நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 27, 2019

நலம் எங்கும் சூழ்க..

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப் 
போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தருந்தான்!..
-: பழம் பாடல் :-

மகிழ்ச்சி.. மட்டற்ற மகிழ்ச்சி..

அந்த ஒன்றினை நாடியே அனைவரது பயணமும்..

பண்டிகை நாட்களில் - இருப்போரும் இல்லாதோரும்
எய்த நினைப்பது மகிழ்ச்சி ஒன்றினையே...

அந்த மகிழ்ச்சி தான் நெஞ்சிற்கு நிம்மதி!..

நெஞ்சிற்கு நிம்மதியான மகிழ்ச்சியும் இன்பமும் எங்ஙனம் கைகூடும்?..

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.. (0039)

- என்று வள்ளுவப் பெருந்தகை வழிகாட்டுகின்றார்... 

இதற்குத்தான் -

அறஞ்செய விரும்பு - என்றார் ஔவையார்...

நெஞ்சுக்கு நிம்மதி தெய்வத்தின் சந்நிதி!..

- என்று கூறி, 
எளிய மக்களை திருக்கோயில்களுக்கு ஆற்றுப்படுத்தினர் ஆன்றோர்...

இன்றைய நாட்களில் எல்லாம் தலை கீழாயிற்று...
அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை...

வரும் நாட்களில் இறையருளால் எல்லாம் நலமாகி
மகிழ்ச்சியும் நிம்மதியும் அனைவருக்கும் ஆக வேண்டும்!..
என்று நல்லநாள் தனில் வேண்டிக் கொள்கின்றேன்..


அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதன் ஆகி
பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..
-: காஞ்சி புராணம் :-

ஸ்ரீ மறைக்காட்டுறையும் மணாளன்
திருமறைக்காடு (வேதாரண்யம்)
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய்
காண்டற்கரிய கடவுள் கண்டாய் 
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே.. (6/23)  
-: அப்பர் பெருமான் :-


தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!..
-: அபிராமி பட்டர் :-

சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலன் 
விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!.. 
-: அருணகிரியார் :-

ஸ்ரீ அமிர்த நாராயணப்பெருமாள் - திருக்கடவூர் 
திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.. (2282)
-: பேயாழ்வார் :-
திரு அரங்கத்துச் செல்வன் 
பச்சைமா மலைபோல்மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!.. (873) 
-: தொண்டடிப்பொடியாழ்வார் :- 


வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பி
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனியான் உன்னை என்றும் விடேனே!.. (1046) 
-: திருமங்கையாழ்வார் :- 
***

மத்தாப்புகளும் வெடிகளும்
தீபாவளித் திருநாளின் ஒரு அங்கமாகி விட்டன..

ஊடகங்களில் பலரும் பலவிதமாக கருத்துகளை
உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர்...

ஜல்லிக் கட்டுக்குத் தடை வாங்கியதைப் போல
தீபாவளி வெடிகளுக்கும் தடை விதிக்க வேண்டும்..
என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்...

கூடிய விரைவில் மாற்று இயக்கங்களால் - ஒட்டு மொத்த
தீபாவளிக் கொண்டாட்டத்திற்கும் தடை கேட்கப்படலாம்..
என்றே தோன்றுகின்றது...

அந்நிலையிலிருந்து நம்மை நாமே மீட்டுக் கொள்வோம்...


இயன்றவரைக்கும் 
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து - 
தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.. 

நாமும் மகிழ்வோம்..
பிற உயிர்களையும் மகிழ்விப்போம்!..
***

இனிய பாடலுடன்
தீபாவளிக் கொண்டாட்டம்..

திரைப்படம் -  மூன்று தெய்வங்கள்
பாடல் - கவியரசர்
இசை - மெல்லிசை மன்னர் 


தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்..
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்!..
-: கவியரசர் கண்ணதாசன் :-


அன்பும் அறநெறியும் நிலை நாட்டப்பட்ட நாள் இன்று..

அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..

வாழ்க நலம்..  
* * *

24 கருத்துகள்:

  1. அன்பு நண்பர்கள் அனைவருக்கும்
    தீபாவளி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. இனிய தீபாவளித்த திருநாள் நல்வாழ்த்துகள்.    திருநாள் தரிசனம் ஆச்சு.  பொங்கட்டும் எங்கும் இன்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வாழ்த்துகள்....

      மங்கல ஸ்நானம் ஆயிற்று...

      ஓம் ஹரி ஓம் நம சிவாய...

      நீக்கு
  3. இதே பாடல் எங்கள் தளத்திலும் ஒலிக்கிறது.  கூடுதலாய் இன்னொரு பாடலும்.  நண்பர்களுக்கிடையே ஒத்த எண்ணம்!

