நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014

தேவி தரிசனம் - 5

இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்
தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள்
சுதந்திர தேவியின் ஆனந்த தரிசனம்!..


வந்தே மாதரம்!..

வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்
வந்தே மாதரம்!..

ஸுப்ரஜ் யோத்ஸனா புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல ஸோபினிம்
சுஹாசினிம் சுமதுர பாஷினிம்
சுகதாம் வரதாம் மாதரம்
வந்தே மாதரம்!..

கோடிகோடி கண்ட கலகல நி னாத கராலே
கோடிகோடி புஜைத்ருத கரகரவாலே 
அபலாகேனோ மா யேதோ பலே
பஹூபல தாரிணீம் நமாமி தாரீணீம் 
ரிபுதல வாரிணீம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா த்வம்ஹி ப்ராணா: சரீரே 
பாஹூதே துமி மா சக்தி 
ஹ்ருதயே துமி மா பக்தி 
தோமராயி ப்ரதிமாகடி மந்திரே மந்திரே!.. வந்தே மாதரம்!..

த்வம் ஹி துர்கா தசப்ரஹரண தாரீணீம் 
கமலாம் கமல தள விஹாரிணீம் 
வாணீ வித்யா தாயினீம் 
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம் 
சுஜலாம் சுபலாம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

ஸ்யாமளாம் ஸரளாம் 
ஸூஸ்மிதாம் பூஷிதாம் 
தரணீம் பரணீம் மாதரம்!.. 
வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..


வந்தே மாதரம்!.. 

தேசத்தின் சுதந்திரப்போராட்ட வேள்வியில் மந்திரமாகப் பொலிந்த சொல்!..
வங்காளத்தின் ஸ்ரீபங்கிம் சந்திர சட்டர்ஜி (1838 - 1984) அவர்கள் எழுதி தாய்த் திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்த இந்த திருப்பாடலில் இருந்தே பிறந்தது.

1896ல் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்கள் குழுவினருடன் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். இதுவே  இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்ச்சியாகும். 

ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது வந்தே மாதரம் பாடல்.

ஆங்கிலேய அரசின் தடையையும் மீறி , பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் -  ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி. இவர் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களின் அன்பு மருமகள். 

மகான் ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ஆகஸ்டு 7, 1906 அன்று துவக்கிய தினசரியின் பெயர் -  வந்தே மாதரம்!.. 

பஞ்சாப் சிங்கம் என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் 1906ல்  லாஹூரில் ஆரம்பித்த சஞ்சிகைக்குப் பெயர்  -  வந்தே மாதரம்!..

1906  மார்ச் மாதம் வங்காளத்தில் பரிசால் என்ற இடத்தில் தொடங்கிய பரிசால் பரிஷத் ஊர்வலம் ஆங்கிலேய அரசின் அடக்கு முறைத் தடியடிகளினால் மண்டை உடைபட்டு தொண்டர்கள் இரத்தம் சிந்தி மண்ணில் வீழ - பாதியிலே  நின்று போனது. 

காரணம் அவர்கள் முழங்கிய கோஷம் - வந்தே மாதரம்!..

மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) அவர்களும் அவர் தம் நண்பர்களும் 1905 ல்  கொடி ஒன்றினை வடிவமைத்து  ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் (1907) மாநாட்டில் பறக்க விட்டனர். 

அது - மேலே பச்சையும் இடையே காவியும் கீழே சிவப்பும் கொண்டிருந்தது.

அந்த மூவர்ணக் கொடியின் நடுவில் திகழ்ந்த சொல் -  வந்தே மாதரம்!..

தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் (1943-1945) அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 

அக்காலத்தில் அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.

( தகவல்தொகுப்பில் உதவி - விக்கி பீடியா )

வந்தேமாதரம் பாடலைக் கேட்டு மகிழுங்கள்!..


வந்தே மாதரம்!.. - என்கிற மந்திரத்தை முழங்கியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுள் - 

இன்னும் நம் கண்முன்னே திகழ்பவர் - கொடி காத்த குமரன்!..

தேச விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த எண்ணிலடங்காத தியாக சீலர்களை மனதார நினைவு கூர்ந்து அவர்களைப் போற்றி வணங்கி -

அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

மகாகவி சுப்ரமண்ய பாரதியார்
வழங்கிய
வந்தே மாதரம் பாடலின் தமிழாக்கம்.
* * *

இனியநீர்ப் பெருக்கினை இன்கனி வளத்தினை
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை..

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை
மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை
நல்வகை இன்பம், வரம்பல நல்குவை..

முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?..
அருந்திறல் உடையாய்!அருளினை போற்றி
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை..


நீயே வித்தை நீயே தருமம்
நீயே இதயம் நீயே மருமம்
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே!..
தடந்தோள் அகலாச் சக்திநீ அம்மே.
சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே..
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவிஇங் குனதே!..

ஒருபது படைகொளும் உமையவள் நீயே
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ
வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ!
போற்றி வான்செல்வீ! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப் பெருக்கினை இன்கனி வளத்தினை!

சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்.. இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய்.. தாயே! போற்றி!..

வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..      
* * *
ஆடி வெள்ளியில் அம்மன் தரிசனம்

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்!..
 நாடு நலம் பெற நல்லருள் புரிக தாயே!..


துக்க நிவாரண அஷ்டகம்

மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாராணி காமாக்ஷி!.. (1)
 

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாய்
தானுறு தவ ஒளி தாரொளி மதி ஒளி தாங்கியே வீசிடுவாய்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாய்
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (2)
 
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எங்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (3)
 
தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீவருவாய்
கணகண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீவருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீவருவாய்
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (4)

 
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேலனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நல்சக்தி எனும் மாயே
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (5)
 
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எங்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (6)
 
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (7)
 
ஜயஜய பாலா சாமுண்டேஸ்வரி ஜயஜய ஸ்ரீதேவி
ஜயஜய துர்கா  ஸ்ரீபரமேஸ்வரி  ஜயஜய ஸ்ரீதேவி
ஜயஜய ஜயந்தி மங்களகாளி ஜயஜய ஸ்ரீதேவி

ஜயஜய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (8)

ஓம் சக்தி ஓம்..
மங்கள ரூபிணி மதியணி சூலினி சரணம் சரணம்!..
* * *

15 கருத்துகள்:

  1. இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. இனிய சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த அனைத்து அன்பு உள்ளங்களையும் வணங்குவோம்.
    வந்தேமாதரம் பாடல் பகிர்வு, வந்தேமாதரம் தோன்றிய வரலாறு, மற்றும் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பாய் மங்களரூபிணி பாடல் பகிர்வு அனைத்தும் அருமை.
    இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. சுதந்திரதின பதிவை அருமையாக கொடுத்தீர்கள் நண்பரே...
    எனது சுதந்திரதின பதிவு ''வெட்கப்படுவோம்'' காண்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்..
      தங்களின் பதிவினைப் படித்தேன்.. கருத்திட முடியவில்லையே..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா.,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களுக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  5. சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ !
    அழகிய படமும் கவிதையும் நன்றி ! தொடர வாழ்த்துக்கள் சகோ ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களுக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. மூவர்ணக் கொடியின் நடுவில் திகழ்ந்த சொல் - வந்தே மாதரம்!..

    இனிய சுந்தரமான ஆக்கம்..!

    பதிலளிநீக்கு
  7. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். அரசியல் சுதந்திரம் அடைந்த நாள். ஆனால் உண்மை சுதந்திரம் அடைந்தோமா.?என் பதிவில் ஆதங்கம். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பான வாழ்த்துரைக்கு நன்றி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..