திருவிழா போன்ற கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரர்.
வந்தவரும் - சொந்த விஷயங்களைப் பேசிவிட்டுப் போகாமல் -
கதி கலங்கிப் போயிருக்கும் இந்த நாட்டின் நடப்பைப் பற்றிப் பேசி மேலும் கலக்கியிருக்கின்றார்.
அந்தக் கலக்கலை நம்முடன் பகிர்ந்து கொண்டு -
நம்மையும் கலக்க அழைத்திருக்கின்றார் - கில்லர்ஜி!..
அதன்படி, - காந்திஜி வினவிய பத்து கேள்விகளுக்கு நம்மிடமும் விடையை எதிர்பார்க்கின்றார்..
1. மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என விரும்புகின்றாய்?..
வணக்கம் பாபுஜி!..
தாங்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியதும் ஓடோடி வந்து முத்தமிட்ட மண் எங்கள் தமிழ் மண்!..
துணிவிருந்தால் சுடு!.. - என்று வீரமுகம் காட்டி நின்ற வள்ளியம்மை பிறந்த மண்..
இந்தத் தமிழ்மண்ணில் தஞ்சையம்பதியில் தான் மீண்டும் பிறக்க வேண்டும்!..
2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால்!..
அப்படி நடக்குமேயானால் - பாபுஜி... தாங்கள் கூறியபடி தான்!.. பாரதத்தின் முதுகெலும்பை நிமிர்த்துவேன்!..
3. இதற்கு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?..
வெளிநாட்டவர் இந்த விஷயத்தில் தலையிட அனுமதியில்லை.. வேறு வழியின்றி வெளிநாட்டிற்குச் சென்றவர்கள் விரைந்து வந்து - தாமும் இணைந்து பங்காற்றுவர்.
4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?..
அவர்களுக்கு என்று தனியாக ஏதும் இல்லை. ஆயினும், உண்மையிலேயே நிராதரவான முதியோர்கள் கவனத்தில் கொள்ளப்படுவர்.
முதியோர்களைத் தத்தெடுத்து அன்பு செலுத்தும் மனோபாவத்தில் இளையோர் இருப்பர்.
தவிரவும் முதியோர்களும் கடைசி காலம் வரை குடும்பத்தின் அங்கமாகவே இருப்பர். அவர்களைப் பரிவுடன் பராமரிக்காத பிள்ளைகளுக்குக் கடும் தண்டனை விதிப்பேன்.
5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?..
கற்றறிந்தவர்களுக்கே கோட்டைக் கதவுகள் திறக்கும்.
6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதி மன்றங்களுக்குப் போனால்?..
அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் - விடைத்தாள் என்று ஏதும் இருக்காது. தேர்வுகள் அனைத்தும் நவீனமாகும். திறமையை நிரூபித்துவிட்டு அவரவரும் மதிப்பெண்களை எடுத்துக் கொள்ளலாம்.
7. விஞ்ஞானிகளுக்கு என்று ஏதும் இருக்கின்றதா?..
பழைமை பொலிவு பெறும். நிஜமாகவே பசுமைப் புரட்சி ஏற்படும். கால ஓட்டத்துடன் இணைந்து ஆக்கபூர்வமாக சாதிக்கும் விஞ்ஞானிகளுக்கு என்றும் ஆதரவு உண்டு.
8. இதை - உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்களும் செய்வார்களா?..
செய்வதன்றி வேறு வழி இருக்காது.மேலும் புதிய உத்திகளைக் கையாளுமாறு அவர்கள் மக்களால் வற்புறுத்தப்படுவார்கள்..
9. மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக?..
லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்பட்டிருக்கும். அவரவருக்கும் வேலை இருப்பதால் வீண் பேச்சுகளுக்கு இடமிருக்காது. அரட்டை அரங்கங்கள் காணாமல் போயிருக்கும்.
10. எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டும்? - என இறைவன் கேட்டால்!..
பாபுஜி.. தாங்கள் கூறியபடி கண்ணியத்துடன் நான் வாழ்ந்து வருகின்றேன். மேலும் வள்ளுவப் பெருமானும்,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று..
என்று கூறுகின்றார்.
ஆட்சிப் பொறுப்பிலும் இருந்து - நான் நல்லன பலவற்றை நடைமுறைப் படுத்தியிருக்கின்றேன்.
அப்படியிருக்க, இறைவன் என்னை பாவம் செய்தவன் என்று கூறுவான் எனில், என்ன செய்வது!..
அனைத்தும் உன் செயல் என்று அமைதியாகி விடுவேன்..
எந்தப் பிறவி எடுத்தாலும் ஈசன் துணை உண்டு தானே!..
