நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர்மேல் துயில் எழுந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே!..{1040}
உண்டாய் உறிமேல் நறுநெய் அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே
விண்தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே!..{1041}
அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே!..{1041}
-: திருமங்கையாழ்வார் :-
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே..{0677}
-: குலசேகராழ்வார் :-
மானேய்மட நோக்கித் திறத்து எதிர்வந்த
ஆனேழ் விடைசெற்ற அணிவரைத் தோளா
தேனே திருவேங்கட மாமலை மேய
கோனே என்மனம் குடிகொண்டு இருந்தாயே!..{1044}
-: திருமங்கையாழ்வார் :-
ஒண்பவள வேலை உலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே..{0680}
-: குலசேகராழ்வார் :-
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே..{0681}
-: குலசேகராழ்வார் :-
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே..{0685}
-: குலசேகராழ்வார் :-
***
மலையேறிச் சென்றதும்
சற்றும் தாமதிக்காமல்
அதிகாலையில் குளித்து முடித்து
ஆறுமணியளவில்
பெருமானின் தரிசனத்திற்காகப்
புறப்பட்டோம்...
காலை ஒன்பது மணிக்கு
நூற்றுக்கணக்கான அன்பர்கள் காத்திருக்க
நடை திறக்கப்பட்டது...
மதியம் பன்னிரண்டு மணியளவில்
ஆனந்த நிலையத்துள் புகுந்தோம்..
இன்றைய பதிவில்
ஆனந்த நிலையத்துள்
ஆராஅமுதனின் தரிசனமும்
ஆழ்வார் தம் அமுதமொழிகளும்...
ஸ்ரீ வேங்கடேச சரணம்.. சரணம் ப்ரபத்யே..
ஓம் நமோ நாராயணாய..
ஃஃஃ
***
மலையேறிச் சென்றதும்
சற்றும் தாமதிக்காமல்
அதிகாலையில் குளித்து முடித்து
ஆறுமணியளவில்
பெருமானின் தரிசனத்திற்காகப்
புறப்பட்டோம்...
காலை ஒன்பது மணிக்கு
நூற்றுக்கணக்கான அன்பர்கள் காத்திருக்க
நடை திறக்கப்பட்டது...
மதியம் பன்னிரண்டு மணியளவில்
ஆனந்த நிலையத்துள் புகுந்தோம்..
இன்றைய பதிவில்
ஆனந்த நிலையத்துள்
ஆராஅமுதனின் தரிசனமும்
ஆழ்வார் தம் அமுதமொழிகளும்...
ஸ்ரீ வேங்கடேச சரணம்.. சரணம் ப்ரபத்யே..
ஓம் நமோ நாராயணாய..
ஃஃஃ
காலை வணக்கம். எங்கே ஆனந்த தரிசனம்?
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
ஆறுமணிக்கு நுழைந்து, ஒன்பது மணிக்கு கூண்டு நுழைந்து பனிரெண்டு மணிக்குதான் ஆனந்த தரிசனமா? அம்மாடி!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குநாங்கள் ஆறு மணிக்கெல்லாம் புறப்பட்டு திவ்ய தரிசன வாசலுக்கு சென்று விட்டோம்...
9 மணிக்குத் தான் திறக்கப்பட்டது.
ஆழ்வார் பாசுரங்களுடன் அழகிய பெருமாள் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நன்றி.
பதிலளிநீக்குஆழ்வார் பாசுங்களும், ஆராஅமுதனின் தரிசனமும் மிக அருமை.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஜி
பதிலளிநீக்குகாலை ஆறு மணிக்கு தொடங்கி மதியம் பன்னிரண்டு மணிக்கு முடிந்தது பாக்கியமே...
சிலர் மாலைவரை காத்துக் கிடக்கின்றார்கள்.
அன்பின் ஜி...
நீக்குசில நேரங்களில்
தாமத தரிசனம் தான்...
தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட என்று வரவேண்டும். எம்பெருமன் என வந்துள்ளது.
பதிலளிநீக்குபடியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே - பவளவாய்
இன்னும் தரிசனம் ஆகவில்லை. படங்கள் அருமை. பிறகு வருகிறேன்.
அன்பின் நெ.த.,
நீக்குநேற்று இரவு இணையம்
மிகவும் சிக்கலாக இருந்தபோது ஏற்பட்டது இது...
