நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 10, 2016

திருமஞ்சன தரிசனம்

எம்பெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும்,
பஞ்சபூத திருத்தலங்களில் ஆகாயத்தின் அம்சமாகவும்
புகழப்படுவது திருச்சிற்றம்பலம் எனும் தில்லையம்பதி..

இன்றைய நாளில் சிதம்பரம் என வழங்கப்படுவது..

சைவத்தில் கோயில் எனப்படும் திருத்தலம்..

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோயிலில், ஆனித் திருமஞ்சன தரிசன விழா இம்மாதம் முதல் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இதையடுத்து தினமும் தங்க கைலாச வாகனம் பெரிய ரிஷப வாகனம் - என, பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா எழுந்தருளினர்..

நடைபெற்று வந்தது. பின்னர், த்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்தினம் தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா எழுந்தருளினார்..

இதையடுத்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன..

ஆனிப் பெருந்திருவிழா - திருப்பெருந்துறையில் வெகு சிறப்பாக நடைபெறும் வேளையில் மாணிக்கவாசகப் பெருமான் முக்தி நலம் எய்திய நாளும் சிறப்பாக நிகழ்ந்தது..

மாணிக்கவாசகர் - மதுரை
திருப்பெருந்துறை
திருப்பெருந்துறை
ஆனித் திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்
நேற்று (ஜூன்/9) காலை விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ ஆனந்த நடராஜமூர்த்தி, ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகையுடன் பெருந்தேரில் எழுந்தருளினார்..
திருநிலை நாயகியாகிய சிவானந்தவல்லி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் - என, ஏனைய உற்ஸவ மூர்த்திகளும் தனித் தனித் தேர்களில் வீதியுலா எழுந்தருளினர்...

சிவானந்த கோஷங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்துத் திருத்தேரை இழுத்தனர்.  
இரவு எட்டு மணியளவில் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.


இன்று ஜூலை/10 (ஞாயிற்றுக்கிழமை) சூரிய உதயத்துக்கு முன்பாக
அதிகாலை நான்கு மணி முதற்கொண்டு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது..
இதையடுத்து காலை பத்து மணியளவில் சித்சபையில் ரகசிய பூஜை..

தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா..

பின்னர் பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

மறுநாள் (ஜூலை/11) பஞ்ச மூர்த்திகளின் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் மங்கலகரமாக நிறைவடைகின்றது..


அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!.. (6/1)
-: அப்பர் பெருமான் :-

பாருருவாய பிறப்பறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும்
சீருருவாய சிவபெருமானே செங்கமல மலர்போல்
ஆருருவாய என்னாரமுதே உன்னடியவர் தொகைநடுவே
ஓருருவாய நின்திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே!..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***  

14 கருத்துகள்:

  1. அருமையான படங்கள்.... தகவல்களும் நன்று.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தரிசனப்படங்கள் அழகு வாழ்க நலம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான படங்கள்... அழகான கட்டுரை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இரண்டு ஆண்டுகளாக திரு மஞ்சன விழா வைக் காண இயலவில்லை தேருலாவின் போதும் புகைப்படம் எடுக்கவிடுவதில்லை. என் நண்பனுடன் போயிருந்தபோது தேர் உலாவை தங்கும் இட மாடியில் இருந்து வீடியோ எடுத்தான் யாரும் அறியாமல்தான் அந்த நினைவுகள் இப்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      சில இடங்களில் நானும் இப்படி தடுக்கப்பட்டிருக்கின்றேன்.. ஆனாலும் - ஊடகங்கள் அனுமதிக்கப்படுகின்றன..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. படங்கள் அத்தனையும் மிக அழகு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..