நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 02, 2026

நவீனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி  
திங்கட்கிழமை

சமையலறையில்  இருக்க  வேண்டியவை 
என, எத்தனையோ  விதமான 
உபகரணங்கள் வந்து விட்டன..

அத்தகையவற்றுள் 
இலகு ரக மின் உபகரணங்களத் தவிர்த்து 

இன்றைய
சமையலறையில்
அவசியம் இருக்க வேண்டிய எளிய உபகரணங்களுள் சில ..

இவற்றுக்கு மேலும் பலவகை இருக்கலாம்...  அவை அவரவர் விருப்பம்...

ஒன்று மட்டும் நிச்சயம்...

அன்றைய 
சமையலறையின் தோற்றத்தை மாற்றி விட்ட காரணிகளால் - 

ஆரோக்கியத்தைக் கொண்டு வருவதற்கு இயல வில்லை...

 










படங்கள்
இணையத்தில்
பெறப்பட்டவை..

 உபகரணங்கள் யாதாயினும் அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்..

நலம் நம் கையில்

ஓம் நம சிவாய 
***

16 கருத்துகள்:

  1. நல்ல யோசனை. நல்ல கலெக்ஷன். வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
  2. சிறு உரல்களை விட்டு விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கான படங்கள் தொலைந்து விட்டன...

      தேடிக் கொண்டு இருக்கின்றேன்..

      நீக்கு
  3. பூண்டு தோல் உரிக்க எவ்வளவோ உபகரணங்கள் வாங்கியும் சரியில்லை. கையால்தான் உரிக்க வேண்டி இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூண்டை உதிர்த்து துணியில் முடிந்து தரையில் நாலு மொத்த மொத்தினால் உரிப்பது சுலபம்...

      நீக்கு
  4. அதே போல காய்கறி கட்டர் என்று சில உபகரணங்கள் வாங்கி சரியாக வராததுதான் மிச்சம்.  மெட்டல் அல்லது மர பிளேட்டில் காய் நறுக்குவதே சிறந்தது.  நேற்று இடதுகை கட்டை விரலையும் கரகரவென நறுக்கிக் கொண்டேன்.  பீன்ஸ் நான்கைந்தை ஒன்றாக வைத்து நறுக்கும்போது, பீன்ஸ்  முன்பின்னாக உருண்டு, நிறுத்துவதற்குள் இரண்டு இழுவை ஆகிவிட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வருடங்கள் சமைத்து இருக்கின்றேன்... எவ்வித காயமும் ஏற்பட்டதில்லை

      நீக்கு
    2. ​இதுவரை எனக்கும் காயம் பட்டதில்லை.

      நீக்கு
  5. காய் கட் செய்ய எவர்சில்வர் போர்ட் உபயோகிக்கிறோம். மரமும் பரவாயில்லை. பிளாஸ்டிக் கெடுதல். ஒரு சில உபகரணம் தவிர மற்றவற்றை உபயோகிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிளாஸ்டிக் கெடுதல். தான்... எங்க வீட்டில் இன்னும் அரிவாள்மனை தான்..

      மகிழ்ச்சி
      நன்றி

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சமையலறை உபகரணங்கள் படங்கள் அனைத்தும் அருமை. கலர்கலரான பிளாஸ்டிக் கெடுதல் என இப்போது அலங்கார பாட்டில்கள் மளிகை சாமான்கள் வைத்துக் கொள்ளவென வந்து விட்டன. அவைகளையும் பத்திரமாக கையாளாமல் விட்டு விட்டால், சட்டென உடைவது உறுதி. அதை விட எவர்சில்வர் சம்புடங்களை கையாளலாம்.

    தாங்கள் பகிர்ந்த படங்களும் சிறப்பு.

    நானும் அரிவாள்மனையில்தான் இன்னமும் காய்கள் நறுக்கி, தேங்காய் துருவுதல் என செய்து கொள்கிறேன் . கத்திகள் பழகினாலும், இதுதான் சிறப்பாக உள்ளது நீண்ட நாள் பழக்கத்தை விட இயலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லனவற்றைத் தேர்ந்து கொள்வதே அனுபவம்...

      விரிவான கருத்துரைக்கு மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு
  7. படங்கள் அனைத்தும் அருமை.
    காய்கறி கட்டர் எல்லாம் சில காலத்துக்கு மட்டும்தான் உபயோகப்படும்.

    காய்கறி கட்செய்ய நாங்களும் மரப்பலகைதான், மர சிறு உரலும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      வருகையும்
      கருத்துரையும்
      மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..