மெய்சிலிர்க்கின்றது..
இது குறித்து வடக்கு படைப் பிரிவு ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா கூறும்போது -
லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இருப்பினும் அவரை ஆர்.ஆர்.மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டது போன்ற அற்புத நிகழ்வு தொடர வேண்டும் என விரும்புகிறேன். எங்களுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.. - என்றார்.
புதையுண்ட வீரர்களைத் தேடும் பணி நவீன கருவிகளுடன் நடைபெற்று வருகின்றன.. இப்பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன..
மீண்டும் பனிச் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது..
எங்கே செல்லும் இந்தப் பாதை - எனும் பதிவில்
மேலும், அந்தப் பதிவில் -
அமெரிக்காவில் நான்காண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டுவிட்ட சீனாவின் கொய்யா மிட்டாயைப் பற்றியும் தகவல்கள் காணப்படுகின்றன..
அதை விற்கும் - அமேசான் தனக்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காகக் கொடுத்திருக்கும் அறிவிப்பும் காணப்படுகின்றது..
Important Information
Ingredients
Sugar, Glucose Syrup, Fruit Acid, Citric Acid, Salt, Edible Spice, Food Colo (FD & C Blue #1, FD & C Yellow #5)
Legal Disclaimer
Actual product packaging and materials may contain more and different information than what is shown on our website. We recommend that you do not rely solely on the information presented and that you always read labels, warnings, and directions before using or consuming a product.
மலிவாகக் கிடைப்பதால் ஏழைப் பிள்ளைகள் என்னவென்று அறியாமல் வாங்கித் தின்பார்கள்.. அவர்களின் தேவை அந்த நேரத்திற்கு இனிப்பு.. அது நல்லதா கெட்டதா என்ற விவரம் அறியாமல் தின்று விட்டு பின்னால் அவதிக்குள்ளாவார்களே என்ற இரக்க உணர்வுடன் பதிவில் எழுதியிருக்கின்றார்..
பதிவின் செய்திகள் நமக்கு விழிப்பூட்டுகின்றன..
அத்தகைய விஷப் பொருட்கள் விற்பனையைத் தடுத்திடவும் வருங்கால சந்ததியினரைக் காத்திடவும் வேண்டும்..
பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்..
மதிப்புக்குரிய தேன் மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் - தனது தளத்தில்
பாவம் சிறுத்தை - எனும் பதிவில்
காடழித்துக் கற்கும்
பாடம் என்னவென்று
பார்க்க வந்ததோ..
பாட்டன் வாழ்ந்த
காட்டைத் தேடி
ஓடி வந்ததோ!..
என்று பரிதவிப்புடன் ஒரு கவிதை வழங்கியிருக்கின்றார்..
வாழ்விடம் தொலைத்துக் குழுவையும் தொலைத்து
- எனும் வரிகள் நிதர்சனத்தைக் காட்டுகின்றன..
ஆனாலும்,
வாழ்விடத்தை சிறுத்தை அழிக்கவில்லையே..
குழுவையும் அது தொலைக்கவில்லையே!..
வாழ்விடத்தையும் குழுவையும் அழித்து ஒழித்தவர்கள் மனிதர்களாமே!.. அவர்கள் எப்படி இருப்பார்கள் - என்று பார்க்கத்தான் அந்த சிறுத்தை அங்கே வந்திருக்கக் கூடும்..
ஆனால், அங்கே மனிதர்களைக் காணாமல் - விலங்குகளைத் தான் கண்டது..
சிறுத்தை - பாவம் தான்!..
இந்த சிறு காணொளியில் - மனித விகாரங்கள் வெளிப்படுகின்றன..
இடையூறு செய்யாமல் விட்டிருந்தாலே - சிறுத்தை தானாக வந்த வழியே ஓடிப்போயிருக்கும்..
சிறுத்தையின் மீது ஏணியைத் தள்ளிவிடுவதும் தடிக் கம்புகளை எறிவதும் தான் - அதனை கலவரப்படுத்தியிருக்கின்றன..
