நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 21, 2019

அரன் நாமமே சூழ்க

இன்று வைகாசி மூலம்..

திருஞானசம்பந்தப் பெருமானின்
குருபூஜை நாள்..


தமிழ் கூறும் நல்லுலகம்
ஞானசம்பந்த மூர்த்தியை
ஆளுடைய பிள்ளை என்று
கொண்டாடுகின்றது..

ஐயன் நிகழ்த்திய
அருஞ்செயல்கள் பலவாகும்..

ஐயனின் அருள்  வாக்கினில் பிறந்த
மங்கலங்கள் பற்பலவாகும்..


மதுரையம்பதியில்
சைவ சமயத்தை மீட்டெடுத்தபோது
அருளிச் செய்த
திருப்பதிகத்தின் முதற்பாடல்
இன்றைய காலகட்டத்தில்
மிகவும் அவசியமானதாகின்றது..

அன்னை பராசக்தியின்
அருட்பால் அருந்திய
ஞானக்குழந்தையின் திருவாக்கு
நமக்கு என்றென்றும்
உற்ற துணையாக விளங்கட்டும்...

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே...

ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. துயர் தீரட்டும்...

    ஓம் நமச் சிவாய.

    பதிலளிநீக்கு
  2. வாழ்க வையகம்.
    ஓம் நமச்சிவாய!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி.
    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. யாருக்கு உடல் நலமில்லைஎன்றாலும் "மந்திரமாவது நீறு" பதிகத்தைத் தான் ஓதுவேன். சக்தி வாய்ந்தது! குருபூஜை சிறப்பாக நடைபெற்றிருக்கும். எல்லாச் சிவன் கோயில்களிலும் இப்படியான குரு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே தமிழ் கோயில்களில் இல்லை என்று எதை வைத்துச் சொல்கின்றனர், என்பது தெரியவில்லை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      தமிழ்க் கலாச்சாரம், தேவாரம், திருவாசகம் முதலான எந்த ஒன்றையும் அறிந்து கொள்ளாமல் மக்களின் பாரம்பர்யங்களுக்குள் ஊடுருவி அவற்றை சிதைக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றனர் புல்லுருவிகளான சிலர்...

      சென்னை - திரி சூலம் சிவாலயத்தின் சொத்துகள் விற்கப்பட்டதும் அது மனைப் பிரிவுகளாக மாறியதும் இன்றைய தினமலரில் வெளியாகி உள்ளது..

      அத்து மீறி விற்கப்பட்ட நிலத்தில் கிறித்தவ வழிபாட்டு கூடம் கட்டப்பட்டிருக்கிறது...

      அந்தச் செய்தியை எனது Whatsup ல் பகிர்ந்துள்ளேன்...

      நீக்கு
  6. தோடுடைய செவியனை அழைத்த சம்பந்தப்பெருமானைப் பற்றிய பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு சிறப்பு
    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..