நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 05, 2015

ஆனந்த தரிசனம்

கடந்த 2/5 சனிக்கிழமையன்று -

பழமுதிர்சோலை எனப்படும் அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் ஆனந்தமாகப் புறப்பட்டார் ஸ்ரீ கள்ளழகர்,

வழியெங்கும் ஆவலுடனும் காத்துக் கிடந்த மக்களின் ஆனந்தமான வரவேற்பினை ஆனந்தத்துடன் ஏற்றுக் கொண்டார்.


ஞாயிற்றுக்கிழமை - ஆனந்தமான எதிர்சேவையில் மகிழ்ந்த வண்ணம் -
அன்றிரவு தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருளினார்.

அங்கே கள்ளழகருக்கு ஆனந்தமாகத் திருமஞ்சனமாகியது.


அதன்பின் -  வெண்பட்டும் பச்சைப் பட்டும் அணிந்து கொண்டு - ஆண்டாள் ஆனந்தமாக சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு ஆனந்த தரிசனம் அளித்தருளினார்.

ஆயிரக்கணக்கான அன்பர்களின் ஆனந்தத்தில் தானும் பங்கு கொண்ட ஆனந்தன் - ஆரா அமுதன் - தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி -
ஆனந்தத்துடன் ஓடிக் கொண்டிருந்த வைகை ஆற்றங்கரைக்கு விரைந்தார்.

வைகையாற்றின் கரையில் விடிய விடியக் காத்திருந்த கண்கள் அனைத்தும் அழகனைக் கண்டதும் ஆனந்த வெள்ளத்தில் நீந்தின..

தம் மக்களைக் கண்டதும் - கள்ளழகரின் கண்களிலும் ஆனந்தம் மலர்ந்தது.

அழகரின் வரவினை எதிர்நோக்கியிருந்த ஸ்ரீ வீரராகவப் பெருமாள் -
காலை 6.15 மணியளவில் ஆற்றங்கரையில் அழகரைக் கண்டதும் ஆனந்தம் கொண்டார்.

கள்ளழகராகிய ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளையும் ஸ்ரீ வீரராகவப் பெருமாளையும் சேர்த்தியாகக் கண்ட மக்கள் வெள்ளம் -

கோவிந்தா.. கோவிந்தா!.. - என, ஆனந்தக் கோலாகலத்துடன் ஆரவாரித்தது.


அழகர் ஆற்றங்கரைத் திருக்கண்ணில் எழுந்தருள - அங்கிருந்தோர் ஆனந்தம் மிக ஆகினர்.

அதன்பின் - 6.47 மணியளவில் ஆனந்தப் பிரவாகமான வைகை ஆற்றில் அழகர் இறங்கியருளினார்.

அவ்வேளையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனதில் ஆனந்தம் பொங்கித் ததும்பியது.

அன்பில் நிறைந்த அடியவர் குழாத்தினர் - சர்க்கரைச் சொம்பில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து ஆனந்தம் கொண்டனர்.

ஆற்றுத் திருக்கண் மண்டபத்தை மும்முறை வலஞ்செய்த - அழகரை, வீரராகவர் ஆனந்தத்துடன் மும்முறை வலஞ்செய்தருளினார்.

ஆனந்தத் திருக்கோலங் கொண்டிருந்த அழகர் - அங்கிருந்து 7.40 மணியளவில் புறப்பாடாகினார்.




தம்மை நோக்கி எழுந்தருளிய அழகரைக் கண்டு - ராமராயர் மண்டபத்தில் கூடியிருந்த அடியவர்கள் ஆனந்த நிலை கொண்டனர்.





வைகையாற்றின் ஆனந்தம்

ஆனைக்கும் ஆனந்தம்
நன்றி - KKராம்ஜி
அடியார்களின் ஆனந்தம்


நன்றி - குணா அமுதன்
அருள்மாரி பொழியும் அழகருக்கு தீர்த்தவாரியாக - நீரைப் பீய்ச்சியடித்து ஆனந்த மாரியாக அன்பினைப் பொழிந்தனர்.

பொருளானந்தம் தேடிடும் அவனியில் - ஐயன் 
அருளானந்தம் நாடினர் அடியார்கள்..

அழகரின் அடியார் தமக்கு
அங்கே ஆனந்தம் பயிரானது.
அதுவே என்றும் உயிரானது!..

ஓம் ஹரி ஓம்  
* * *  

11 கருத்துகள்:

  1. பொருளானந்தம் தேடும் அவனியில் மக்கள் இறைவன் அடி தேடினால் நலமே. பதிவு அருமை. புகைப்படம் அழகு. வைகையில் நீர் ஆச்சரியம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடன் வருகை தந்து கருத்துரை வழங்கியதற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஆனந்த தரிசனம் கண்டேன்
    மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் மகிழ்ச்சியே எனக்கும்.. மிக்க நன்றி..

      நீக்கு
  3. சிறப்பான தரிசனம் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான தரிசனம் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல தரிசனம். பதிவின் வழியாக அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடன் பயணிக்கும் போது எனக்கும் மகிழ்ச்சியே.. நன்றி..

      நீக்கு
  6. விமர்சனம் அருமை. அந்த யானை ஆற்றில் இறங்கிக் குளிப்பது அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..