நேற்று இரவு, தகவல் அறிந்ததுமே - பரவசம்!..
அன்பு சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு விருது!..
தனித்தன்மையான படைப்பாற்றலுடன் - வலைத்தளத்தில் வலம் வரும் அன்பின் ஜெயக்குமார் அவர்கள் -
கடந்த
14/11 முதல் 23/11 வரை தஞ்சையில் நடைபெற்ற ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர்
கிங்ஸ் சார்பில் நடைபெற்ற ஆறாவது புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாளில்
நடைபெற்ற படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா எனும் நிகழ்வில்
கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் திருமிகு S.N.M. உபயதுல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில்,
முன்னாள் மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர் திருமிகு S. S. பழனி மாணிக்கம் அவர்கள்,
''மண்ணின் சிறந்த படைப்பாளி''
தஞ்சை மண்ணின் சிறந்த படைப்பாளி!.. - என சிறப்பிக்கப்பட்டுள்ள அன்பின் சகோதரர் அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!..
பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால் உருவாக்கப்பட்டது - கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
சங்கத்தின் கல்வி நிலையங்களுள் ஒன்றாக விளங்குவது உமாமகேசுவரனார் மேல்நிலைப் பள்ளி!..
பெருமைக்குரிய அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவர் -
அன்பின் ஜெயக்குமார் அவர்கள்!..
சங்கத்தின் கல்வி நிலையங்களுள் ஒன்றாக விளங்குவது உமாமகேசுவரனார் மேல்நிலைப் பள்ளி!..
பெருமைக்குரிய அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவர் -
அன்பின் ஜெயக்குமார் அவர்கள்!..
கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள், விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன் எனும் நூல்களுடன் தனது வலைப் பூக்களைப் பற்றியும் எழுதி வெளியிட்டுள்ள - ஜெயக்குமார் அவர்கள்,
கடந்த 26/10 அன்று மதுரையில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பு விழாவின் போது கரந்தை மாமனிதர்கள் எனும் நூலையும் வெளியிட்டு மகிழ்ந்தார்.
மறக்கக் கூடாத மாமனிதர்களைத் தேடி -
அவர்களைப் பற்றிய அரிய விஷயங்களை -
இளம் தலைமுறையினருக்காகப் பதிவு செய்து அளித்திருக்கும் நூல் -
கரந்தை மாமனிதர்கள்!..
அன்புச் சகோதரர் அவர்களே!.
அன்பினால் என்னைக் கட்டிப் போட்டவர்களுள் - தாங்களும் ஒருவர்.
அன்பினால் என்னைக் கட்டிப் போட்டவர்களுள் - தாங்களும் ஒருவர்.
புன்னகை!..
தங்களுடைய தேடல் - மிகவும் வியப்புக்கு உரியது.
தங்களுடைய வலைத் தளத்தில் தனித்துவமான கைவண்ணத்தில் -
படிப்பவர் கண்முன்னே, உலகின் சாதனையாளர்கள் பலரையும் -
நிறுத்திய பெருமைக்கு உரியவர் - தாங்கள்!.
கண்ணகியின் அடிச்சுவடுகளைத் தேடி நடந்த -
கண் பார்வையை இழந்து சாதனையாளராக விளங்கும் திரு. வெற்றிவேல்..
