கடந்த 22/ பிப்ரவரி திங்கட்கிழமையன்று திருக்குடந்தை நகரில் மகாமக தீர்த்தவாரி பெருஞ்சிறப்புடன் நிகழ்ந்தது - யாவரும் அறிந்ததே!..
மேலே உள்ள படங்கள் Fb வழியாகக் கிடைத்தவை..
திருவிழா நிறைவுற்ற பின்னும் -
மகிழ்ச்சி நிறைந்த மக்களின் ஊடாகப் பயணித்து -
நான் எடுத்த படங்கள் - இதோ உங்களுக்காக இன்றைய பதிவில்!..
மகாமகத் திருக்குளத்தின் வடமேற்குக் கரையில் -
ஸ்ரீ மங்களாம்பிகா உடனாகிய ஸ்ரீ கும்பேஸ்வரரும்
ஸ்ரீ பிரஹன்நாயகி உடனாகிய ஸ்ரீ நாகேஸ்வரரும்
ஸ்ரீ விசாலாட்சி உடனாகிய ஸ்ரீ காசி விஸ்வநாதரும்
ஸ்ரீ சோம சுந்தரி உடனாகிய ஸ்ரீ சோமேஸ்வரரும்
ஸ்ரீ ஆனந்த நாயகி உடனாகிய ஸ்ரீ கம்பட்ட விஸ்வநாதரும்
ஸ்ரீ காமாட்சி உடனாகிய ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரரும்
மகாமகத் திருக்குளத்தின் கிழக்குக் கரையில் -
ஸ்ரீ சோமகலா நாயகி உடனாகிய ஸ்ரீ பாணபுரீஸ்வரரும்
ஸ்ரீ அமிர்த நாயகி உடனாகிய ஸ்ரீ அபிமுகேஸ்வரரும்
மகாமகத் திருக்குளத்தின் தெற்குக் கரையில் -
ஸ்ரீ அமிர்தவல்லி உடனாகிய ஸ்ரீ அமிர்தகலசநாதரும்
ஸ்ரீ சௌந்தர நாயகி உடனாகிய ஸ்ரீ கௌதமேஸ்வரரும்
மகாமகத் திருக்குளத்தின் மேற்குக் கரையில் -
ஸ்ரீ ஞானவல்லி உடனாகிய ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும்
ஸ்ரீ பந்தாடுநாயகி உடனாகிய ஸ்ரீ கோடீஸ்வரரும்
சர்வ அலங்காரத்துடன் விடை வாகனத்தில் எழுந்தருளி -
நம் பொருட்டு - நதிக் கன்னியர் ஏற்றுக் கொண்ட பாவங்களைத் தீர்த்தருளினர்..
அற்புதமாக கருடன்கள் திருக்குளத்தைச் சுற்றிப் பறந்திருக்க
மதியம் 12.35 மணியளவில் ரிஷப லக்னத்தில் வெகு கோலாகலமாக
மகாமக தீர்த்தவாரி நிகழ்ந்தது..
அதேவேளையில் -
கங்கையினும் மேலான காவிரி நதிக் கரையில் ஸ்ரீசக்ர படித்துறையில் -
ஸ்ரீ கோமளவல்லியுடன் ஸ்ரீ சார்ங்கபாணியும்
ஸ்ரீ சுதர்சன வல்லி விஜயவல்லியுடன் ஸ்ரீ சக்ரபாணியும்
ஸ்ரீ செங்கமலவல்லியுடன் ஸ்ரீ ராஜகோபாலனும்
ஸ்ரீ பூமாதேவியுடன் ஸ்ரீ ஆதிவராஹப் பெருமானும்
ஸ்ரீ சீதாதேவியுடன் இளையபெருமாள் உடன்வர ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தியும்
எழுந்தருளி - சேவை சாதிக்க -
காவிரி நதியில் ஸ்ரீ சக்ர ஸ்நானம் நிகழ்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது..
அத்துடன் மங்கலகரமாக திருவிழா நிறைவு பெற்றாலும் -
அடுத்தடுத்த நாட்களில் -
தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்தும் குடந்தையை நோக்கி
மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்தனர்..
கடந்த வியாழன் அன்றும் சனிக்கிழமை அன்றும் குடந்தை சென்றிருந்தேன்..
அப்போதுதான் கட்டுப்பாடுகள் ஏதுமற்ற ஆனந்தத் திருவிழாவினைக் கண்ட கோலாகலத்துடன் மக்கள் இயங்கிக் கொண்டிருந்தனர்..
ஆயிரக்கணக்கான மக்கள் - உற்சாகத்துடன் மகாமகத் திருக்குளத்திலும் பொற்றாமரைத் திருக்குளத்திலும் நீராடிக் கரையேறி -
காசிவிஸ்வநாதர் திருக்கோயிலிலும் அபிமுகேஸ்வரர் திருக்கோயிலிலும்
நாகேஸ்வரர் திருக்கோயிலிலும் கும்பேஸ்வரர் திருக்கோயிலிலும் சார்ங்கபாணி திருக்கோயிலிலும் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்..
