மதுரையம்பதியில் நிகழ்வுறும் சித்திரைத் திருவிழாவின் முத்திரைத் திருநாள் - ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம்.
அன்னை மீனாக்ஷி திக்விஜயம் செய்தாள்..
மகாகவி பாரதியார் பணியாற்றிய - மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் -
நேற்று ஒன்பதாம் திருநாள்.
அன்னை மீனாக்ஷி திக்விஜயம் செய்தாள்..
இன்று பத்தாம் திருநாள்!..
போர்க்கோலங் கொண்ட பூங்குழலாள்
புதுமலர் சூடி திருமணக்கோலங் கொண்டாள்!..
இன்று மதுரையம்பதியில் மங்கலகரமாக
ஸ்ரீ மீனாட்சி - ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ந்தது.
அழகிய படங்களை - இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..
இன்றைய பதிவின் படங்களை வழங்கியோர் :-
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், திரு.அருண்.,
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *
ஒன்பதாம் திருநாள் (29/4) வைபவம்
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..
மகாகவி பாரதியார் பணியாற்றிய - மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் -
புதன் கிழமை மாலை 5.30 மணியளவில் தொடங்கிய திருப்பணி.
இந்த திருமண விருந்து - பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபையினரால் நடத்தப் பெற்றது.
இந்த ஆண்டு மாப்பிள்ளை அழைப்பின் விருந்து உபசரிப்பில் - கேசரி, பொங்கல், வடை முதலியவை இடம் பெற்றன.
திருக்கல்யாண விருந்து ஏழாயிரம் பேருக்கு எனும் அளவில் - பூந்தி, கல்கண்டு சாதம், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் வாழைப்பழத்துடன் தண்ணீர் பாக்கெட்டும் வழங்கப் பட்டிருக்கின்றது.
பத்தாம் திருநாள் (27/4) வைபவம்
ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம்.
சித்திரை வீதிகளில் திருவீதி உலா நிகழ்ந்தது!..
-: காலை :-
வெள்ளி சிம்மாசனத்தில்
திருமண மண்டபத்திற்கு எழுந்தருளல்.
ஸ்ரீ மீனாக்ஷி அம்பிகையின் திருமண நாளாகிய இன்று - பெருந்திரளாக பல்லாயிரக்கணக்கானவர் மாமதுரையில் கூடியிருக்க -
அம்மையும் அப்பனும் சர்வ அலங்காரத்துடன் - ஆடி வீதி மற்றும் சித்திரை வீதிகளில் எழுந்தருளினர்.
தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் சுந்தரேசப் பெருமான் எழுந்தருளினார்.
பெருமானைத் தொடர்ந்து - பிரியாவிடையும் மீனாக்ஷி அம்மனும் மணக் கோலத்தில் மணமேடைக்கு எழுந்தருளினர்.
தன் அன்புத் தங்கையை கன்யாதானம் செய்து கொடுப்பதற்கென - திருப்பரங்குன்றத்திலிருந்து ஸ்ரீ பவளக்கனிவாய்ப் பெருமானும் எழுந்தருளினார்.
அம்மையப்பனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்வதற்கு -
வள்ளி தெய்வானையுடன் திருமுருகன் - தானும் எழுந்தளினன்.
ஸ்ரீ மீனாக்ஷிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட சுபவேளையில் மலர்களுடன் அட்சதை தூவி வழிபட்டனர்.
சுமங்கலிகள் தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர்.
-: இரவு :-
அருள்தரும் சுந்தரேசப்பெருமான் யானை வாகனத்திலும்
அங்கயற்கண் அம்பிகை பூம்பல்லக்கிலும்
எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து அருள் புரிவர்.
அகமும் புறமும் குளிர்ந்து அம்மையப்பனைத் தரிசித்து ஆனந்தம் எய்துவோம்.
புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம்காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம்அடியார்கள் நடுஇருக்கப்
பண்ணிநம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே!.. (41)
-: அபிராமி அந்தாதி :-
அம்மையப்பன் திருவடிகள் போற்றி.. போற்றி!..
ஓம் நம் சிவாய சிவாய நம ஓம்
* * *
அன்பின் ஜி மதுரை ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாண விழா புகைப்படங்கள் கண்டு தரிசித்தேன் தங்களது வழக்கமான விளக்கவுரைகளுடன் அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..
நல்ல வேளை நேரடி ஒளிபரப்பு இருந்தது .கண்டுமகிழ்ந்தோம்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குஇங்கே நேரடி ஒளிபரப்பு காண்பதற்குரிய சூழ்நிலை இல்லை..
அந்தக் குறையை அழகிய படங்கள் தீர்க்கின்றன.
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நேரில் செல்ல முடியாத எம்மைப் போன்றவர்கள் தங்கள் பதிவு கண்டால் போதுமே, அருமை, வாழ்த்துக்கள். புகைப்படங்களும் அருமை. சாப்பாடு சூப்பர்.நம்ம வேலை நமக்கு.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..
நேரில் செல்ல முடியாத எம்மைப் போன்றவர்கள் தங்கள் பதிவு கண்டால் போதுமே, அருமை, வாழ்த்துக்கள். புகைப்படங்களும் அருமை. சாப்பாடு சூப்பர்.நம்ம வேலை நமக்கு.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குபதிவுக்கு ஒன்றும் பந்திக்கு ஒன்றுமாக இரண்டு கருத்துரைகளா!..
மகிழ்ச்சி.. நன்றி..
கண்கொள்ளா காட்சிகளைக் கண்டு களித்தேன்
பதிலளிநீக்குநன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்களின் மகிழ்ச்சி - எனக்கும் மகிழ்ச்சியே!..
தங்கள் வருகைக்கு நன்றி..
கண்கொள்ளக் காட்சிகள் ஐயா...
பதிலளிநீக்குநன்றி...
அன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அன்புடையீர்..
பதிலளிநீக்குதங்களுக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..
திருமண விழாக் காட்சிகள் அனைத்துமே அருமை. படங்கள் மூலம் நாங்களும் கண்டு களித்தோம்.
பதிலளிநீக்கு70000-பேருக்கு உணவு... எத்தனை உழைப்பு.....
அன்பின் வெங்கட்..
நீக்குவிருந்து உபசரிப்பு சமையலுக்கு - தாமாகவே தன்னார்வத்துடன் மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..கருத்துரைக்கு நன்றி..