பாபுஜியின் மனம் மகிழ்வதாகத் தெரிகின்றது.
***
அவ்வேளையில் - விழித்துக் கொண்டேன்.
விண்ணை நோக்கியவாறு சேவல் கூவுகின்றது!..
நண்பர் கில்லர் ஜி அவர்களின் வினாக்களுக்கு என் பதில்கள் சரிதானா!..
இந்த கேள்விகளைத் தொடர்வதற்கு நான் அழைக்கும் நண்பர்கள்:-
அன்பு மனசுக்கு சொந்தக்காரர்
சே. குமார்
ஊருக்கு நல்லதே நினைக்கும்
கோமதி அரசு
காவியக் கவிபாடும்
இனியா
எண்ணங்களை எழுத்தாக்கும்
தளிர் சுரேஷ்
சந்தித்ததை சிந்திக்கும்
வெங்கட் நாகராஜ்
இந்த கேள்விகளைத் தொடர்வதற்கு நான் அழைக்கும் நண்பர்கள்:-
அன்பு மனசுக்கு சொந்தக்காரர்
சே. குமார்
ஊருக்கு நல்லதே நினைக்கும்
கோமதி அரசு
காவியக் கவிபாடும்
இனியா
எண்ணங்களை எழுத்தாக்கும்
தளிர் சுரேஷ்
சந்தித்ததை சிந்திக்கும்
வெங்கட் நாகராஜ்
விறுவிறுப்பான விடைகளுக்குக் காத்திருக்கின்றேன்!..
கனவுகள் தொடரட்டும்!..
கருத்துக்கள் மலரட்டும்!..
வாழ்க நலம்!..
***
கில்லர்ஜி ஆரம்பித்து வைத்து சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளார். என்னையும் இணைத்திருந்தார். எனது பக்கத்தில் எனது மறுமொழிகளைத் தந்துள்ளேன். தங்களின் மறுமொழிகளைக் கண்டேன். நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குவித்தியாசமான சிந்தனை அவருடையது..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அன்பு நண்பருக்கு வணக்கம் எனது விண்ணப்பத்தை ஏற்று என்னையும் மதித்து காந்திஜி அவர்களின் கேள்விகளுக்கு சிறப்பாக சிந்தித்து பதில்கள் சொல்லி அசத்தி விட்டீர்கள் அருமையிலும் அருமை நன்றி. எப்படியும் மீண்டும் காந்திஜி இந்தவாரம் எனது கனவில் வருவார் தங்களது பதில்களை அவரிடம் சமர்ப்பிக்கிறேன் மீண்டும் நன்றி நண்பரே எனது பதிவுக்கு வராமலே பதிவு போட்டு விட்டீர்களா ?
பதிலளிநீக்குகுறிப்பு – நண்பரே தயவு செய்து தலைப்பின் இலக்கம் 5 போட்டு விடவும்
1. கில்லர்ஜி
2. கரந்தை ஜெயக்குமார்
3. Dr. B. ஜம்புலிங்கம்
4. மைதிலி கஸ்தூரி ரெங்கன்
5. துரை செல்வராஜூ
நன்றி
அன்புடன்
கில்லர்ஜி.
அன்பின் ஜி..
நீக்குஉண்மையிலேயே வித்தியாசமான கேள்விகள்..
தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..
வாழ்க நலம்..
பதில்கள் அருமை + பலதும் நடக்கணும் ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..
காந்திஜி கண்ட கனவு நன்வாகுமாறு அமைந்திருக்கின்றது உங்கள் பதில்கள். கேட்கப்பட்ட கேள்விகளும், கொடுத்தப் பதில்களும் மிகவும் அவசியமானவை. மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் பதில்கள் அனைத்தும் மிகவும் அருமையாய் அமைந்து விட்டன என்றே சொல்ல வேண்டும். ஒரேயொருக் குறை தான்.. அதான் அரட்டையை ஒழித்து விடுவதாக சொல்லியிருக்கிறீர்களே . அது தான்....... உங்கள் ஆட்சிக்கு என் அரட்டையினால் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு. அரட்டையை மட்டும் அனுமதியுங்கள். அது தான் என் கோரிக்கை.
சீரியசான தொடர் ஓட்டத்தில் நான் குறுக்கு சால் ஓட்டி விட்டேனோ! என்னை மன்னித்து விடுங்கள். சும்மாத் தமாஷ் தான் (LOL).என் கருத்து, பதிவின் சாரத்தை நீர்த்துப் போக வைத்து விடும் என்று எண்ணினால் வெளியிட வேண்டாம். நான் தவறாக என்ன மாட்டேன்.
நானும் பாபுஜியின் தீவிரமான பக்தை என்பதில் சந்தேகமே வேண்டாம்.