சற்றே ஓய்ந்திருந்த உள்ளாட்சி அமைப்பினர் சுறுசுறுப்புடன் இயங்கி மீண்டும் மக்கட்பணியாற்றினர்..
நகருக்குள் போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டது..
ஆனாலும், மகாமக குளத்தின் சுற்றுப் புறங்கள் பராமரிக்கப்படவில்லை..
மேலே உள்ள படங்கள் Fb வழியாகக் கிடைத்தவை..
திருவிழா நிறைவுற்ற பின்னும் -
மகிழ்ச்சி நிறைந்த மக்களின் ஊடாகப் பயணித்து -
நான் எடுத்த படங்கள் - இதோ உங்களுக்காக இன்றைய பதிவில்!..
நண்பர்களின் தளங்களுக்கும் செல்ல முடியாததாயிற்று...
குறுகிய நாட்களுக்குள் அங்குமிங்குமாக -
குடும்பத்துடன் ஆலய தரிசனம் செய்து கொண்டிருந்தேன்..
அந்த மகிழ்ச்சியினை -
இயன்றவரை அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்வதாக உத்தேசம்..
மாலைக் கருக்கலில் அபிமுகேஸ்வரம் |
துலாபார மண்டபம் - நாகேஸ்வரன் திருக்கோயில் |
இதேபோல - மீண்டும் அடுத்த மகாமகத்தை
நாம் அனைவரும் கண்டு களிக்க
எல்லாம் வல்ல பரம்பொருள்
நல்லருள் பொழிய வேண்டுகின்றேன்..
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
* * *
அன்பின் ஜி
பதிலளிநீக்குஅழகிய படங்களும் அருமையான வர்ணனைகளும் வழக்கம் போலவே அழகு தொடர்ந்து இவ்வகை பதிவுகளின் அணிவகுப்பை ஆவலுடன் எதிர் நோக்குகின்றேன். வாழ்க நலம்.
ஜி நேற்று இந்தியாவிலிருந்து குவைத் செல்லும் வழியில் அபுதாபி விமான நிலையத்தின் உள்ளிருந்து அடியேனையும் நினைவு கூர்ந்து அழைத்தமைக்கு மகிழ்ச்சியும், நன்றியும் நாம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது இணைப்பு துண்டித்து விட்டது நெடுநேரம் பேசிய காரணத்தால் தினார் முடிந்திருக்கும் என்று கருதுகின்றேன் உடன் அதே குவைத் நம்பருக்கு எனது யூ.ஏ.ஈ. நம்பரிலிருந்து அழைத்தேன் ரோலிங் காரணமாக இணைப்பு கிடைக்கவில்லை.
என்றும் அன்புடன்
கில்லர்ஜி
அன்பின் ஜி..
நீக்குநேற்று நடந்தது அதேதான்.. தினார் தான் காரணம்..
பணம் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தாலும்
நல்ல மனம் நட்பினை வாழ வைக்கும்!..
வாழ்க நட்பு.. வாழ்க நலம்..
உடன் வந்து கருத்துரைத்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..
அழகான படங்கள். தொடர்ந்து உங்கள் பதிவுகளில் விழா பற்றிய படங்களும் தகவல்களும் படிக்க ஆவலுடன் நானும்..
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
தங்களது பதிவினைக் கண்டு மகிழ்ச்சி. 10க்கும் மேற்பட்ட கோயில்கள். தீர்த்தவாரிக்குச் சென்ற ஐந்து அல்லது ஆறு கோயில்களின் பல்லக்குகளைப் பார்த்தல். காலை 6.00 மணிக்குத் தொடங்கிய பயணம், மகாமகக்குளம், பொற்றாமரைக்குளம், காவிரியாறு என்ற நிலையில் பயணம். அனைத்தையும் உள்ளடக்கிய எங்களது 2016 மகாமகப்பதிவு, எனது முந்தைய நான்கு மகாமகப்பதிவுகளுடன் விரைவில் சந்திப்போம்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான படங்கள் ஐயா... நன்றிகள் பல...
பதிலளிநீக்குஆஹா அருமையான பயணம் முடிந்து ஊருக்கு சென்று பதிவும் போட்டாச்சா?,,
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் வெகு அழகு அருமை,,
தகவல்கள் சிறப்பு, தொடருங்கள்.
அன்புடையீர்..
நீக்குபதிவுகளை வெளியிடாமல் வேறு வேலை ஏது!..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான பயணப பதிவுடன்
பதிலளிநீக்குஅருமையான படங்களும் கூட...
வாழ்த்துக்கள் நண்பரே...
அன்புடையீர்..
நீக்குதங்களுக்கு அன்பின் நல்வரவு..
முதல் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
மகாமகம் கண்டு ஊருக்கும் திரும்பியாயிற்றா!! படங்கள் அழகு. தகவல்களும். பதிவும் அழகு!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..