நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 18, 2019

குருவாய் வருவாய்

இன்று வைகாசி விசாகம்...

சரவணப்பொய்கையில்
முருகப்பெருமான் திரு அவதாரம்
செய்தருளிய நன்னாள்..


அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய....

எம்பெருமான் திருவருள்
நல்லோரைக் காத்து நிற்க
இந்நாளில் வேண்டிக் கொள்வோம்...

அவனே குருவாகவும் வந்தருளினன்
எனில்
அதை விடவும் நலம் வேண்டுமோ!?..


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
- : அருணகிரிநாதர் :-

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம் சரணம்..

முருகன் திருவருள்
முன்னின்று காக்க...
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
    என்னை நீ பார்த்தாலே போதும் - வாழ்வில்
    இடரேதும் வாராது எப்போதும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. முருகா என்றதும் உருகாதா மனம்
    மோகனப் புன்னகை மணவாளா......

    நீல மயில்மீது ஞாலம் வலம்வந்த
    நீதான் எனக்கருள வேணும்.. முருகா

    முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
    முற்றிய வினை தீருமே

    கந்தா என்ற மந்திரம் சொல்லி.... பாடல்கள் மனதில் மோதுகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      இனிய பாடல்களை நினைவு கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. முருகனுக்கு அரோகரா!

    பதிலளிநீக்கு
  5. வள்ளி கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும் உள்ளம் உருகுதடி கிளியே, உன்மத்தமாகுதடி! கிளியே உன்மத்தமாகுதடி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் உள்ளம் உருகும் பாடலும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வைகாசி விசாகத் திருநாள்... முருகனுக்கொரு நாளா திருநாள்? ஒவ்வொரு நாளும் திருநாள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      முருகனுக்கு ஒவ்வொரு நாளும் திருநாள் ஆவதற்கு இந்நாளே முதல் நாள்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. வைகாசி விசாகத் திருநாள் திருபரங்குன்றத்தில் சிறப்பாக நடத்துவார்கள் தங்கை வீட்டில் அவர்கள் பால் குடம் தான் முருகனுக்கும் முதலில் நடக்கும் காலம் காலமாய்.

    அழைத்தார்கள். ஆனால் போக முடியவில்லை. பக்கத்தில் உள்ள அய்யனார் கோவில் முருகனை தரிசனம் செய்து வந்தோம்.
    அனுமன், முனீஸ்வரனுக்கு அபிசேகம் அலங்காரம்.
    வீட்டில் முருகனுக்கு பூஜை.
    தொலைக்காட்சியில், மற்றும் தங்கை அனுப்பிய விசாக பால் அபிஷேகம் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.
    இப்போது உங்கள் தளத்திலும் ஆச்சு.
    முருகா சரணம் சண்முகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இந்தப் பதிவுகள் எல்லாம் கைத்தொலைபேசி வழியே செய்கிறேன்.. நிறைந்த விஷயங்களைத் தருவது சிரமமாக உள்ளது...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. துரை அண்ணன் பக்கம்.. இன்று போவோம் நாளை போவோம் என நினைச்சு நினைச்சே நீண்ட நாட்கள் ஓடிவிட்டது... இன்று வைசாகி விசாகம் நல்ல நாளில்தான் மீண்டும் வந்திருக்கிறேன். எங்கள் ஊரில் சில அம்மன் கோயில்களில் இன்று திருவிழாவின் இறுதியாக தேர் இழுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா..

      எப்படியோ வழி விசாரித்துக் கொண்டு நமது தளத்துக்கு வந்தாயிற்று...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..