நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 19, 2020

திருவேங்கடவா..



நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி முதல் சனிக்கிழமை..

புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
புண்ணியனின் பூம்பாதங்களைப்
போற்றுவோம்..
***


மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1033)
-: திருமங்கையாழ்வார் :-

நோற்றேன் பல்பிறவி நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே இடருற்றனன் எம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1035)
-: திருமங்கையாழ்வார் :-


உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப்பொழுதும்
வரஇமேல் மரகதமே போல - திரைமேல்
கிடந்தானைக் கீண்டானை கேழலாய்ப் பூமி
இடந்தானை ஏத்தி எழும்.. (2106)
-: பொய்கையாழ்வார் :-
***

கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

7 கருத்துகள்:

  1. வெங்கட்ரமணா! கோவிந்தா! கோவிந்தா! நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. புரட்டாசி சனிக்கிழமை அன்று நல் தரிசனம், நல்ல ப்ரபந்தம்.

    பதிலளிநீக்கு
  3. கோவிந்தா ! கோவிந்தா !
    ஓம் நமோ நாராயணா.
    படங்கள் அருமை. ப்ரபந்தம் பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நாராயணனின் அற்புதமான படங்கள் அதனினும் அருமை. புரட்டாசி முதல் வார சனிக்கிழமையன்று திருப்பதி ஏழுமலையானின் தரிசனம் கிடைத்து ஆனந்தமடைந்தேன். ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தம் பாடல்கள் பாடி மகிழ்ந்தேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே இங்கே பல இடங்களில் பத்மாவதி கல்யாண மஹோத்ஸ்வங்கள் நடக்கும். இந்த வருடம் இது வரை ஒரு அழைப்பும் இல்லை! வேங்கடவன் அருளால் எல்லா பிரச்சனைகளும் விரைவில் தீரட்டும்.

    பதிலளிநீக்கு
  6. சனிக்கிழமைக்கான திருப்தியான
    தரிசனம். அந்த வேங்கடவன் எல்லோர்
    குறையையும் தீர்த்து
    நன்மையை அள்ளிக் கொடுப்பான்,.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..