நாளைய கணிதத்தை நேற்றே கண்ட -
பாவேந்தரின் நினைவினைப் போற்றிய -
ஆயுதமேந்திய இயக்கத்தினரின் கொடூரத்தால் கைகளை இழந்த -
வரலாறு என்னை விடுவிக்கும் நாடுதான் பெரிது என வாழ்ந்து வரும் -
மணிப்பூரின் வீரப்பெண்மணி -
வெள்ளிப் பனி மலையின் மீது நடந்தே சர்வே செய்த நயின் சிங் ராவத் -
செய்யும் தொழிலே தெய்வம் என ஓடோடி வந்து உதவும் -
பார்வையற்றவர்களுக்கென உதித்த பகலவன் -
படிக்காத மேதை -
தேவதாசி எனும் கொடுமையிலிருந்து பெண்களை மீட்க வந்த -
தமிழுக்காக வாழ்ந்து தமிழ் மண்ணிலேயே தலை சாய்த்த -
பகுத்தறிவுப் பகலவனுக்கு - பெரியார் எனும் பட்டத்தை வழங்கிய -
மடமையைக் கொளுத்துவோம் எனப் பொங்கியெழுந்த -
காந்திஜி மேலாடையைத் துறந்த போது -
மேலாடையை மட்டுமல்லாமல் பொறியாளர் பணியையும் துறந்த -
முதல் ஜனாதிபதி மற்றும் செக்கிழுத்த செம்மல் ஆகியோரைப் போற்றிய -
பதினாறாவது வயதில் விடுதலைக்காக இன்னுயிர் துறந்த வீரத்தமிழச்சி -
எங்களைப் புத்தகத்தையும் பேனாவையும் எடுக்க விடுங்கள் என முழங்கிய
விண்ணில் கரைந்த -
தனக்குக் கல்வி பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களைப் புகழ்ந்துரைத்த -
- எனும் தங்களுடைய பதிவுகள் - என்றும் நினைவில் நிற்பவை.
இவையெல்லாம் - ஒரு முதற்குறிப்புக்காகத் தான்!..
தங்களுடைய வலைத் தளத்தில் -
மாதுளை முத்துக்களாய் இன்னும் அருமையான பல பதிவுகள்!..
மாவீரன் சே குவாராவின் தியாக வரலாறு கருங்கல்லையும் கரைய வைக்கக் கூடியது.
அப்படியிருக்க - நான் எம்மாத்திரம்?..
- என, தாங்கள் வழங்கிய பதிவினைப் படிக்கும்போதே - மனம் கலங்கிக் கண்ணீர் வடித்தேன். அந்த நாளை என்னால் மறக்கவும் கூடுமோ!?..
குடும்பத்துடன் இராமானுஜன் திரைப்படத்தினைப் பாருங்கள். திரைப்படம்
முடிவதற்குள், ஒரு சொட்டு - ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர் உங்களுடைய விழிகளில்
இருந்து, எட்டிப் பார்க்குமேயானால்,
அதுவே அந்த மாமேதைக்கு நீங்கள்
செலுத்தும் உண்மை அஞ்சலியாகும்.
இது -
கணிதமேதை இராமானுஜன் அவர்களைப் பற்றி வெளிவந்த திரைப்படத்திற்கு தாங்கள் வழங்கிய நற்சான்றிதழ்.
கணிதமேதை சீனிவாச ராமானுஜனைப் பற்றி தாங்கள்
தேடித் தேடி எடுத்த பொக்கிஷங்களையும் அதற்கான பெருமுயற்சியையும் -
இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கின்றது.
தாங்கள் கணிதமேதையைப் பற்றிய அரிய தகவல்களைத் தொகுத்த போது எளியேனும் ஒரு சிறு அணில் போன்று தங்களருகில் இருந்த நாட்கள் எல்லாம்
நினைவுக்கு வருகின்றன.
நான் சில தினங்கள் தஞ்சையில் இருந்தும் - தங்களுக்கு விருது வழங்கிய விழாவில் கலந்து கொள்ள இயலாமல் போனது.
கடந்த (20/11) வியாழன்று தஞ்சையிலிருந்து புறப்படும் முன் - தங்களைச் சந்திக்க வந்தேன்.
பணிச்சுமைகளுக்கு இடையேயும் இன்முகம் காட்டி வரவேற்று அளவளாவி - தங்களது கரந்தை மாமனிதர்கள் எனும் நூலைப் பரிசளித்த அன்பு நெஞ்சத்தை, என்னால் எந்நாளும் மறக்க இயலாது.
