நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
வெள்ளிக்கிழமை
அப்பர் ஸ்வாமிகள்
திருமறைக்காட்டில் அடைத்துக் கிடந்த
திருக்கோயிற் கதவங்கள் திறந்து கொள்ளப் பாடியருளிய திருப்பதிகத்தின் முதல் பாடல்
பண்ணின் நேர்மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலஞ் செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள்
செய்ம்மினே.. 5/10/1
பண் போன்ற மொழி உடையவளாகிய உமாதேவியை ஒருபங்கிற் கொண்டு மண்ணுலகத்தவர் வலம் செய்து வணங்குகின்ற திருமறைக்காட்டில் உறையும் பெருமானே..
உமது திருக்கோயிலின் கதவுகள் வேதங்களால் அடைக்கப் பெற்றிருக்கின்றன..
அடியேன் எனது கண்களால் உமது திருக்கோலத்தினைக் கண்டு மகிழுமாறு, இக்கதவுகளைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக....
ஓம் நம சிவாய
***

பணத்தாலும் திறக்க முடியாத கதவுகளை இறைவன் அருளாலும், கருணையாலும் பாடல்களால் திறந்திருக்கிறார்கள்...
பதிலளிநீக்குநமச்சிவாய என்று சொல்வோமே..
இறைவன் அருளும், கருணையும்ம் நமது நம்பிக்கையும் பக்தியும் காரணம்...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
இந்தப் பாடல் கூட திருவருட்செல்வர் படத்தில் இடம்பெற்றிருந்தது இல்லையா?
பதிலளிநீக்குஆமாம்...
நீக்குசிறப்பான பாடல்...
படிக்கும் காலத்தில் காலை பிரார்த்தனையில் இப் பாடல் பாடி இருக்கிறோம்.
பதிலளிநீக்குதிருமறைக் காட்டு இறைவா வணங்குகிறோம் .
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா