நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 18, 2013

இறை நிழலில் வாலி

காலத்தை வென்று நிலைத்திருக்கும் திரைப்பாடல்கள் பலவற்றை நமக்கு வழங்கிய -

பெருமதிப்புக்குரிய கவிஞர் வாலி அவர்கள் தனது எண்பத்திரண்டாம் வயதில் இறை நிழலை அடைந்தார்.


கடல் நீர் நடுவே பயணம் போனால் 
குடிநீர் தருபவர் யாரோ!...
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர 
துணையாய் வருவது யாரோ!..

- என்று மீனவர்களின் துயரத்தைக் கண்முன்னே காட்டியவர்.

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்!..
காக்கா கூட்டத்தைப் பாருங்க!..
அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க!..

வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம்!..
அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்!..
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா?..
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியமா?..

- என்று வாழ்க்கையின் பக்குவத்தைக் காட்டியவர்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!..
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!..

மாபெரும் சபை தனில் நீ நடந்தால் 
உனக்கு மாலைகள் விழ வேண்டும்!..
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் 
இவனென்று போற்றிப் புகழ வேண்டும்!..

- என முத்திரை பதித்த கவிஞர் வாலி அவர்களின் ஆன்மா சாந்தியடைவதாக!.

ஸ்ரீராம காவியத்தையும் பாரதத்தையும் கண்ணன் கதையையும் ஸ்ரீராமானுஜர் வரலாற்றையும் குறுங்கவிதையாக வடித்து அன்னைத் தமிழுக்கு அழகு செய்தவர்.

அவர் வடித்த பாடல்களில்  - 

எந்நேரமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் ''..ஜனனி ஜனனி!..'' எனும் பாடலின்படி அவர் - அன்னையின் திருவடி நிழலில் இன்புற்றிருப்பாராக!..


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ!..

ஜனனி ஜனனி ஜனனி ஜனனி!.. 

ஒரு மான் மழுவும் சிறுகூன் பிறையும் 
சடை வார்குழலும் விடைவாகனமும் 
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே 
நின்ற நாயகியே இட பாகத்திலே! 

ஜகன் மோகினி நீ!..
சிம்மவாஹினி நீ!..

சதுர் வேதங்களும் பஞ்சபூதங்களும் 
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் 
அஷ்ட யோகங்களும் நவயாகங்களும் 
தொழும் பூங்கழலே மலைமாமகளே!.. 

அலை மாமகள் நீ!..
கலை மாமகள் நீ!..

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த 
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே 
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள் 
பணிந்தேத்துவதும் மணிநேத்திரங்கள் 

சக்தி பீடமும் நீ!.. ஸர்வ மோக்ஷமும் நீ!..
சக்தி பீடமும் நீ!.. ஸர்வ மோக்ஷமும் நீ!..

ஜனனி ஜனனி!..
* * *   

5 கருத்துகள்:

  1. மிகவும் வருத்தமாக இருக்கின்றது!..

    பதிலளிநீக்கு
  2. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக !

    பதிலளிநீக்கு
  3. அமரர் வாலி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  4. நான்கு தலைமுறைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுகின்றார் - திரு. வாலி அவர்கள்!.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..