நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 15, 2018

கணபதி வாழ்க 2

ஓதவினை அகலும் ஓங்கு புகழ்பெருகும்
காதற் பொருள் அனைத்தும் கைகூடும் - சீதப்
பனிக்கோட்டு மால்வரைமேல் பாரதப்போர் தீட்டும்
தனிக்கோட்டு வாரணத்தின் தாள்..
-: பெருந்தேவனார் :-

சிவ வைணவ மரபின் வழிவந்த நல்லோர்கள் அனைவரும்
மட்டில்லா மகிழ்ச்சியுடனும் உற்சாகத்தினோடும்
ஸ்ரீ விநாயக சதுர்த்தியினைக் கொண்டாடியிருக்கின்றனர்..

இவ்வேளையில் -
பல ஊர்களிலும் கொண்டாடப்பட்ட வைபவங்களின்
திருக்காட்சிகளை நண்பர்கள் அனுப்பியிருக்கின்றனர்..

அவற்றுள் சிலவற்றை
இன்றைய பதிவினில் வழங்குகின்றேன்...

வழக்கம் போல படங்களை வழங்கியிருக்கும்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!...

ஸ்ரீ மகாகணபதி - திருக்கோயிலூர்.
இவருக்கு முன்பாகத் தான்
ஔவையார் அகவல் பாடினார்..
ஸ்ரீ கற்பக விநாயகர்
பிள்ளையார்பட்டி
ஸ்ரீ சித்தி புத்தி சமேத ஸ்ரீ மகாகணபதி
கணபதி அக்ரஹாரம். 
ஸ்ரீ செந்தூர கணபதி
திருஅண்ணாமலை..
ஸ்ரீ ராஜகணபதி - சேலம்..
ஸ்ரீ மாணிக்க விநாயகர்
மலைக்கோட்டை - திருச்சி
திருவலஞ்சுழி
கஞ்சனூர் 
கீழ்வேளூர் 
திரு ஐயாறு 
திருஆரூர் 
திருக்கடவூர் 
திங்களங் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
கங்கையாய் மகிழுஞ் செல்வக் கணேச நின்கழல்கள் போற்றி
-: வள்ளலார் ஸ்வாமிகள் :-

ஸ்ரீ செல்வ விநாயகர் - கனடா 
ஸ்ரீ செண்பக விநாயகர் - சிங்கப்பூர்
ஸ்ரீ மகாகணபதி., தஞ்சை பெரியகோயில்..
ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் சதுர்த்தியன்று சந்தனக்காப்பு அலங்காரம்..  
எளியேனின் வழிபாடு 
அன்பின் சமர்ப்பணம்
உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர் காதரவுற் றருள்வாயே..
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருட்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே...
-: அருணகிரியார் :-

ஓம் கம் கணபதயே நம: 
ஃஃஃ 

23 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய தரிசனங்கள் தேவகோட்டையிலிருந்து குவைத்தையும் கண்டேன் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படங்களுடன் கணேச விழா அமர்க்களம். உங்கள் வழிபாட்டு இடமும் சீரியல் விளக்குகளுடன் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பால் கொழுக்கட்டை (?), இளநீர் இவைகள் இந்த முறை ஸ்பெஷலா? அதைவிட ஆச்சர்யம் விளாம்பழம் அங்கு கிடைத்தது.. இடுகையைப் படித்துவிட்டேன். விரைவில் கருத்திருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நீக்கு
  4. சிறப்பு... அனைத்தும் மிகவும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. 'ஓத வினை அகலும்' பாடல் 'எண்ணியதை நிறைவேற மனதாறச் சொல்லுவர். பாரதத்தை எழுதியிய மஹாகணபதியைப் பற்றியது.

    " திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே" - பிறைச்சந்திரனைத் தன் முடியில் வைத்துள்ள செஞ்சடையனின் குலக் கொழுந்தே என்று பிள்ளையார் வருணிக்கப்படுகிறார்.

    ஐங்கர நால்வாய் முக்கண் சிவக் களிறு - ஆனைமுகத்தவனுக்கு ஐந்து கரங்கள் (தும்பிக்கையோடு), நீளமானா வாய் அல்லது ஆனை முகத்தவன் என்பதைச் சொல்ல 'நால்வாய்' (நால்வாய்-நீள வாய் அல்லது அப்படி இருப்பதால் யானைக்கு இன்னொரு பெயர்). முக்கண் மூர்த்தியின் மகன்.

    அருணகிரிநாதர், பட்டினத்தார், வள்ளலார், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று பக்தியில் தோய்ந்தவர்களெல்லாம் பெரிய தமிழ்ப் புலமை பெற்றிருப்பதைக் கவனித்தீர்களா?

    அனைத்துப் படங்களும் மிக மிக அருமையாக இருக்கின்றன. மணக்குள விநாயகர் படம் மட்டும்தான் மிஸ்ஸிங்கோ?

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,

      பழந்தமிழ்ப் பாடல்களுக்கு தங்களது விளக்கம் அருமை..

      தாங்கள் சொல்லியிருக்கும்படி -
      அன்பில் உயர்ந்த பெரியோர்கள் பக்தி வழியில் நிற்கையில்
      தமிழருவிகளாக ஆகிவிடுகின்றனர்...

      அதனால் நல்லவர்களுக்கு நன்மைகளே நடந்தன...

      மணக்குள விநாயகர் படம் இணைக்கப்படாதது இப்போது தான் தெரிகின்றது...

      தக்கவேளையில் அவரும் சேர்ந்து கொள்வார்...

      தங்களது மீள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகான விநாயகர் தரிசனம். எல்லா கோவில்களுக்கு நேரில் சென்று தரிசனம் செய்த மனநிறைவு.
    நீங்கள் செய்த பிரசாதங்கள் அனைத்தும் அருமை. உங்கள் பூஜை அறையும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. ஒவ்வொரு ஊரிலும் உள்ள அலங்காரங்களோடு விநாயகப் பெருமான் தரிசனம்.

    மிக்க நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. அனைத்து விநாயகர்களும் மனதைக் கவர்கின்றனர். உங்க வழிபாடும் சிறப்பாக அதே சமயம் எளிமையாக இருக்கு! எல்லாக் கோயில்களுக்கும் நேரில் சென்று பார்க்க முடியாட்டியும் இங்கே பார்க்க முடிந்தது. தொலைக்காட்சியிலும் பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. என்னா ஒரு அலங்கரிப்புக்கள் பிள்ளையாருக்கு.. ஒரே குஷியில இருக்கிறார் கர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஞானி..

      பிள்ளையார் சந்தோசமாக இருந்தா நமக்கும் சந்தோசந்தானே...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. உழவாரப் படையினர் அளித்திருக்கும் கணபதி படங்கள் அருமை இவைகள் உற்சவ மூர்த்திகளா கருவறைச்சிலைகளா படங்கள் எடுக்க அனிமத் கிடைத்ததா தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று கேட்காதீர்கள் ஒரு ஆர்வம்தான்

    பதிலளிநீக்கு
  12. அன்பின் ஐயா..

    உழவாரத் திருக்கூட்டத்தினர் தமக்குக் கிடைக்கும் படங்களைப் பகிர்கின்றார்கள்.

    பதிவில்,
    திருக்கோயிலூர், திருஅண்ணாமலை, சேலம், கஞ்சனூர், கீழ்வேளூர், திருஆரூர், தஞ்சாவூர், சிங்கப்பூர் மற்றும் கனடா ஆகிய தலங்களின் படங்கள் மூலஸ்தானத்தில் எடுக்கப்பட்டவை..

    மற்றவை உற்சவத் திருமேனிகள்..

    தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..