இந்த அன்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிலைக்க
அபிராமவல்லி அருள்வாளாக!..
அபிராமவல்லி அருள்வாளாக!..
தாங்கள் விருது பெற்ற செய்தி அறிந்து மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.
இதோ - அன்புக்குரிய Dr. B.ஜம்புலிங்கம் அவர்கள் கூறுகின்றார்.
தங்களின் பணிக்காக இத்தகைய விருது கிடைத்துள்ளது. பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. வலைப்பூவில் தாங்கள் தடம் பதிக்க நானும் துணையாக இருந்தேன் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது. தங்களின் முயற்சியும் அயராத உழைப்பும் நண்பர்களை அரவணைக்கும் பாங்கும் வாசிப்பின் மீதான ஆர்வமும் தங்களை இவ்வாறான பெருமைக்கு எடுத்துச் சென்றுள்ளது. இது ஓர் ஆரம்பமே. இன்னும் பல விருதுகளைப் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவ்வண்ணம் போல - இது ஓர் ஆரம்பமே!..
தாங்கள் -
மேலும் பல விருதுகள் பெறுவதற்கு அன்புடன் வாழ்த்துகிறேன்.
தங்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தவர்களுக்கும்
தங்களுக்கு வாழ்த்துரைக்கும் அன்பின் பதிவர்கள்
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
வாழ்க நலம்!..
* * *
சிறப்பான தொகுப்பு...
பதிலளிநீக்குநன்றி ஐயா...
மிக மிகச் சிறப்பான அழகானக் கட்டுரைத் தொகுப்பு நண்பர் கரந்தையாரைப் பற்றி. ந்ண்பர் இந்த விருதிற்க்கு மிகவும் தகுதியானவர். நண்பருக்கு வாழ்த்துக்கள். அவரை ஊக்கப்படுத்தி நமக்கு அறிமுகப்படுத்திய டாக்டர் திரு ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல.
பதிலளிநீக்குஇதைப் பாங்காகத் தொகுத்தளித்தத் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!!
அன்பின் துளசிதரன்..
நீக்குதங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
ஜெயக்குமார் ஐயா பற்றி மிகச் சிறப்பான தொகுப்பு ஐயா...
பதிலளிநீக்குஅருமை...
விருது பெற்ற அவர் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துவோம்.
அன்பின் குமார்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
இனிய நண்பருக்கு மகுடம் சூட்டிய பதிவு கண்டு அக மகிழ்கின்றேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பு சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் பற்றி தனியே ஒரு பதிவினையே அவருக்கு பாராட்டுரையாக தந்தமைக்கு நன்றி. ஏற்கனவே அவருடைய பதிவினில் நான் பாராட்டு தெரிவித்து இருந்தாலும், உங்களோடு சேர்ந்து பாராட்டுவதிலும் உவகை கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்லன எல்லாம் தர வேண்டிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களது கருத்துரையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
தங்கள் இனிய வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நண்பருக்காக தனி பதிவாக முழுமையாக ஒருமித்து சேர்த்து தாங்கள் தந்துள்ள விதம் அவருடைய எழுத்தின்மீதான தங்களின் (எங்களை அனைவரையும் போல) ஈர்ப்பையும், அவருடைய பல்துறை அறிவின் மீதான தங்களின் தாக்கத்தையும் உணர்த்துகிறது. விருது பெற்ற நண்பருக்கு மேலும் ஒரு விருது தங்களின் பதிவு. என் எழுத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களின் இனிய கருத்துரைக்கு நன்றி..
தங்கள் அன்பின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..
தங்கள் நண்பருக்கு மேலும் பல விருதுகள் கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி..
அருமையான சிறப்பான தொகுப்பு .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் !
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅவரது படைப்பாற்றலுக்கு கிடைத்த விருது.
தகவலுக்கு நன்றி.