மற்றபடி சிறுத்தை இரத்தவெறி கொண்டு தாக்குவதாகத் தெரியவில்லை..
அது தன்னைக் காத்துக் கொண்டு தப்பித்து ஓடத்தான் முயற்சிக்கின்றது..
ஆனால்,
அங்கிருந்தவர்கள் - தம்மைத் தாம் காத்துக் கொள்ள முற்படாமல் - சிறுத்தையைப் படம் பிடிக்க அதீத ஆர்வம் காட்டுகின்றார்கள்..
ஆபத்தில் இருப்பவனைக் காப்பாற்றாமல் -
அவனது அவதியை களிப்புடன் காட்சிப்படுத்த முனைகின்றார்கள்..
நாம் மட்டும் வாழ வேண்டும் என்ற கொடூர ஆசையின் விளைவே காடுகளின் அழிப்பு..
வன அழிப்பின் முடிவில் கடைசி மரம் வீழும் போது மனித குலத்தின் அழிவு தொடங்கியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்வதே நலம்!..
மதிப்புக்குரிய கீதா அவர்கள் தமது தளத்தில்
தனியொருவன் - எனும் பதிவில்,
நன்றியுள்ள ஜீவன்களைப் பற்றி பதிந்திருக்கின்றார்..
பதிவின் ஒவ்வொரு வார்த்தைகளும் நெஞ்சில் பதிகின்றன..
தனியொருவனின் உயிர் - கண்ணழகியின் அன்பினால் மீண்டு வாராதா!.. எனத் தவிக்கும்போது கண்கள் கசிகின்றன..
ஆனாலும் -
இன்னோரு ஜென்மம் - இருந்தா அப்போது பொறப்போம்..
ஒன்னோட ஒன்னா கலந்தே அன்போட இருப்போம்!..
- என்றபடி, தனியொருவன் விடை பெற்றுக்கொள்ள,
இளையவன் ஒருவன் - தனியொருவனாக தலையெடுப்பதும்
அவனுக்காக பிஸ்கட் துண்டுகள் எடுத்து வைக்கப்படுவதும் - கவிதை!..
சாலையில் அப்படி இப்படி திரிந்தாலும் அதுவும் உயிரல்லவா..
அதற்கு இரங்க வேண்டியதும் நமது கடமையல்லவா!..
மேற்குறித்த பதிவுகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள்..
ஆயினும், அவற்றின் தன்மையைக் கொண்டு - இங்கே குறிப்பிட்டு
மனதார பாராட்டுகின்றேன்..
உலகின் மிக உயரமான போர் முனையாகிய சியாச்சன் பனிப் பகுதியில் கடந்த மூன்றாம் தேதி ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர்கள் பத்துப் பேரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் -
ஆறு நாட்களுக்குப் பிறகு வீரர் ஒருவர் ராணுவ மீட்புக் குழுவினரால் உறைபனிக்கு உள்ளிருந்து உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளார்.
ஆறு நாட்களுக்குப் பிறகு வீரர் ஒருவர் ராணுவ மீட்புக் குழுவினரால் உறைபனிக்கு உள்ளிருந்து உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளார்.
உறைபனிக்கு உள்ளிருந்து மீட்க்கப்பட்ட ஹனுமந்தப்பா |
ஹனுமந்தப்பாவிற்கும்
அவரை மீட்டெடுத்த மீட்புக் குழுவினருக்கும்
நல்வாழ்த்துகள்..
இருபத்தைந்து அடி ஆழத்துக்கு கீழ் புதையுண்டு உறைந்திருந்த ஹனுமந்தப்பா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்..
மேலும் வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மற்ற வீரர்களை தேடும் பணி அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
தனியொருவன் - தேடுதல் பணியில்.. |
பனிப்பாறைகள் தகர்க்கப்படுகின்றன.. |
லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இருப்பினும் அவரை ஆர்.ஆர்.மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டது போன்ற அற்புத நிகழ்வு தொடர வேண்டும் என விரும்புகிறேன். எங்களுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.. - என்றார்.
