நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 19, 2019

சத்ய வரதன்

நன்றி
நெல்லைத் தமிழன்
ஸ்ரீ அத்திவரத ஸ்வாமி
மீண்டும் அனந்த சரஸ் எனும் திருக்குளத்தில்
ஜலசயனம் கொண்டார்..

எதிர்வரும் 2059 ல் ஜலசயனத்திலிருந்து நீங்கி
மீண்டும் வசந்த மண்டபத்தில் திருக்காட்சி நல்குவார்...

பெருமானைத் தரிசிக்க விதியற்றுப் போனோமே!..
என்று மனம் வருந்துகின்றது...



எனினும்
அவனருளால் அவன் தாள் வணங்குகின்றோம்..
இந்த அளவுக்கு எல்லாம் நலமே!..
ஆக - இதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ!..
என்ற திருப்தியும் மேலிடுகின்றது...

சரஸ் என்றால் பொய்கை என்பது பொருளாகும்..
நம்முடைய மனதைத் தூய்மையான பொய்கையாக
ஆக்கிக் கொள்வோம்...

அதில்
நிற்பதுவும் இருப்பதுவும் கிடப்பதுவும்
அவனது திருவுளம்!...


அத்திக்கு அருள் புரிந்த அரவணையாய் அருளாளா
எத்திக்கு நின்றாலும் நினைமறவா வகையருள்வாய்
முத்திக்கு வழியருளும் முன்னவனே முகில்வண்ணா..
வித்திற்கும் வித்தாகி வினைதீர்க்கும் கரிவரதா!...

பத்திக்கும் பண்பிற்கும் படியிறங்கி வருவோனே...
சித்திக்கும் நலங்களுக்குள் நலமாகித் திகழ்பவனே!..
எத்திக்கும் அறியாத ஏழையென் வழித்துணையே
தித்திக்கும் நலம்நல்காய் திருவாழும் திருமார்பா!...


நித்திலமாய் ரத்தினமாய் நிலமளந்த உத்தமனே...
சத்தியமாய் தத்துவமாய் முகங்காட்டும் வித்தகனே
அத்திகிரி தலம் ஓங்க அண்டியவர் துயர் நீங்க
நித்திலமாய் நீருக்குள் துயில் கொள்ளும் ரத்தினமே!..

எத்திக்கு உள்ளாரும் உனைத்தேடி வந்தார்கள்
தித்திக்கத் தித்திக்கத் திருவருளைக் கொண்டார்கள்
பித்தான மனத்துள்ளே பெருமானே எனக்காக
அத்திநகர் கருமுகிலே நின்றாயே எனைக்காக்க!...



எத்திக்கும் உனதாட்சி எங்கெங்கும் திருக்காட்சி..
இத்தரையில் இனிவேண்டும் நீங்காத புகழ்மாட்சி
புத்திக்கும் எட்டாத புண்ணியனே புகழ்ந்தேத்தி
முத்தமிழில் வைத்தேனே திருவிளக்கு உனைப்போற்றி!..


அத்திவரதன் திருவடிகள் போற்றி..

ஓம் ஹரி ஓம் 
ஃஃஃ  

26 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    அத்திவாரதர் அனந்தசரஸ் திரும்பும் நாளில் சென்னை, வேலூர் நகரங்கள் மற்றும் குடந்தையில் எல்லாம் நல்ல மழை.

    பதிலளிநீக்கு
  2. முத்தமிழில் தந்து அருளியுள்ள திருப்பாடல் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  3. அத்திவரதர் தரிசனம் தினம் கிடைத்துக் கொண்டிருக்கிறது தொலைக்காட்சிகள் தயவில். அதோடு முகநூல் நண்பர் திரு கேசவபாஷ்யம் வி.என். வேறு அவ்வப்போது நிகழ்ச்சிகளைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது கொஞ்சம் வெறுமையாகவே இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா...

      திரு. கேசவபாஷ்யம் அவர்களது செய்திகளை FB ல் பார்த்தேன்... தாங்கள் சொல்வதைப் போல மனம் கலங்குகின்றது...

