நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 04, 2024

கோலாகலம் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 22
வியாழக்கிழமை


இப்போது நடுப்பகல் 1: 30.
அன்னதானத்தில் தயிர் சோறு மட்டும் பெற்றுக் கொண்டு திருக்கோயிலை நோக்கி நடந்தேன்..

கரையேறிய இடத்தில் இருந்து திருக்கோயில் கொஞ்ச (அறுநூறு மீட்டர்) தூரம் தான்..








கொடி மரம்
கொடி மரத்தருகில் இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.. 

கோபுரத்தின் அருகிருந்து தரையில் ஒளிபடுமாறு மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததால் அந்த அழகைப் படமெடுக்க இயலவில்லை..

திருக் கோயிலின் சில காட்சிகள் - இங்கே..







தகிக்கின்ற வெயிலைப் பொருட்படுத்தாமல்
திருக்கல்யாண மண்டபத்தின் அருகிலும்
கோயிலின் எதிர்ப்புறத்தில் கொள்ளிடக்கரைப் படிக்கட்டுகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இடம் பிடித்து அமர்ந்திருந்தனர்..




நந்தீசனுக்கும் சுயம்பிரகாஷிணி தேவிக்கும் கல்யாண விசேஷங்கள் முன்னிரவு ஏழு மணியளவில் தொடங்கி எட்டரை மணியளவில் நிறைவடைந்தன.. 




கோயிலின் எதிரில் கொள்ளிடக் கரையில் நின்று அங்கே அமைக்கப்பட்டிருந்த காட்சித் திரையில் கண்டு இன்புற்றோர் ஏராளமானோர்.. அவர்களில் நானும் ஒருவன்..





மாங்கல்ய தாரணம் மங்கல ஆரத்திக்குப் பின் ஸ்வாமிகள் திருவீதி எழுந்தருளினர்.. தரிசித்து திருநீறு பெற்றுக் கொண்டு ஒன்பதரை மணியளவில் பேருந்து வழி தஞ்சைக்குப் புறப்பட்டோம்..


வைபவங்கள் நிறைவுற்ற பின்
கோயிலின் இருதிசையிலும் இரண்டு கிமீ தொலைவுக்கு ஜன நெரிசல் அலை பாய்ந்து கொண்டிருந்தது.. 

கீழுள்ள படங்கள் நன்றி காவிரிக்கோட்டம்












காலையில் பல்லக்குடன் நடந்து  திருமழபாடிக்குச் சென்று திருக்கல்யாணம் கண்டு  - இரவு பத்தரை மணியளவில்
நல்ல விதமாக இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம்..

நந்தீசர் திருவடிகள் போற்றி
சுயம்பிரகாஷிணி திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. கோவில் படங்கள் அருமை. இளைய சமுதாயமும் கோவிலில் கூடி இருப்பது கண்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது

    தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  3. திருமழபாடி திருமணக் காட்சிகள் கண்டு வணங்கினோம்.
    அரிய காட்சிகள். படங்கள் நன்றாக இருக்கின்றன.

    நிறைந்த ஜனத்திரள் வணங்க வந்திருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..