புதையுண்ட வீரர்களைத் தேடும் பணி நவீன கருவிகளுடன் நடைபெற்று வருகின்றன.. இப்பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன..
மீண்டும் பனிச் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது..
பாரத தேசத்தின் ராணுவ வீரர்களின்
நலனுக்காகப் பிரார்த்திப்போம்..
மதிப்புக்குரிய ஏஞ்சலின் அவர்கள் - தனது தளத்தில்
எங்கே செல்லும் இந்தப் பாதை - எனும் பதிவில்
பள்ளிப் பிள்ளைகளை வசப்படுத்தி விற்கப்படும் Cool Lip எனும் புகையிலை விளைவிக்கும் ஆபத்தினைப் பற்றி விவரமாக தெரியப்படுத்தியுள்ளார்..
நவீனம் நாகரிகம் என்ற அலங்காரத்துடன் -
இளம்பிள்ளைகளைக் கெடுக்கும் பலவழிகள் கண்முன் விரிந்து கிடக்கின்றன..
அவற்றுள் ஒன்றுதான் - Cool Lip..
இதைப் பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் - ஏஞ்சலின் அவர்கள்தம் பதிவின் செய்திகளைக் கண்டதும் மனம் மிகவும் நடுக்குற்றது..
அமெரிக்காவில் நான்காண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டுவிட்ட சீனாவின் கொய்யா மிட்டாயைப் பற்றியும் தகவல்கள் காணப்படுகின்றன..
அதை விற்கும் - அமேசான் தனக்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காகக் கொடுத்திருக்கும் அறிவிப்பும் காணப்படுகின்றது..
Important Information
Ingredients
Sugar, Glucose Syrup, Fruit Acid, Citric Acid, Salt, Edible Spice, Food Colo (FD & C Blue #1, FD & C Yellow #5)
Legal Disclaimer
Actual product packaging and materials may contain more and different information than what is shown on our website. We recommend that you do not rely solely on the information presented and that you always read labels, warnings, and directions before using or consuming a product.
மலிவாகக் கிடைப்பதால் ஏழைப் பிள்ளைகள் என்னவென்று அறியாமல் வாங்கித் தின்பார்கள்.. அவர்களின் தேவை அந்த நேரத்திற்கு இனிப்பு.. அது நல்லதா கெட்டதா என்ற விவரம் அறியாமல் தின்று விட்டு பின்னால் அவதிக்குள்ளாவார்களே என்ற இரக்க உணர்வுடன் பதிவில் எழுதியிருக்கின்றார்..
பதிவின் செய்திகள் நமக்கு விழிப்பூட்டுகின்றன..
அத்தகைய விஷப் பொருட்கள் விற்பனையைத் தடுத்திடவும் வருங்கால சந்ததியினரைக் காத்திடவும் வேண்டும்..
அதீத சுதந்திரம் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும்..
பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்..
பிள்ளைகளின் எதிர்காலம் நலமாக அமைவதற்கு
நல்லதொரு சூழல் உருவாகிட பிரார்த்திப்போம்..
மதிப்புக்குரிய தேன் மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் - தனது தளத்தில்
பாவம் சிறுத்தை - எனும் பதிவில்
காடழித்துக் கற்கும்
பாடம் என்னவென்று
பார்க்க வந்ததோ..
பாட்டன் வாழ்ந்த
காட்டைத் தேடி
ஓடி வந்ததோ!..
என்று பரிதவிப்புடன் ஒரு கவிதை வழங்கியிருக்கின்றார்..
வாழ்விடம் தொலைத்துக் குழுவையும் தொலைத்து
- எனும் வரிகள் நிதர்சனத்தைக் காட்டுகின்றன..
ஆனாலும்,
வாழ்விடத்தை சிறுத்தை அழிக்கவில்லையே..
குழுவையும் அது தொலைக்கவில்லையே!..
வாழ்விடத்தையும் குழுவையும் அழித்து ஒழித்தவர்கள் மனிதர்களாமே!.. அவர்கள் எப்படி இருப்பார்கள் - என்று பார்க்கத்தான் அந்த சிறுத்தை அங்கே வந்திருக்கக் கூடும்..