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்.

    இடுகை சிறப்பு. திருமங்கையாழ்வார் பாசுரம் மட்டும் படித்தேன். தீபாவளி கொண்டாட்டம் பற்றிய கருத்து மதச்சார்பு என்ற வெற்று கோஷத்திடமிருந்து நம்மைக் காக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தீபாவளி நல்வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. இனிய தீபாவளி வாழ்த்துகள் துரை. இந்த தீபாவளி உங்கள் அலுவலக வேலையிலும் உடல் நலத்திலும் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவரப் பிரார்த்திக்கிறேன். விரைவில் உங்கள் தொல்லைகள் எல்லாம் தீரவும் இறைவன் அருள் புரிவானாக! பதிவு நீளமாக இருக்கிறது. படிச்சுட்டு மறுபடி வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகளுடன்
      மகிழ்ச்சி.. நன்றி...

      மறுபடியும் வாங்க...

      நீக்கு
  6. ஆஹா, பதிவின் முதல்லே நம்மாளு எனில் நடுவில் நம்பெருமாள், தேவியோடு திவ்ய தரிசனம். கடைசியிலோ பாமாவின் நரகாசுர வதம். அருமையான படங்கள். அனைத்து தெய்வங்களையும் நன்கு தரிசித்துக்கொண்டேன். பதிவின் கருத்து இக்காலகட்டத்துக்கு முக்கியமானது. அனைவரும் தீபாவளித்திருநாளை ஒழித்துக்கட்ட நினைத்தாலும் முடியாது என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா....

      அவர்கள் நினைத்தாலும் முடியாது என்றாலும் நாம் ஒருங்கிணைந்து இருப்பது நல்லது அல்லவா..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. மூன்று தெய்வங்கள் பாடலுக்கு எ.பி.யிலேயே பதில் போட நினைச்சு விட்டுப் போச்சு. இந்தப் படம் எங்க கல்யாணம் ஆன புதுசிலே அயனாவரம் சயானி தியேட்டரில் பார்த்தோம். அதன் பின்னர் தொலைக்காட்சி தயவிலும் பார்த்து ரசித்திருக்கோம். எனக்குத் தெரிஞ்சு ஜிவாஜி படங்களிலே நான் ரசித்தது, இதுவும் முதல் மரியாதையும், ராமன் எத்தனை ராமனடியும் தான்! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு முதல் மரியாதை பிடிப்பதில்லை..

      ஆனாலும் இந்த மூன்று படங்களை மட்டுமே ரசித்தது என்று சொல்வது அநியாயம்...

      நீக்கு
  8. தீபஒளியைக் குறித்த பதிவு நன்று வாழ்க வளமுடன்...

    தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நல்வாழ்த்துகளுடன்...

      நீக்கு
  9. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு.

    பாடல் பகிர்வு அருமை.
    நெஞ்சுக்கு நிம்மதி தெய்வத்தின் சன்னதி உண்மை.

    வீட்டில் பூஜையை முடித்து விட்டுகோவிலுக்கு போய் வந்தோம் . கோவையில் எல்லோரும் பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவில் போய் வந்த பின் தான் காலை உணவு.

    அது போல் நாங்கள் பக்கத்தில் இருக்கும் ''பொய் சொல்லா அய்யனார்' சாமியை கும்பிட்டு வந்து விட்டோம். அவர் கொடுத்த சர்க்கரை பொங்கல், சுண்டலுடன் காலை உணவு.
    நிம்மதியானது அலை பாயும் மனது.

    படங்கள், பாடல்கள் எல்லாம் மிக அருமை.
    நன்றி.
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    உங்கள் பணிச்சுமை அதிகமா?
    உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் சிறப்பு ஐயா...

    தீபத்திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. ஆனை முகத்தனைப் பற்றிய முதல் பாசுரம் நம்பிக்கை தந்தது என்றால், அருணகிரியார் பதிகம் கணங்களில் நீர் துளிக்க வைத்து விட்டது. 

    பதிலளிநீக்கு
  13. //கூடிய விரைவில் மாற்று இயக்கங்களால் ஒட்டு மொத்த தீபாவளி கொண்டாட்டத்திற்கும் தடை கேட்கப்படலாம் என்றே தோன்றுகிறது. அந்த நிலையிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வோம்.//  உண்மை! உண்மை!

    பதிலளிநீக்கு
  14. குவைத்தில் தீபாவளி எப்படி

    பதிலளிநீக்கு
  15. அனைத்தும் சிறப்பு.

    தீபாவளி நன்றே கழிந்தது. தில்லியில் இம்முறை பட்டாசு சப்தம் குறைவு தான்.

    பதிலளிநீக்கு
  16. மனதிற்கு நிறைவு தரும் செய்திகள், புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..