எங்கும் தமிழ்...
எங்கள் தமிழ்...
நேற்றைய தினம்
உலகத் தாய்மொழி நாள்
* * *
சென்ற வருடத்தில் ஒருநாள்
அன்பின் ஜி அவர்கள்
எ - என்ற எழுத்தை வைத்து
வழங்கியிருந்தார்..
அதையடுத்து
எ - எனும் எழுத்தை வைத்து
நான் எழுதி வைத்த கவிதை
இன்றைய பதிவில்!...
***
எங்கும்
எதிலும்
எ - என்று
எழுத்து அதனை
எண்ணி
எடுத்து
எங்கள் முன்
எப்படி
எந்தன் பதிவு?..
எனப் படைத்திட்டார்
எங்கள் ஜி!..
எடடா அந்த
எட்டடி வாளை
என்னும் சொல்லை
எடுத்து எறிந்து விட்டு
எடடா அந்த
எழுதுகோலை
என்றே முழங்கி புவி
எங்கும் தமிழ் பரப்ப
எழுந்த தங்களை
என்னென்று சொல்ல!?..
எப்படித்தான் சொல்ல!?..
எ
எனில்
எத்தனை எத்தனை வியப்பு!..
எத்தனை எத்தனை வியப்பு!..
என்னவொரு அழகான சிற்பம்!...
எங்கு உள்ளது இந்தக் கோயில்?..
எப்படி நீங்கள் நலமா!..
எத்தனை நாள் தங்களைப் பார்த்து!..
எத்தனை நாள் தங்களைப் பார்த்து!..
எதற்கு வீண் சிரமம்?..
எ
எனில்
எழுக..
எதிர்ப்புகளை நீக்கி விரைக..
எ
எனில்
எண்ணம்
எண்ணாயிரமாகிடும் வண்ணம்
எ
எனில்
எழுத்து
எட்டுத் திக்கிலும் செலுத்து...
எ
எனில்
எழுக..
எதிர்ப்புகளை நீக்கி விரைக..
எ
எனில்
எண்ணம்
எண்ணாயிரமாகிடும் வண்ணம்
எ
எனில்
எழுத்து
எட்டுத் திக்கிலும் செலுத்து...
எ
எனில்
எழில்
எழிலின் அரசி
எழிலரசி..
எள்ளின் பூ நாசி..
என்றெல்லாம் பேச
எங்குந்தான் வீசும்
எழுதுங்கவி வாசம்..
எ
எனில்
எறும்பு
எருது
எருமை
எண்ணிப் பார்..
என் நெஞ்சே..
எண்ணிக்கையை அல்ல..
எறும்பின்
எண்ணத்தை...
எண்ணிப் பார்..
எருமையின் அருமையை..
எண்ணிப் பார்..
எருதுகளின் பேருழைப்பை...
எண்ணம் நலம் என்றால்..
எங்கும் வளம் அன்றோ..
எல்லாம் இனிது
என்றும் புதிது...
எண்ணம் இனிது..
எழும் சிந்தை புதிது!..
எழுங் கதிராய்
எழும் நிலவாய்
எங்கள் தமிழே..
எந்தன் அமுதே..
எங்கும் வாழ்க!..
என்றும் வாழ்க!..
எங்கெங்கும் தமிழாக..
என்றென்றும் வாழ்க..
எங்கெங்கும் தமிழாக..
என்றென்றும் வாழ்க..
ஃஃஃ
வாழ்க தமிழ்..
வாழ்க நலம்!...
* * *
வாழ்க தமிழ்..
வாழ்க நலம்!...
* * *
குட்மார்னிங். தாய்மொழி தினக்கவிதை நன்று.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் ..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
ஆனால் முதலெழுத்தாய் அன்பான அ இருக்க, ஆச்சர்யமாய் ஆ வும் காத்திருக்க, எதற்காக எ வரை சென்றீர்கள்?!! முதல் ஆறெழுத்தை ஏங்க விடலாமா? ஆறெழுத்தில் மந்திரமே இருக்கே...!!!!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குஅன்றைக்கு தேவகோட்டையார் எ என்ற எழுதியிருந்தார்... அதனால் தான் மறுபடியும்....
'எ' வை வைத்து என்னென்ன வரிகள் தீட்ட முடியுமோ எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள்... அருமை, சிறப்பு.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் ..