ஆனால், அங்கே மனிதர்களைக் காணாமல் - விலங்குகளைத் தான் கண்டது..
சிறுத்தை - பாவம் தான்!..
இந்த சிறு காணொளியில் - மனித விகாரங்கள் வெளிப்படுகின்றன..
இடையூறு செய்யாமல் விட்டிருந்தாலே - சிறுத்தை தானாக வந்த வழியே ஓடிப்போயிருக்கும்..
சிறுத்தையின் மீது ஏணியைத் தள்ளிவிடுவதும் தடிக் கம்புகளை எறிவதும் தான் - அதனை கலவரப்படுத்தியிருக்கின்றன..
மற்றபடி சிறுத்தை இரத்தவெறி கொண்டு தாக்குவதாகத் தெரியவில்லை..
அது தன்னைக் காத்துக் கொண்டு தப்பித்து ஓடத்தான் முயற்சிக்கின்றது..
ஆனால்,
அங்கிருந்தவர்கள் - தம்மைத் தாம் காத்துக் கொள்ள முற்படாமல் - சிறுத்தையைப் படம் பிடிக்க அதீத ஆர்வம் காட்டுகின்றார்கள்..
ஆபத்தில் இருப்பவனைக் காப்பாற்றாமல் -
அவனது அவதியை களிப்புடன் காட்சிப்படுத்த முனைகின்றார்கள்..
நாம் மட்டும் வாழ வேண்டும் என்ற கொடூர ஆசையின் விளைவே காடுகளின் அழிப்பு..
வன அழிப்பின் முடிவில் கடைசி மரம் வீழும் போது மனித குலத்தின் அழிவு தொடங்கியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்வதே நலம்!..
நம்முடன் இயற்கையும் சகல உயிர்களும் இன்புற்று
வாழ வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்வோம்!..
மதிப்புக்குரிய கீதா அவர்கள் தமது தளத்தில்
தனியொருவன் - எனும் பதிவில்,
நன்றியுள்ள ஜீவன்களைப் பற்றி பதிந்திருக்கின்றார்..
பதிவின் ஒவ்வொரு வார்த்தைகளும் நெஞ்சில் பதிகின்றன..
தனியொருவனின் உயிர் - கண்ணழகியின் அன்பினால் மீண்டு வாராதா!.. எனத் தவிக்கும்போது கண்கள் கசிகின்றன..
ஆனாலும் -
இன்னோரு ஜென்மம் - இருந்தா அப்போது பொறப்போம்..
ஒன்னோட ஒன்னா கலந்தே அன்போட இருப்போம்!..
- என்றபடி, தனியொருவன் விடை பெற்றுக்கொள்ள,
இளையவன் ஒருவன் - தனியொருவனாக தலையெடுப்பதும்
அவனுக்காக பிஸ்கட் துண்டுகள் எடுத்து வைக்கப்படுவதும் - கவிதை!..
புதியவன் இவனோ!.. |
அதற்கு இரங்க வேண்டியதும் நமது கடமையல்லவா!..
மேற்குறித்த பதிவுகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள்..
ஆயினும், அவற்றின் தன்மையைக் கொண்டு - இங்கே குறிப்பிட்டு
மனதார பாராட்டுகின்றேன்..
இதெல்லாம் தாய்மை தானே!.. |
நாய், காளை, சிறுத்தை எல்லாமும்
நாய், காளை, சிறுத்தை என்பதாகவே இருக்கின்றன..
ஆனால்,
மனிதன் தான் விலங்காகி விட்டான்!..
அனைத்து உயிர்களும் காக்கப்பட வேண்டும்..
அவைகளுக்காகவும் பிரார்த்தித்துக் கொள்வோம்!..
வாழ்க நலம்..
***
Jasr wait coming....
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குவருக.. வருக..
பல்சுவைச் செய்திகள். முதல் செய்தி மனதை நெகிழவைத்தது. அவருக்காகப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.