திருத்தங்கள் மற்றும் ஒழுங்கமைப்பு செய்தபோது
ஏற்றுக் கொள்ளவேயில்லை...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீரார் கடலும் - இதில் மாமலை மேல் - மாமலை மேய என்று வரவேண்டும்.
பதிலளிநீக்குகம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே
இதில் சில இடங்களில் 'தம்பமாய் நிற்கும்' என்று வந்துள்ளது. நானும், 'ஸ்தம்பம்' என்பதைத்தான் தமிழில் தம்பம் என்று (அதாவது ஸ்தூபி) என்று நினைத்தேன். ஆனால் தம்பகம் என்பது முள் செடி அல்லது புதர் என்று அர்த்தம்.
ப்ரபந்தப் பாடல்களைப் படித்து இன்புற்றேன்.
உங்கள் இடுகையில் எங்கு தங்கினீர்கள், குளித்தீர்கள் போன்ற விவரங்கள் இல்லை. நடைபாதையில் நடந்து வரும் பக்தர்களுக்குச் செய்துள்ள சவுகரியம் பற்றியும் அவர்களுக்கான தனி வரிசை பற்றியும் இல்லை. இதையும் சேர்த்துவிடுங்கள்.
அன்பின் நெ.த.,
நீக்குசற்று நேரத்தில் வருகிறேன்....
அன்பின் நெ.த.,
நீக்குதிருப்பாசுரங்களின் எழுத்துப் பிழைகளைத் திருத்தித் தரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி...
தம்பம் என்பதற்கான விளக்கம் அருமை...
தவிர -
இன்று சனிக்கிழமை...
விளக்கத்திற்கெல்லாம் விளக்கமாக
வேங்கடத்தரசு வீற்றிருக்கின்றது...
அதனால், இன்றைய பதிவில் ஸ்வாமி தரிசனமும்
திருப்பாசுரங்களும் என்று திட்டமிட்டேன்!..
- என்று தான் வேறு விவரங்கள் எதையும் சொல்லவில்லை...
தொடரும் அடுத்த பதிவினில் காணலாம்..
தங்களது வருகையும் கருத்துரைகளும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
காலையிலேயே நினைத்தேன். எழுத விட்டுப்போய்விட்டது. சனிக்கிழமை, பெருமாள் (வேங்கடவன்) தரிசனம். மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதற்காகத் தான் இன்று இடுகை வெளியிட்டீர்களோ என்று நினைத்தேன்.
நீக்குநல்ல இடுகைகள் நிறைவாகப் போடுகிறீர்கள். தொடருங்கள். You are an inspiration to many of us. வாழ்த்துகள்.
அன்பின் நெ.த.,
நீக்குதங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமை ஐயா... வாழ்க நலம்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வெங்கடவன் உலா வா?
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதிருமலைக்குச் சென்றுவந்த விவரங்களை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
திருவேங்கடன் தரிசனம் கிட்டியமைக்கு வாழ்த்துகள். உங்கள் மூலம் நாங்களும் இன்று பேறு பெற்றோம். தொடர்ந்து விபரங்களுக்குக் காத்திருக்கேன். நடைப்பயணம் செய்தவங்களைச் சீக்கிரமா உள்ளே அனுப்புவாங்கனு நினைச்சிருந்தேன். இத்தனை நேரம் ஆகி இருக்கே!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஅன்புடையீர்...
நீக்குநாங்களும் இப்படித்தான் நினைத்திருந்தோம்.. ஆனாலும் - 1?...
அடுத்த பதிவில் விவரம் சொல்கிறேன்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பாசுரங்களும் படங்களும் சிறப்பு. நாங்களும் தரிசித்து மகிழ்ந்தோம். நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி..
ஓம் நமோ நாராயணா...
பதிலளிநீக்குஉங்களுடன் நாங்களும். நன்றி.
பதிலளிநீக்குதுளசி: பழைய பதிவையும் பார்த்துவிட்டேன். இன்றைய தரிசனம் பாடல்களுடன் அருமை. அடுத்து அறிய தொடர்கிறோம்
பதிலளிநீக்குகீதா: கூடவே ஏறிவந்தும் இடையில் தங்கிவிட்டோம். என்றாலும் ஆனந்த தரிசனம் கிடைத்துவிட்டது. சொல்லியிருக்கும் பாசுரங்களை ரசித்தேன். அருமை அண்ணா இதோ அடுத்த விவரங்களுக்குப் போகிறோம்.