நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
திங்கட்கிழமை
தஞ்சாவூர் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுவையான நற்செய்தி:
தஞ்சாவூர் ஜங்ஷனில் திறக்கப் பட்டுள்ளது 'ரயில் கோச் ரெஸ்டாரன்ட்'!.. 🚂
45 வருட பாரம்பரியமுடைய தஞ்சாவூரின் புகழ் பெற்ற 'ரயிலடி வி. சுப்பையா டிபன்ஸ்' (Railadi V. Subbaiya Tiffins) நிறுவனத்தினர் தங்களது புதிய ரயில் கோச் உணவகத்தை
(AC) கடந்த வெள்ளிக்கிழமை (20/02/26) அன்று தஞ்சாவூர் சந்திப்பு நிலைய - பிரதான வாயிலின் எதிர்ப்புறத்தில் கோலாகலமாகத் திறந்துள்ளனர்..
பாரம்பரிய சுவையுடைய சைவ உணவுகளை ரயில் பெட்டிக்குள் குளுகுளு என, அமர்ந்து சாப்பிடுவது மாறுபட்ட புதிய அனுபவம்! ..
ரயில் கோச் உணவகத்தின் உட்புறம் முழுவதும் தஞ்சையின் மண் வாசம் கலையழகுடன் கூடி தனித்துவமாக நிரம்பியுள்ளது..
ரயில் பயணத்திற்கு முன்னோ அல்லது பிறகோ குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு இது ஒரு சிறப்பான இடம்...
படங்களுக்கு நன்றி
Fb
தஞ்சை வாழ்க..
***







எனது தஞ்சைப் பயணத்தின்போது இதை நான் மிஸ் செய்ய மாட்டேன்!
பதிலளிநீக்குவருக வருக...
நீக்குமகிழ்ச்சி .
நன்றி ஸ்ரீராம்
எனது பள்ளிப்பருவங்களில் ரயில்வே ஸ்டேஷன் அருகே 'ஆனந்த் பவன்', 'நியூ பத்மா கபே' அருகில் சுப்பையா பிள்ளை பால் கடை என்று வைத்திருந்தார் ஒருவர். ஓஹோவென்று வியாபாரம். அந்தப் பாலில் பனங்கற்கண்டு போட்டு கொடுத்தார் என்று நினைவு. அவர்தான் இந்த சுப்பையா பிள்ளை என்றால் ஆச்சர்யப்பட மாட்டேன்!
பதிலளிநீக்குஅந்தக் கடை தான்
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நல்ல விஷயம். தஞ்சை ரயிலடிக்கு வந்தால் இனி வெளியே சென்றுதான் ஒரு நல்ல உணவகத்தை தேட வேண்டுமென்ற அவசியமில்லை. உணவகத்தின் படங்களும் நன்றாக உள்ளது. நல்லதோரு தகவலுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அவசியம் வருக..
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா..
தகவல் நன்று. தஞ்சை வந்தால் சென்று பார்க்க வேண்டும் என்று குறித்துக் கொண்டேன். தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குவருக வருக...
நீக்குமகிழ்ச்சி .
நன்றி வெங்கட்
இப்படிப்பட்ட உணவகம் ஒன்று பெங்களூரில் உண்டு. பெங்களூரிலிருந்து குக்கே சுப்ரமண்யா செல்லும் வழியிலும் உண்டு. முன்பு, தஞ்சை ரயிலடியில் காபி நன்றாக இருக்கும் என்பார்கள்.
பதிலளிநீக்குதங்களுக்கு நல்வரவு..
நீக்குஅன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி .
நன்றியம்மா
அது சரி... விலையைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே. நல்லா இருக்கா? அடுத்த முறை நிச்சயம் செல்வேன்.
பதிலளிநீக்குதங்களுக்கு நல்வரவு...
நீக்குவிலை நியாயம் என்றே அறிகின்றேன்...
இவர்களது
தயாரிப்புகள் தரமானவையே...
மகிழ்ச்சி .
நன்றி..
ரயில் கோச் ரெஸ்ராடென்ஸ் நிறுவனத்தினருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதஞ்சை வரும் பலருக்கும் மகிழ்ச்சியான செய்தி.
அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி .
நீக்குநன்றியம்மா
ரயில் கோச் ரெஸ்ராடென்ஸ் பார்க்க அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை.
தகவலுக்கு நன்றி.
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி .
நீக்குநன்றியம்மா