கடும் பனிப்பாறைகளில் சிக்கி ஆறு நாட்கள் கழித்து ஹ(னு)னமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டுள்ளது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அவர் மேலும் குணமடையவும், இந்திய இராணுவத்தினர் அனைவரின் நலனுக்குமாகவும் நாம் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்கு>>>>>
அன்பின் அண்ணா..
நீக்குஉறைபனிக்குள்ளிருந்து ஆறு நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு என்பது அதிசயம் தான்.. அவருக்காக வேண்டிக் கொள்வோம்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.
பல்வேறு பதிவர்களின் பதிவுகளிலிருந்து தரம் வாய்ந்த நல்ல செய்திகளைத் தொகுத்து அளித்திருப்பது மிகவும் வித்யாசமாகவும், அழகாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள்.
அன்பின் அண்ணா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
மிக்க நன்றி..
வணக்கம் ஐயா.
பதிலளிநீக்குஇராணுவ வீரர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்.
கொய்யா மிட்டாய் போல் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட்டவை நம்மூரில் அனுமதிக்கபப்டுவது வேதனை...இதனை எதிர்க்க விழிப்புணர்வுதான் முக்கியம்...பகிர்ந்த ஏஞ்சலுக்கும் உங்களுக்கும் நன்றி.
நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் ஐயா, மனிதன் அழிப்பதை அழித்துவிட்டுத் தடுமாறும் விலங்குகளையும் வதைக்கிறான்.. :(
என் பதிவைப் பகிர்ந்து பாராட்டியதற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
அன்புடையீர்..
நீக்குஉறைபனிக்குள்ளிருந்து ஆறு நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்க்கப்பட்ட வீரருக்காக வேண்டிக் கொள்வோம்..
சக மனிதர்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு - ஏஞ்சல் அவர்களின் எழுத்துக்களில் வெளிப்படுகின்றது..
நல்ல விஷயங்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது நமது கடமை..
தங்களையும் அவ்வாறே - இயற்கை ஆர்வலராகக் காண்கின்றேன்..
தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.
இராணுவ வீரர்களைப் போற்றுவோம்
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குஇராணுவ வீரர்களின் சேவை ஈடு இணையில்லாததது..
தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
மனதை நெகிழ வைத்தது... அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. மிக்க நன்றி..
பிரார்த்தனைகளுக்கு வலிமையையும் வல்லமையும் உண்டு ..சியாசின்வீரர் விரைவில் பூரண நலம்பெற பிரார்த்திப்போம் .
பதிலளிநீக்குஎனது பதிவை பற்றி கூறியதற்கு மற்றும் பாராட்டுக்களுக்கும்மிக்க நன்றிகள் அய்யா ..
கொய்யா மிட்டாய் கீதா பின்னூட்டத்தில் சொன்னதும் செல்வகுமார் அவர்களின் பதிவில் பார்த்து கொஞ்சம் வலையில் ஆராய்ச்சி செய்தப்போதான் அது அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டே தடை செய்தது பற்றி அறிந்தேன் ..
கிணறு தோண்ட பூதம் கிளம்பின மாதிரி பல விஷயங்கள் கிடைத்தது ..
..மனிதன் இயல்பை இழந்து மிருகமாகிகொண்டு போகிறான் என்பதே கசக்கும் உண்மை :( சிறுத்தையும் இன்னும் பல வன விலங்குகளும் பாவம்தான் :(
தனியொருவனுக்கு எனது இரங்கல்கள் ..
எந்த உயிராக இருந்தாலும் இப்பெல்லாம் மனசு கிடந்தது தவிக்குது :(
பூவுலகில் வாழும் எல்லா உயிருக்கும் பிரார்த்திப்போம் .
அன்புடையீர்..
நீக்குநாலு பேர் நன்மையடைய வேண்டுமென்று -
நல்லதொரு தகவலை நயமுடன் பதிவு செய்திருந்தீர்கள்..
அந்தப் பெருங்குணம் பேசுதற்குரியது..
எழுத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம்..