நீக்குதங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
அன்பின் ஸ்ரீராம் ..
நீக்குதங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
எ எழுத்தின் முதல் எழுத்து.
பதிலளிநீக்குஅருமையாக கோர்த்திருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகவிதை அருமை.
பதிலளிநீக்குவாழ்க தமிழ்!
வாழ்க நலம்.
தங்களன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதாய்மொழி தினத்துக்கு அருமையான படங்களுடன் கூடிய கவிதைக்கு நன்றி. எல்லோரும் கூடியவரை தாய்மொழியிலேயே எழுதிப் பழகுவோம். ஆங்கிலம் கலக்காமல்!
பதிலளிநீக்குஎனக்கும் இப்படி ஒரு ஆசை உண்டு கீதா அக்கா. கட்டுரைகளில் சாத்தியப்படும் இந்த விஷயம் கதை எழுதும் பொழுது காணாமல் போய் விடுகிறது. :((
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குபானுக்கா ஹையோ அதை ஏன் கேக்கறீங்க...நான் கதை எழுதும் போது கதை மாந்தர்களைப் பொருத்து ஆங்கிலம் வந்துவிடுகிறது! என்னாலும் அதைத் தவிர்க்க இயலவில்லை. அதுவும் இப்போதெல்லாம் ஆங்கிலம் கலந்து உரையாடல்கள் என்று ஆகிவிட்டதால் ..இயல்பாக இருப்பது போல் தோன்றும்....
நீக்குவீட்டிலும் கூட..வீட்டில் ஆங்கிலம் தான் பலரும்...அதுவும் இப்போதையக் குழந்தைகள்...என் மகன் அவன் கஸின்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் அவன் தமிழ்ல் தான் பதில் சொல்லுவான்...தேவைப்பட்டால் மட்டும் தான் ஆங்கிலம்...ஆனால் நானோ குழந்தைகளோ வீட்டு மனுஷங்களோ உறவினர்களோ ஆங்கிலத்தில் பேசினால் நானும் ஆங்கிலம்...ஹிஹிஹிஹி என்னதான் சொல்லுங்கள் ஆங்கிலத்தில் பேசும் போது ஒட்டுதல் வருவதில்லை...தமிழில் பேசும் போதுதான் அந்த ஒரு ஒட்டுதல்...வருகிறது..இனி கதை எழுதும் போது அதைத் தவிர்க்க முயற்சி செய்யனும்னு பார்க்கிறேன்...பார்ப்போம்...
கீதா
தாய்மொழி தினக் கொண்டாட்டம் ரசித்தேன். படங்கள் அருமை.
பதிலளிநீக்குஅன்பின் நெ.த..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல முயற்சி துரை சார். ரசித்தேன்.
பதிலளிநீக்கு'அ' என்னும் ஒரு எழுத்தை மட்டும் வைத்து முழு ராமாயணம் எழுதப்பட்ட பதிவு ஒன்று வாட்ஸாப்பில் வலம் வந்ததே.
whats app ல் எந்தக் குழுவுடனும் இணைந்திருக்கவில்லை..
நீக்குஎனவே தாங்கள் குறிப்பிட்டுள்ள ராமாயணம் பற்றி அறியேன்...
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.
அன்பின் தனபாலன்..
பதிலளிநீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.
அன்பின் ஜி
பதிலளிநீக்குதாமதமாகவே வந்தேன் பொருத்தருள....
"எ"
என்ற
எழுத்தில்
எழுதிய
எழுச்சிமிகு கவிதை
அழகு
அருமை
அற்புதம்
வாழ்க தமிழ்.
தங்களது வருகையே எனக்கு மகிழ்ச்சி.... நன்றி..
நீக்குவாழ்க தமிழ்.. வெல்க தமிழ்...
தாய்மொழி தினத்திற்கான உங்கள் பகிர்வு சிறப்பு.
பதிலளிநீக்குஅண்ணே எ - என்னோ உங்கள் திறமை! எ" எங்கேயோ போய்ட்டீங்க!!! ரொம்ப -நல்லாருக்கு கவிதை..உங்கள் திறமையை என்னவென்று சொல்ல?!!!
பதிலளிநீக்குமிகவும் ரசித்தோம் அண்ணா
கீதா
என்னோ - என்னே நு வந்த்ருக்கனும் அண்ணா. டைப்போ...
நீக்குகீதா