அன்பு நண்பருக்கு..
நீக்குதங்களின் இனிய வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..
தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குவிருது கிடைத்த ஜெயக்குமார் ஐயாவுக்கு நல் வாழ்த்துக்கள்!
ஐயாவின் தள பதிவுத் தொகுப்புக்கள் மிக அருமை!
அவருடனான தங்களின் நட்பினையும் கண்டுணர்ந்தேன்!
மிகச் சிறப்பு!
வாழ்த்துக்கள் ஐயா!
அன்பின் சகோதரி..
நீக்குதங்கள் வருகையும் இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.. நன்றி..
ஜெயக்குமார் அவர்களின் நூலில் இடம்பெற்றவைகளை அழகாய் தொகுத்து அளித்தமைக்கு நன்றி.கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..
அன்பின் கருத்துரையுடன் - சகோதரர் கரந்தை JK அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியமைக்கு மனமார்ந்த நன்றி..
ஐயா, வணக்கம்
பதிலளிநீக்குதங்களின் பதிவு கண்டு பேச்சற்று நிற்கின்றேன், செயலற்று நிற்கின்றேன்
தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
இந்த எளியேனைப் பற்றி எழுத, தாங்கள் செலவிட்ட நேரம், எடுத்துக் கொண்ட முயற்சியும் அதிகம் என்பதை, இப்பதிவினைப் பார்க்கும் அனைவரும் அறிவர். தாங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பின் எல்லை கண்டு மலைத்துப் போய் நிற்கின்றேன். எல்லையற்ற அன்பையல்லவா என் மீது வைத்துள்ளீர்கள், இதற்கு எத்தகு தவம் செய்திருக்க வேண்டும் நான்.
ஐயா, என்னையே நான் கேட்டுக் பார்க்கிறேன், இத்தகு அன்பிற்கு முழுவதும் தகுதியானவன்தானா நான் என்று?
விடை எனக்குப் தெரிகிறது, புரிகின்றது
இனிமேலாகிலும், என்னைத் தகுதியானவனாக மாற்றிக் கொள், மாற்றிக் கொள் என என் உள் மனம் என்னை இடித்துரைக்கின்றது.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்
என்பதன் பொருளைத் தங்களின் பதிவு வழி அறிந்தேன்.
மிக்க நன்றி ஐயா
என்றும் வேண்டும் இந்த அன்பு
அன்பின் சகோதர..
நீக்குஅவையடக்கமும் பெருந்தன்மையும் வெளிப்படுகின்றன - தங்களின் கருத்துரையில்!..
உங்களுக்குத் தான் நான் கடமைப்பட்டுள்ளேன். அதுவே உண்மை!..
தங்களின் வருகை என்னை உற்சாகப்படுத்துகின்றது. தொலைபேசியில் என்னுடைய நலம் விசாரித்தது - என்னை மேலும் மகிழ்விக்கின்றது.
அன்பிற்கும் பண்பிற்கும் அடைக்கும் தாழ் இல்லவே இல்லை!..
வாழ்க நலம்!..
தங்களின் பதிவு வழி வாழ்த்திய
பதிலளிநீக்குஅன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றியினைத்
தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன் ஐயா
அன்பின் சகோதர..
நீக்குதஞ்சையம்பதியின் வழியாக தங்களை வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் - நானும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்..
இன்பம் என்னும் நாதமே
பதிலளிநீக்குநானிலம் போற்றும் வேதமே
புதுவை மாநிலம் ஒதும் ஓயாது
ஒப்பற்ற உமது சிறப்பை...
வாழ்த்துகிறேன் வளமோடு
வாழிய வாழிய பல்லாண்டு!
அன்பன்;
புதுவை வேலு/யாதவன் நம்பி
www.kuzhalinnisai.blogspot.com
அன்பின் யாதவன் நம்பி..
நீக்குதங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..
இனிய வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றி..
வாழ்க நலம்!..