நமது எழுத்துக்கள் வெற்றியடையட்டும்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
அன்பின் பிரார்த்தனைக்கு நன்றி..
ஆஹா மகிழ்ச்சி அவ்வீரர் விரைவில் நலம் பெறவேண்டும்,,, இன்னும் யார் இருக்கிறார்களோ, அவர்கள் உயிருடன் நலமுடன் வர மனம் துடிக்கிறது.
பதிலளிநீக்குபல பதிவர்களின் அருமையான பதிவுகள் தொகுப்பாக,,, அருமை அருமை,,
சரி தான் விலங்குகள் விலங்குகளாக,, ஆனால் மனிதன் மட்டும் தன் இனம் விட்டு,, நல்ல பகிர்வு,,
தொடருங்கள், நன்றி.
அன்புடையீர்..
நீக்குபனிச்சரிவில் சிக்குண்டு மீட்க்கப்பட்ட வீரர் விரைவில் நலம் பெற வேண்டும்..
தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அன்பு கலந்த வணக்கங்கள் + நன்றிகள் பல ஐயா! எங்களையும் மதித்து, எங்கள் பதிவை இங்கு பகிர்ந்தமைக்கு. மிக்க மிக்க நன்றி. மனம் நெகிழ்ந்துவிட்டது ஐயா. தமிழில் வார்த்தைகளைக் கடைந்தெடுத்துத் தமிழோடு விளையாடி, பல அருமையான, நேர்மறைக் கருத்துகள், நற்கருத்துகள் அடங்கிய, பல்சுவை, இலக்கிய, ஆன்மீகத் தகவல்கள், பாடல்கள் தரும் மிகவும் உயரிய, தரமான பதிவுகள் மட்டுமே தரும் தங்கள் தளத்தில் எங்கள் பதிவையும் பகிர்ந்தமைக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா!
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி! அதே சமயம் சியாச்சின் பகுதியில் பல வீரர்கள் நாட்டைக்காக்கும் வீரர்கள் பனிச்சரிவில் மடிந்தது மனதை வேதனைப்படுத்தும் வேளையில் ஒருவர் பிழைத்திருப்பது அதுவும் 6 நாட்கள் கடந்தும் என்பது அதிசயத்திலும் அதிசயமே. அவருக்காகவும் இன்னும் வீரர்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்போம். பிரார்த்தனைகள் வலுவானவை. அதையும் கண்டுபிடித்தவன் தனியொருவன்!!!!
ஏஞ்சலின், க்ரேஸ் சகோ/தோழிகள் தரமான பதிவுகளையே தருவார்கள் எப்போதும். அவர்களையும் இங்கு சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் ஐயா. எல்லா விலங்குகளும் பாவம். அதுவும் அந்தச் சிறுத்தை பாவம் நீங்கள் சொன்னது போல் அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற போது மனிதர்கள் அதைப் புகைப்படம், காணொளி எடுத்துப் பரபரப்புச் செய்திகளுக்கு முனைகின்றார்களே தவிர அதைக் காப்பாற்றவோ இல்லை மனிதர்களைக் காப்பாற்றவோ இல்லை...சுயநலம்...அது போலவே அந்தக் கொய்யா மிட்டாய்...நமது ஊர் குப்பைக் கிடங்காக மாறிக் கொண்டுவருகின்றது அதாவது டம்பிங்க் பேக்யார்டாக..மற்ற நாடுகளில் தடை செய்யப்படுபவை இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும்...என்ன ஆட்சியோ..
இறுதியில் சொன்னீர்கள் பாருங்கள் அதுதான் அதேதான். விலங்குகள் விலங்குகளாகவே இருக்கின்றனது. ஆனால் மனிதன் மட்டும் விலங்குகளாக உருமாறிக் கொண்டு வருகின்றான்...ஆனால் பாருங்கள் விலங்குகள் என்று சொல்லி அவற்றை நாம் அவமதிக்கின்றோமோ!!!
மிக்க நன்றி ஐயா....அனைத்திற்கும்..
அன்பின் துளசிதரன்..