      அனந்த சரஸ்ஸில் அத்திவரதரை எழுந்தருளப் பண்ணும்போது கண்களில் நீர் வந்தது...

      நீக்கு
  4. பாடல் அருமையாக இருக்கிறது. படங்களும் அருமை. எனக்கும் இவை எல்லாம் வந்தன. அத்திவரதர் தான் திரும்பும்போது அனந்த சரஸ் தானாகவே நிரம்பும்படி வைப்பாராம். எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதே போல் காஞ்சிபுரத்தில் அவரை உள்ளே வைத்ததும் மழை கொட்டியது என்றார்கள். மறுநாளும் மழை பெய்து அனந்த சரஸ் நிரம்பி வருவதையும் முகநூலில் பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..

      ஆன்றோர்கள் சொல்லியிருந்த மாதிரி அத்திவரதர் அனந்த சரஸ்ஸுக்குச் செல்லும்போது காஞ்சியில் நல்ல மழை எனும்போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது..

      மண் செழிக்கட்டும்.. வளம் தழைக்கட்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அத்தி வரதருக்கான பாடல் நன்று
    வாழ்க நலம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நெல்லைத் தமிழன் அனுப்பிய (அவர் எடுத்த படமா?) படம் மிக அழகு. அத்திவரதரின் மலர்ந்த முகம் மகிழ்ச்சியை அளிக்கிறது.
    உங்கள் கவிதை மழையில் நனைத்து விட்டார் அத்தி வரதர். கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    அவரை அனந்தசரஸில் எழ செயததும் இரவு நல்ல மழை பெய்து அனந்த சரஸ் நிறைந்து விட்டதும் அறிந்து மகிழ்ந்தேன்.குளத்தை நிறைய வைத்தது போல் எல்லோர் மனதிலும் நிறைந்து இருப்பார் அடுத்து வரும் வரை.
    இங்கு மதுரையிலும் இரண்டு நாளாக நல்ல மழை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அத்திவரதர் அருளால் தமிழகம் தழைக்கட்டும்...
      கண் நிறைந்த கடவுளால் நீர் வளம் பெருகட்டும்...

      தங்கள் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஆதி அத்தி வரதனின் அத்தனை அலங்காரங்களுடன்
    தரிசனம் மிக அருமை. அணி வகுத்த பாடல்களும்
    அழகுத் தமிழால் அவனைப் போற்றி
    மீண்டும் அவனைப் போற்ற வைத்தன.

    அன்பு துரை செல்வராஜு இனிய காலை வணக்கம்.
    அனந்தனின் பொய்கையில் அமைதியுடன் நித்திரை
    கொள்கிறான்.

    மனதில் இருத்திக் கொண்டு தினமுமே வணங்கலாம்.
    அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம்.
    திருமால் பெருமைக்கு நிகர் அவனே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...

      அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம்...

      அத்தி வரதன் போற்றி போற்றி...

      நீக்கு
  8. கடைசி படம் கிராபிக்ஸ். சிலை மிதக்காமலிருக்க மேலே நாகர் கல் மற்றும் வேறு வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      அந்தப்படம் கிராபிக்ஸ் என்று தெரியும். இருந்தும் ஒரு கோர்வைக்காக வைத்தேன்..

      காலையில் கிடைத்த வேறொரு படத்தைப் பதிவில் சேர்த்துள்ளேன்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. அன்பின் நெ.த..

      அந்தப்படம் கிராபிக்ஸ் என்று தெரியும். இருந்தும் ஒரு கோர்வைக்காக வைத்தேன்..

      காலையில் கிடைத்த வேறொரு படத்தைப் பதிவில் சேர்த்துள்ளேன்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. பாடல் மிகவும் அருமை ஐயா...

