சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - 03.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடுகயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!..
ஓம் ஹரி ஓம்!..
ஆலய தரிசனம்
திரு ஆனைக்கா
ஈசன் - ஸ்ரீஜம்புகேஸ்வரர். அன்னை - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை சிலந்தியும் யானையும் வழிபட்டு சிறப்பெய்திய திருத்தலம்.
ஜம்பு முனிவர் - வெண் நாவல் மரமாக விளங்க , அம்மரத்தின் நிழலில் அம்பிகை இருந்து வழிபடுவதற்கு - ஐயன் காவிரி நீரில் லிங்கமாக விளைந்த திருத்தலம். பஞ்ச பூதத் திருத்தலங்களுள் இத்திருத்தலம் - நீரின் பகுதி.
வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும்ஏதம் இல்லையே. 3/53
- திருஞானசம்பந்தர்
தாரமாகிய பொன்னித் தண்துறை ஆடி விழுத்தும்
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள் என ஆங்கே
ஆரங்கொண்ட எம் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே/ 7/75.
- சுந்தரர்
பிரம்மன் - திலோத்தமையைக் கண்டு மயங்கிய பாவம் தீர பூஜித்த தலம்.
ஆனை வழிபட்டதால் ஆனைக்கா - என்றானது. இறைவனைப் பூஜித்த சிலந்தி தான் - மறுபிறப்பில் கோச்செங்கட் சோழராகப் பிறந்தது.
யானை ஏறாதபடிக்கு மாடக்கோயில்களைக் கட்டியவர் கோச்செங்கட் சோழர்.
பின்னொரு சோழ மன்னன் காவிரியில் நீராடும் போது தவறி விழந்த முத்து மாலையை - ஈசன் அபிஷேக நீரின் மூலமாக ஏற்றுக் கொண்டு அருளினார்.
ஆதி சங்கரர் - தாடங்கத்தில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து,
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிக்கு - அதை அணிவித்து அம்பிகையின் உக்ரம் தீர்த்தார்.
சிவாய திருச்சிற்றம்பலம்.
விளக்கத்துடன் பகிர்வு மிகவும் அருமை ஐயா... நன்றி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
அன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
ஆண்டாள் பாசுரம் அருமை. திருவானைக்கா பற்றிய செய்திகளும் மிக அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
தினம் ஒரு பாவை பாசுரம் , படிக்க அருமை. விளக்கங்கள், மற்றும் படங்கள் என தெய்வீக மனம் கமழும் வலை.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியைப் போற்றித் திகழும் சிறப்பான பகிர்வுக்குப்
பதிலளிநீக்குபாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .
அன்பின் சகோதரி..
நீக்குஇனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
பாவை பாசுரம் தந்த கோதை திருவடி தொழுதேன்!
பதிலளிநீக்குஇன்றும் அருமையான பாசுரத்துடன் அழகிய படமும் மனதை நிறைக்கின்றது!
வாழ்த்துக்கள் ஐயா!
அன்பின் சகோதரி..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை சிலந்தியும் யானையும் வழிபட்டு சிறப்பெய்திய திருத்தலம்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
திருவானைக்கா...... சிறப்பானதோர் சிவஸ்தலம். அகிலாண்டேஸ்வரி எல்லோருக்கும் அருள் புரியட்டும்....
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வேண்டுதல் பலிக்கட்டும்
இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
இங்கு எடுத்துக் காட்டிய சம்பந்தர் தேவாரப் பாடலை திரும்பத் திரும்ப படிக்கும் போது அந்த பாடலின் ஒலி இன்பத்தை உணரலாம்!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குமிக அருமையான திருப்பாடல் அது!..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..