நீக்குதங்களைப் போல சமூக விழிப்புணர்வு பதிவுகள் பலவற்றைத் தரவில்லையாயினும் -
என்னால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கின்றேன்..
மதிப்புக்குரிய ஏஞ்சலின், கிரேஸ் மற்றும் தங்களுடைய பதிவுகள் என்றும் சிறப்பானவை..
மனித நேயம் கொண்ட அந்தப் பதிவுகள் என்னைத் தூண்டி விட்டன..
ஆதலினால் - அவற்றை ஒருங்கிணைத்து தளத்தில் பதிவு செய்தேன்..
சுயநலமிக்க மனிதனால் வனங்களும் வளங்களும் அழிகின்றன.. இது தகாது என்றூ நல்லோர் பலர் எடுத்துக் கூறுகின்றனர்.. அனைத்தையும் காக்க வேண்டிய அரசாங்கமே அமைதியாக இருக்கின்றது..
இனி என்ன ஆகும் என்ற ஏக்கம் எழுகின்றது.. பதில் இல்லாத கேள்விகள் தொடர்கின்றன..
தனிப்பதிவு போல விளக்கமான கருத்துரை கண்டு மகிழ்கின்றது மனம்..
மிக்க நன்றி .. வாழ்க நலம்..
அன்பின் ஜி வணக்கம் அனைத்தும் நல்ல விடயங்களைக் குறித்ததே நன்று
பதிலளிநீக்குஇராணுவ வீரர்களை நான் என்றுமே போற்றப்படக் கூடிய சொத்து என்றே சொல்வேன் தங்களுக்கே தெரியும்
ஹனமந்தப்பா நலமுடன் பிழைக்க வேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்போம்
தேடிக்கொண்டு இருக்கும் குழுவில் எனது நண்பரின் சகோதரியின் கணவரும் தற்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார் அனைத்தும் நலமுடன் முடிந்து வெற்றஇ பெற இறையருள் கிடைக்கட்டும்
வாழ்க வளமுடன்
அன்பின் ஜி..
நீக்குதங்களின் மனம் நானறியாததா!.. நல்லவர்களை வாழ்த்துவதிலும் புல்லர்களைச் சாடுவதிலும் தங்களுக்கு நிகர் தாங்களே!..
வீரர் ஹனமந்தப்பா விரைவில் நலம் பெறவும்,மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சக வீரர்கள் நலமுடன் - தமது பணியைத் தொடரவும் வேண்டிக் கொள்வோம்..
தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
மிக்க நன்றி.. வாழ்க நலம்..
பனியில் சிக்கியிருந்த அவரது உடலில் இரத்த ஓட்டம் சீராக மிக மெதுவாகத்தான் வரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் சில காம்ப்லிகேஷன்கள் வரலாம் என்றும் கூறுகின்றனர். பனியிலிருந்தே மீண்டவர் எல்லா நலமும் பெறுவார் என வேண்டுகிறேன் பள்ளிகளைச் சுற்றி விற்கும் தின்பண்டங்களில் போதைப் பொருளைக் கலந்து சிறார்களைத் தங்கள் கடைப்பக்கம் இழுக்கும் செயலும் நடைபெறுகிறதாமே செய்களைப் பகிர்ந்த முறைக்குப் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குநானும் இதைக் கேள்விப்பட்டேன்.. ஹனமந்தப்பா நலம் பெற வேண்டும் என வேண்டுவோம்..
ஆசை வார்த்தை காட்டி மாணவர்களை இழுக்கும் கொடூரமும் நடக்கத்தான் செய்கின்றது.. பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் இதை முன்னெடுத்துத் தடுக்க வேண்டும்..
தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அவரின் இறப்புக்குப் பின்னே பிரார்த்தனைக்கு வருகிறேன்... அவரின் குடும்பத்துக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...
பதிலளிநீக்குமற்ற வலைஞர்களின் பதிவுகள் குறித்து பகிர்ந்தமை சிறப்பு ஐயா...
அன்பின் குமார்..
நீக்குதவிர்க்க இயலாத சூழ்நிலையில் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை. தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..