    நெ.த. ஐயா சொன்னது சரியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா...!
    கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா...!
    ஹாய் (குழு) ஹா ஹாய் (குழு) ஹாய் ஹாய் அய்சலக்கா...! (குழு) ஹாய் ஹாய் அத்திரிபச்சா...! (குழு)

    வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா... கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா... (2)

    நகையும் நட்டும் போட்டிருந்தா, சொர்ணலட்சுமி...!
    நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரித் தந்தா, தான்யலட்சுமி...!
    டாண்ட டண்டடண் டண்டா (குழு) டண்டடண் டண்டா (குழு) டாண்டாண்டா டாஆ (குழு) (2)

    மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி... மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி...
    எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா விஜயலட்சுமி...
    எத்தனை லட்சுமி பாருங்கடாஆஆஆ... இவ என்ன லட்சுமி கூறுங்கடாஆஆ... (2)
    நம்ம அத்தனை பேருக்கும் படி அளக்கும் அன்னலட்சுமி ஆகுமடா...?
    ஆமா அன்னலட்சுமி ஆகுமடா..? (குழு)...

    வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா...! கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா...!

    [சலங்கை சத்தம்] ஹாய் (குழு) [சலங்கை சத்தம்] ஹாய் (குழு) ஹாய் ஹாய் அய்சலக்கா...! (குழு)
    ஹாய் ஹாய் அத்திரிபச்சா...! ( குழு )


    தண்டைச் சத்தம் கலகலன்னு முன்னால் வருது... வாழைத்தண்டு போல கால் நடந்து பின்னால் வருது...
    டாண்ட டண்டடண் டண்டா (குழு) டண்டடண் டண்டா (குழு) டாண்டாண்டா டாஆ ( குழு )

    பாக்குறப்போ பசி மயக்கம் தன்னால் வருகுது... பாக்குறப்போ பசி மயக்கம் தன்னால் வருகுது...
    பேச்சு கேக்கிறப்போ, வந்த மயக்கம் தானா குறையுது...!

    சாதம் போல சிரிக்குறா...! மீன் குழம்பு போல மணக்குறா...!
    ரகசியமா ஏதும் சொன்னா, ரசத்தைப் போல கொதிக்குறா...!?
    ஆஹா ரசத்தைப் போல கொதிக்குறா...!? (குழு)

    வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா... கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா...

    குலாம் காதர் குலாவிலே கறி கெடக்குது... அது அநுமந்தராவ்வ்வ் ஆஹ்ஹ்,,,,,,,, (குழு)
    அநுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது...!
    யஹ்ஹஹ் ஹஹ்ஹ ஹாஆஆஆ (குழு) ஹும்ஸ்ஜக்கு (குழு) ஹும்ஜக்கு (குழு) ஹும்ஸ்ஜக்கு (குழு) ஹுக்கும் ஹுக்கும் (குழு)

    மேரியம்மா கேரியரில் எறா இருக்குது... மேரியம்மா கேரியரில் எறா இருக்குது... அது பத்மநாப அய்யர்
    வீட்டு குழம்பில் கிடக்குது...!

    சமையலெல்லாம் கலக்குது - அது சமத்துவத்த வளக்குது,,,!
    ஜாதி சமய பேதமெல்லாம் சோத்த கண்டா பறக்குது...

    ஆஹா சோத்த கண்டா பறக்குது (குழு)

    வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா...! கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      கஞ்சியும் வஞ்சியும் மிஞ்சினால் புளித்து விடும்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ஆனால் அடியேன் ஆஞ்சி...! (எனது தந்தை சொன்னது...!)

      கவனம்... நன்றி...

      நீக்கு
  11. இன்று சங்கடஹர சதுர்த்தியில் அத்தி வரதர் தரிசனம் கிடைக்கப்பெற்றது மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அழகான படங்கள். உங்களுக்கே உரிய முறையில் விளக்கமும் பாடலும். இங்கு நியூஜெர்சியில், விடிந்ததும் உங்கள் தளத்திற்கு வந்தேன். மனம் நிரம்பி வழிகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. அத்தி வரதரின் திவ்ய தரிசனம் இங்கே... மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..