நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 22, 2021

கண்டு வந்த காட்சி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
நேற்று படித்த செய்திகளின்
முகப்பினை வழங்கியிருக்கின்றேன்..

முதல் செய்தி
தஞ்சை நகரில் அறம் புரிவோரைப்
பற்றியது..
Fb வழியாக அனுப்பி வைத்தவர்
தஞ்சை ஞானசேகரன் அவர்கள்..


பசித்த முகம் பார்த்துப்
பதறும் நல்லுள்ளங்களுக்கு
நெஞ்சார்ந்த
நன்றியும் வணக்கமும்..
***
அடுத்து வரும் செய்திகள்
தினமலர் இணைய தளத்தில் இருந்து பெற்றவை..







பட்டுக்கோட்டை 
நகரில்
உணவகம் நடத்துகின்ற
திரு. சிவா என்பவர்
பசித்த வயிறு கண்டு உணவு வழங்குகின்றார்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த
நன்றியும் வணக்கமும்..




கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்த கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

13 கருத்துகள்:

  1. எங்கெங்கு நோக்கினாலும் கொரோனாச் செய்திகளே! அனைத்தும் நம்பிக்கை ஊட்டும் செய்திகள். மக்கள் தனித்திருந்து தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள இறைவனை வேண்டுவோம். அனைத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கொரோனா பாதித்து தனிமையில் வீட்டில் இருப்போருக்கு என்று தினசரி உணவளிப்போர் சென்னையிலும் சிலர் இருக்கிறார்கள்.  அதேபோல ஆதரவற்று தனியாய் இருக்கும் முதியவர்களுக்கும் உணவு கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.  நேற்று உறவின் ஒரு அவசரத் தேவைக்குக் கேட்டபோது நிறைய விவரங்கள் கிடைத்தன.

    பதிலளிநீக்கு
  3. தடுப்பூசியைத் தள்ளிப்போடுவது சிறந்ததது, ரெமிடெசெவிர் போன்ற மருந்துக்கள் வைத்தியப் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டன என்றெல்லாம் சொல்வது நிஜமா, அவ்வ்ப்போது ஏற்படும் தடுப்பூசி, மருந்து பற்றாக்குறையாலா என்று தெரியவில்லை.  

    பதிலளிநீக்கு
  4. நல்லது நடக்கட்டும்.
    கண்டகாட்சிகள், கேட்கும் விஷ்யங்கள் அனைத்து நல்லதாக இருகட்டும். இறைவன் எல்லோரையும் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்கிறது செய்தி.  இரண்டு நாட்களாய் சென்னையிலும் மதிய, மாலை வேளைகளில் மழை பொழிந்து குளிர்வித்துள்ளது.

    பதிலளிநீக்கு
  6. பதித்தவர்களுக்கு, தனித்து இருக்கும் வயதானவர்களுக்கு, கொரோனா வந்து தனியாக கஷ்டபடுபவர்களுக்கு என்று உணவு கொடுக்கும் நல்ல விஷ்யங்கள் இப்போது நாள்தோறும் வருகிறது. எங்கள் உறவினர் ஒருவர் அப்படி வழங்கி வருகிறார். அவர் வீட்டில் சமைத்து வைத்துவிட்டு உதவும் உள்ளங்களிடம் சொல்லி விடுவராம், அவர்கள் அதை பெற்று வேண்டியவர்களுக்கு கொடுத்து விடுவாராம். என் தம்பி சொன்னான். தொடரட்டும் நல்ல உள்ளங்களின் உதவிகள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல தொகுப்பு. நானும் இதில் சில செய்திகளை வாசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நல்ல செய்திகள். பசித்தவர்களுக்கு உணவு! பாரதி நினைவுக்கு வருகிறார்!

    தனித்திருப்போம். கொரோனாவை தவிர்ப்போம். நல்லது நடக்க வேண்டும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. நல்ல செய்திகள் தொகுப்பு, துரை அண்ணா.

    கொரோனா வும் அதற்கான தடுப்பூசி, கொரோனா மருந்துகள் எல்லாமே பல மருந்து கம்பெனிகள் கூட்டு என்ற செய்தி கூட போனவருடம் வந்தது. பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றனர் என்பது போன்ற செய்திகள்.

    எது எப்படியோ எது எப்படி வந்தாலும் எங்கள் சேவை தொடரும் என்றும் பலரும் முன்வந்து உணவு அளிப்பது மற்றும் பல சேவைகள் புரிவது நல்ல விஷயம் எல்லோரையும் மனதாராப் பாராட்டி வாழ்த்துவோம்.

    மாயாவி மாயமாக வேண்டும் விரைவில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. உலகை இறையே காக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..