அன்புடையீர்..
நீக்குஅரட்டை அரங்கிற்கு தாங்கள் பொறுப்பு எனில் பிரச்னை ஏது!..
கூடவே - ராசியையும் விஷ்ணுவையும் அழைத்து வந்து விடுங்கள்..
நல்லாட்சியில் நகைச்சுவையும் அவசியம் தானே!..
தங்கள் அன்பான கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
காந்திஜிக்கு உங்கள் பாணி பதில் அருமை !
பதிலளிநீக்குஆன்மீகப் பதிவில் அசத்தும் ஐயாவின் பதில்கள் மிகவும் அருமை... சிறிய பதில்களாக இருந்தாலும் சிந்தை கவரும் பதில்கள்...
பதிலளிநீக்குஎன்னையும் மாட்டி விட்டுட்டீங்களே ஐயா... முயற்சிக்கிறேன்...
அன்பின் குமார்..
நீக்குதங்களுடைய வித்தியாசமான விடைகளை அறிய ஆவல்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஅருமையான பதில்கள்! அசத்திவிட்டீர்கள்!
வாழ்த்துக்கள்!
ஐயா! எனது இன்றைய பதிவைப் பார்க்க அழைக்கின்றேன்!
தீபாவளிக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றமைக்காக
நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளேன்!
அங்கு உங்கள் ஆசி பதியக் கிடைத்தால் மனம் மிக மகிழ்வேன் ஐயா!
மிக்க நன்றி ஐயா!
நன்றி கூறுகின்றேன்!...
அன்பின் சகோதரி..
நீக்குகவிதைப் போட்டியில் பரிசு வென்றமைக்கு நல்வாழ்த்துக்கள்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான பதில்கள் ஐயா
பதிலளிநீக்குதங்களின் எண்ணப்படி நடந்தால்
காந்தி மகிழ்வார்
மக்கள் மகிழ்வர்
நன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்களுடைய பதிவில் -
தாங்கள் அளித்துள்ள விடைகளும் மிக அருமை - ஐயா..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான் பதில்கள்.
பதிலளிநீக்குதிறமையை நிரூபித்து விட்டு அவர் அவர்களும் மதிபெண் எடுத்துக் கொள்வது நன்று.
விஞ்ஞானிகளால் பழமையும், பசுமையும் பொலிவு பெறும் என்பதை கேட்கும் போது மகிழ்ச்சி.
நானுமா? முயற்சிக்கிறேன் சார்.
அன்புடையீர்..
நீக்குநவீன சிந்தனைகளுடன் அருமையான விடைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்..
தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி..
தேசப்பற்று மிக்க நீங்கள் தேசப்பிதா காந்தியை மிகவும் மரியாதையோடு அழைத்ததில் வியப்பேதும் இல்லை.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குபாபுஜி அவர்களுக்கு தாங்கள் அளித்த விடைகளும் இனிமை.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
இந்த விளையாட்டில் என்னையும் இழுத்து விட்டிருக்கிறார்கள்...!
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குஎதையும் மாறுபட்ட கோணத்தில் நோக்கும் தங்களின் மேலான விடைகளை அறிய ஆவலாக இருக்கின்றோம்..
தங்கள் இனிய வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
தங்களது பதில்கள் மிகவும் அருமை! ஐயா! ரசித்தோம் ஐயா! அனைத்தையுமே! மிக நல்ல பதில்கள்! காந்தி இல்லையே என்ற குறை உண்டு மனதில்!
பதிலளிநீக்குஅன்பின் துளசிதரன்..
நீக்குகாந்திஜி நம்முடன் இருப்பதால் தானே - இப்படியெல்லாம் சிந்தனைகள் மலர்கின்றன..
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
தங்கள் பதில்கள் அருமையாக இருக்கிறது. 10 பதில் என்னை மிகவும் கவர்ந்து விட்டது ஐயா.
பதிலளிநீக்குஅன்பின் சகோதரி..
நீக்குதங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..
அன்பின் கருத்துரைக்கு நன்றி..
உங்கள் அழைப்பை ஏற்று பதில்கள் அளித்து விட்டேன்.
பதிலளிநீக்குகாலதாமதம் ஆகிவிட்டது மன்னிக்கவும்.
http://mathysblog.blogspot.com/2014/11/blog-post_28.html
அன்புடையீர்..
பதிலளிநீக்குதங்கள் தளத்தில் மிகச் சிறப்பாக விடைகளைக் கண்டேன்..
இது ஒரு மகிழ் விளையாட்டு.. அவ்வளவே!..
தங்களுடைய பெருந்தன்மையான கருத்து கண்டு மனம் நெகிழ்கின்றது..