நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திரு ஐயாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவில் உள்ளது கூடலூர் பெருமாள் கோயில்..
நேற்று வைகாசி 20 (3/6) வெள்ளிக்கிழமை விடியற்காலை 6:20 மணியளவில் இத்திருக்கோயிலுக்கு மஹா சம்ப்ரோக்ஷணம் நடந்தது..
நான்கு மணிக்கே எழுந்து குளித்து விட்டு புறப்பட்ட போதும் பேருந்து சரியான நேரத்தில் அமையாததால் தரிசனம் கிடைக்க வில்லை.. ஆயினும், கொடிமரம் அபிஷேகிக்கப்பட்ட நீர்த்துளிகள் நமக்கென காத்திருந்தன..
திருத்தலம் கூடலூர்
ஸ்வாமி
ஸ்ரீ ஜகத்ரக்ஷகப் பெருமாள்
தாயார்
பத்மாசநி, புஷ்பவல்லி
தல விருட்சம் பலா
சக்கர தீர்த்தம்
சுத்தஸத்வ விமானத்தின் கீழ்
பிரயோகச் சக்கரத்துடன்
கிழக்குத் திருமுகமாக நின்ற
திருக்கோலம்..
இத்திருத்தலம்
எட்டாவது திவ்யதேசமாகத்
திகழ்கின்றது..
நந்தக முனிவரோடு தேவர்கள்
கூடி வந்து தரிசனம் செய்ததால்
திருக்கூடலூர்..
ஸ்ரீ மகாலக்ஷ்மி விமானம் |
ஸ்ரீ ஆண்டாள் விமானம் |
ஸ்ரீ ஆண்டாள் |
இப்பதிவு
நாளையும் தொடரும்..
நல்லவர்கள் நாயகனைப் பாடுவதும்
நாற்றிடையில் நறுந்தென்றல் ஆடுவதும்
தொல்புகழாய் தூயவர்கள் கூடுவதும்
பாடலூர் ஆடலூர் கூடலூரே..
வையகந்தான் காக்கின்ற வைகுந்தன் போற்றி
வலமார்பில் வந்துறையும் மலர்மகளும் போற்றி
கையதனில் வெண்சங்கும் சக்கரமும் போற்றி
பொய்யகற்றி பொருந்துகின்ற மெய்ச்சுடரே போற்றி போற்றி..
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
***
கூடலூர் பெருமாள் மஹா ஸம்ப்ரோக்ஷணக் காட்சிகள் சிறப்பு. ஓம் நமோ நாராயணாய....
பதிலளிநீக்குசெல்லத் திருப்பி வைத்து எடுக்கும் காட்சிகள் படங்களைக் க்ளிக்கிப் பார்க்கும்போது சிறப்பாகத் தெரிகின்றன.
பெருமாளை தரிசித்துக் கொண்டேன் நன்றி ஜி
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குபடங்களும் நிகழ்வுகளும் நன்று. எல்லாப் படங்களுமே அழகு
பதிலளிநீக்குகீதா
மிக அருமயான தரிசனம். படங்கள் எல்லாம் மிக அழகு.திருக்கூடலூர் கோயில் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபெருமாள் கும்பாபிஷேகம் சிறப்பான காட்சிகள்.
பதிலளிநீக்குகுடமுழுக்கு விழா படங்கள் அனைத்தும் நன்று. தகவல்கள் அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குகும்பாபிஷேஹப் படங்களும் கோயில் பற்றிய தகவல்களும் சிறப்பு. எல்லாப்படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.
பதிலளிநீக்கு