நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 09, 2025

விசாகம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 26
திங்கட்கிழமை

வைகாசி விசாகம்


தத்ததன தானத் ... தனதான

இத்தரணி மீதிற் ... பிறவாதே
எத்தரொடு கூடிக் ... கலவாதே

முத்தமிழை யோதித் ... தளராதே
முத்தியடி யேனுக் ... கருள்வாயே

தத்துவமெய்ஞ் ஞானக் ... குருநாதா
சத்தசொரு பாபுத் ... தமுதோனே

நித்தியக்ரு தாநற் ... பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் ... பெருமாளே..
- திருப்புகழ் -

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.. 46

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. 51
- கந்தர் அனுபூதி -
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

சிவாய நம ஓம்
**

8 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வைகாசி விசாகதன்று முருகனை காலை எழுந்தவுடன் தரிசித்துக் கொண்டேன்.

    /உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. /

    முருகா.. முருகா..
    முருகா.. முருகா..
    முருகா சரணம்
    முருகா சரணம்.
    முத்துக் குமரா சரணம் 🙏.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்
      முருகா சரணம்

      தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  2. வைகாசி விசாகத் திருநாள்... எங்கள் வடிவேல் குமரனின் மண நாள்....

    அனைவரையும் காப்பாய் முருகா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்
      முருகா சரணம்

      தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. முருகனுக்கு சிறந்தநாளான வைகாசி விசாகம் நாளில் பாடல்பாடி தரிசித்துக்கொண்டோம்.

    அனைவர் நலனுக்கும் அவனருளை வேண்டி நிற்போம்.

    வெற்றி வேல் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்
      முருகா சரணம்

      தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  4. முருகா சரணம் , கந்தா சரணம்.
    திருப்புகழை பாடி முருகனை வேண்டிக் கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்
      முருகா சரணம்

      தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..