தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகின்றது கடலூர்..
சென்னையைவிட கடலூருக்குத்தான் அதிக நிவாரணப் பொருட்கள் தேவை..
சென்னையில் வெள்ளம் வந்தால் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடையலாம்.
.
கடலூரில் குடிசைகளுக்கு மேல் வெள்ளம் போகிறது..
.
கடலூரில் குடிசைகளுக்கு மேல் வெள்ளம் போகிறது..
மக்கள் எங்கு சென்று அடைக்கலம் தேடுவர்?..
எல்லாத் தொலைக்காட்சிகளும் கேமராவுடன் சென்னையையே சுற்றிக் கொண்டுள்ளன..
விவசாய நிலங்கள் அனைத்தும் தண்ணீரில்...
கடலூரை யாரும் கண்டுகொள்ளவில்லை
அல்லலுற்று தவிக்கும் கடலூருக்கும் கரிசனம் காட்டுங்கள்..
கீழ்க்காணும் படங்கள் தமிழ்ச் சமுதாயம் - எனும் FB வழியாக பகிரப்பட்டவை..
குடிசை எனினும் மக்களின் உடைமை தானே |
கடலூரை கைவிட்டன ஊடகங்கள்..
எதிலும் குறை சொல்வோர் சென்னையை மட்டுமே கையில்எடுத்துக் கொண்டுள்ளனர்...
தற்போது கடலூரில் அரசுத் துறையினரும் தன்னார்வத் தொண்டர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இருக்கின்றனர்.
மக்கள் முற்றிலும் தன் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்..
சூழ்ந்திருக்கும் தண்ணீர் இன்னும் வடியவில்லை.
கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணியே மிகப் பெரிய போராட்டம்..
அரசிடம் தகுந்த நிவாரணத்தை எதிர்பார்த்து தவிக்கின்றனர் .
அரசு துரித நடவடிக்கையாக நிவாரணங்களை வழங்கி மக்களை காக்கவேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கையாக இருக்கிறது.
கடலூரும் தமிழகத்தில் தானே உள்ளது..
அங்கே தத்தளிக்கும் மக்களும் நம்மவர்களே!..
அங்கும் அரசின் பார்வையும் பரிவும் தேவை!.
சீரழிவிற்குள் சிறப்பாகப் பணியாற்றும்
அனைவருக்கும் தலைதாழ்ந்த வணக்கங்கள்!..
* * *
அதிக பாதிப்பு அடைந்தது கடலூர் தான்...
பதிலளிநீக்குவிரைவில் சீராக ஆண்டவனை வேண்டுகிறேன்...
அன்பின் தனபாலன்..
நீக்குநிலைமை விரைவில் சீரடைய வேண்டுவோம்..
புகைப்படங்கள் வேதனையைத் தந்தது ஜி
பதிலளிநீக்குஇதிலும் அரசியல் வேண்டாமே.... உணர்வார்களா ?
அன்பின் ஜி..
நீக்குஇன்னல் தீர்ந்து இயல்பு நிலை திரும்புவதற்கு வேண்டுவோம்..
மனதை கனக்கவைக்கிறது படங்கள். இயற்கையின் சீற்றம் குறைந்து மக்கள் எல்லோரும் நலமடைய ஆண்டவன் தான் அருள்புரிய வேண்டும். கடலூர் மக்கள், மற்றும் மழையால் பாதிக்கபட்ட மக்கள் அனைவரும் விரைவில் நலம்பெறவேண்டும் இறைவா!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குஇன்னல் தீர்ந்து இயல்பு நிலை திரும்புவதற்கு வேண்டுவோம்..
கடலூரில்தான் பாதிப்பு அதிகம்...
பதிலளிநீக்குஎன் நண்பன் தமிழ்க்காதலன் நடத்தும் தமிக்குடில் அறக்கட்டளையின் சார்பாக உதவிகள் செய்து வருகிறார்கள். இப்படி நிறைய களப்பணியாளர்கள் உதவி வருகிறார்கள்... அரசு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.. மீடியாக்களுக்கு சென்னை மட்டுமே இலக்கு...
பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டு வரவேண்டும்.
படங்கள் வேத்னையை தூண்டுகிறது ஐயா...
அன்பின் குமார்..
நீக்குஇன்னல் தீர்ந்து விரைவில் இயல்பு நிலை திரும்புவதற்கு வேண்டுவோம்..
பார்ப்பவர் அனைவரையும் அழ வைக்கும் படங்கள். பகிர்வுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிடுவது போல கடலூரை மறந்து விட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்வதாக இருந்தால்கூட ‘அம்மா’ படம் போட்ட ஸ்டிக்கர்தான் ஒட்டித்தான் கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாக சொல்கிறார்கள்.
பதிலளிநீக்குஅன்பின் அண்ணா..
நீக்குஇன்னல் தீர்ந்து இயல்பு நிலை திரும்புவதற்கு வேண்டுவோம்..
படங்கள் மனதை பதறச் செய்கின்றன.
பதிலளிநீக்குமனித நேயத்துடன் நடக்கவேண்டும். எப்பவும் இப்படி தான்,, அதிக பாதிப்பும் கடலூரில் தான்,,,,,
தங்கள் பகிர்வு அருமை.
அன்புடையீர்..
நீக்குபாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டுவோம்..
தொண்டர்களை
பதிலளிநீக்குகடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்
வானிலிருந்து - கடவுள்
தன் திருவிளையாடலைக் காட்ட
தரையிலிருந்து - மக்கள்
துயருறும் நிலை தொடராமலிருக்க
கடவுளைத் தான் வேண்டுகிறேன்...
போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!
கடவுளே! கண் திறந்து பாராயோ!
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html
அன்புடையீர்..
நீக்குதவறே செய்திருந்தாலும் மக்களின் துயர் தீரவேண்டும்..
இறைவனை பிரார்த்திப்போம்..
மனதை உலுக்கி எடுக்கும் படங்கள்...என்னவோ செய்கின்றது. நாம் வந்தாரை வாழவைக்கும் தமிழகமா என்றுத் தோன்ற வைக்கின்றது..
பதிலளிநீக்குஊடகங்கள் சென்னையை மையம் கொண்டுள்ளன..கடலூரையும் கண்டு கொள்ளலாமே. அரசு??? கடலூர் ஒவ்வொரு மழையிலும் புயலிலும் அடிவாங்கும் ஊர். அதை அரசு உணராமல் இல்லை. அதற்கேற்ப திட்டமிட்டு இயற்கைச் சீற்றத்திலிருந்து கடலூரைக் காக்க எத்தனையோ செய்திருக்கலாம். இதற்கு முன்னரெயே பாடம் புகட்டப்பட்ட பூமி அது. ஆனால் கற்கவில்லை நம்மவர்கள். இனியும் கற்கப் போவதில்லை. கற்றிருந்தால் இந்தப் பாதிப்பே இருந்திருக்காதே...
மனம் வேதனை அடைகின்றது...
அன்பின் துளசிதரன்..
நீக்குஒவ்வொரு பருவகாலத்திலும் இயற்கை நமக்கு பாடம் கற்றுத் தருகின்றது..
ஆனாலும் - மக்கள் யாரும் கற்றுக் கொள்வதில்லை..
வேதனைதான் மிச்சம்..