவாவை வீழ்த்தி
வெங்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்..

அசாத்திய திறமையுடைய சாக்ஷி மாலிக்-
எதிர்வரும் நாட்களில் மேலும் 
பல சிறப்புகளைப் பெறுதற்கு வாழ்த்துவோம்....
***

2013ல் நடந்த பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் - இந்தியாவுக்கான தங்கப் பதக்கத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் - என்பதுடன்,

பல சாதனைகளுக்கும் உரியவர் - பேட்மின்டன் வீராங்கனை சிந்து..

பேட்மிண்டன் வீராங்கனை சிந்து
சர்வதேச தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருப்பவர்..

முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினைச் சேர்ந்த 
கரோலினா மரியாவை எதிர்த்து விளையாடி -
வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கின்றார்..

முதல் தகுதிச் சுற்றில் கனடாவின் மிஷெல் லி யையும்
அடுத்து - ஹங்கேரியின் லாரா சரோசி யையும் வென்றார்..

முன் காலிறுதியில் - தைபேயின் தாய் சு யிங் 
காலிறுதியில் - சீனாவின் வாங் யி ஹான்
அரையிறுதியில் ஜப்பானின் நொ சோமி ஆகியோரை வீழ்த்தினார்..

பாரதம் முழுதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது..

தங்கமா!.. வெள்ளியா?..

ஆயிரமாயிரம் விழிகள் ஆவலுடன் காத்திருந்தன..




வெற்றியின் மகிழ்வில் சிந்து - கரோலினா
இறுதிச் சுற்றின் -

முதல் செட்டில் (21/19) என, கரோலினா வை வென்றார் - சிந்து..

இதனால் அதிர்ச்சியடைந்த கரோலினா அதிரடியாக விளையாடினார்..

ஆட்டத்தின் முடிவில் -
12/21 மற்றும் 15/21 என்ற கணக்கில் சிந்துவின் வெற்றி வாய்ப்பு நழுவியது...

அபாரமாக அடித்து விளையாடி - 
சிந்து வென்றெடுத்த வெள்ளிப் பதக்கத்தையே 
தங்கமெனக் கொண்டாடி மகிழ்கின்றனர் - ஆரவாரத்துடன்..


சிந்து மேலும் பல வெற்றிப் பதக்கங்களைப் பெற்று
சிறப்புற வேண்டும் என்று வாழ்த்துவோம்... 
*** 


வெற்றி வீராங்கனைகளான -
சாய்னா நெஹ்வால், தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக், சிந்து - 
ஆகிய, எவராயினும் அவர்களது அசாத்திய திறமையும் 
கடின உழைப்பும் முழுமையான அர்ப்பணிப்பும் புகழுக்குரியன..
***

சின்னஞ்சிறிய நாடுகள் எல்லாம் நிறையவே பதக்கங்களைப் பெற்றிருக்கின்றன..

உலக மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கும்
நாம் பதக்கப் பட்டியலில் எந்த இடம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..

காமன்வெல்த் நாடுகளுக்கிடையே
நடக்கும் போட்டிகளில் பதக்கங்களை வாரிக் குவிக்கும்
நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பிரகாசிக்க முடிவதில்லையே?.. அது ஏன்?.. - என்ற மனக்குறை அனைவரிடமும் உண்டு..

குறைகள் திறமையாளர்களிடத்தில் இல்லை!.. 
- என்பது மட்டும் உண்மை..

வருங்காலத்தில் மேலும், 
பல திறமையாளர்கள் உருவாக வேண்டும்..

அவர்களால் பாரதமும் 
பற்பல சிறப்புகளை எய்த வேண்டும்..   

வாழ்க பாரதம்
வளர்க பாரதம்
ஜய் ஹிந்த்.. 
***

16 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அனைவருக்கும் வாழ்த்துகள். மேலும் பல சிறப்புகள் அவர்களை வந்தடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மிக அழகான புள்ளிவிபரங்கள் + படங்களுடன் அற்புதமான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். சாதனையாளர்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நல்ல பகிர்வு ஐயா...
    அவர்களை வாழ்த்துவோம்...
    அரசியல் குறுக்கீடு இல்லை என்றால் இந்தியாவும் பதக்கப்பட்டியலும் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்கும்... எப்போது மாறும்..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      அரசியல் குறுக்கீடுகள் இல்லை எனில் எல்லா துறைகளுமே முன்னேற்றம் பெறும்.. ஆனால் அது நடக்கக் கூடியதா?..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தங்கள் பாணியில் ரியோ ஒலிம்பிக்கை ரசித்தோம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கலந்து கொண்டவர்களில் வெற்றி வாய்ப்பு இருந்தோர் மிகச்சிலரே வில்வித்தை யில் கன்சிஸ்டென்சி இருக்கவில்லை. பந்தயங்களில் துரத்துவோரே அதிகம் இருந்தாலும் வெற்றி பெற்றவர்களின் சாதனை குறைவானதல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      >>> வெற்றி பெற்றவர்களின் சாதனை குறைவானதல்ல..<<<

      வெற்றி வாய்ப்பினை நழுவவிட்ட நம்மவர்கள் மனம் தளராமல்
      மீண்டும் சாதனை நிகழ்த்த வேண்டும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நம் நாட்டில் நிலவும் அரசியலும், விளையாட்டுத்துறைக்குக் கிடைக்காத ஊக்கமும் என்று பல எதிர்மறைச் சூழல்கள் இருந்தாலும் அதன் நடுவில் .. இதுவே பெரிய விஷயம்தான்...சாதனை படைத்த நம் வீராங்கனைகளுக்கு மன்மார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மேலும் மேலும் எதிர்காலத்தில் சிறந்திட வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இன்றைக்கு அரசியலே விளையாட்டாகிப் போன சூழ்நிலையில் -
      விளையாட்டுக்குள் அரசியல் புகுந்து அலைக்கழிக்கின்றது..

      நமது வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நாம் அளிக்கும் உற்சாகமே அருமருந்து..

      அவர்களுடைய திறமை மேன்மேலும் பிரகாசிக்க வாழ்த்துவோம்..

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நம் அரசாங்கம் நன்கு விளையாடுபவர்களுக்கு ஊக்கமும், பொருளுதவியும் செய்து உயர்த்தலாம் முன்பே.
    விளையாடி வெற்றி பெற்றால் மட்டும் நான், நீ என்று காசை கொட்டுவதை விட முன்பே கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்.

    எவ்வளவு திறமையானவர்கள் வெளிச்சத்திற்கு வராமல் ஊக்கப்படுத்த ஆள் இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை தேடி விளையாட அனுமதித்தால் நிறைய பக்கங்கள் நம் நாட்டிற்கு தேடிவரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      திறமையானவர்கள் வெளிச்சத்திற்கு வராமல் குடத்திலிட்ட விளக்காக இருக்கின்றார்கள் - என்பது உண்மையே..

      உள்குத்து அரசியல் அக்கப்போர்களால் - அத்தகையவர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைப்பதுமில்லை..

      அதற்கு உதாரணம் எங்கள் குடும்பத்திலேயே நடந்திருக்கின்றது..

      தங்கள் வருகையும் நிதர்சனமான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..