நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 01, 2026

நலம் வாழ்க

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
செவ்வாய்க்கிழமை


மறுநாள் திங்களன்று காலை திருச்செந்தூரில் இருந்து  புறப்பட்டு பகல் பதினோரு மணியளவில் உவரி கோயிலை வந்தடைந்தோம்...

உச்சிப் போதில் ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மனுக்கும் ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ மாடஸ்வாமி, ஸ்ரீ இசக்கியம்மன் ஆகிய மூர்த்திகளுக்கும்  பரிவார தேவதைகளுக்கும்
அலங்காரத்துடன் பஞ்ச முக தீப ஆராதனை நடந்தது...

நள்ளிரவு ஒரு மணிக்கும் இவ்வாறே நிகழ்ந்தது...


மறுநாள் செவ்வாய்க்கிழமை நண்பகலில் சாமி அழைப்பு... 

அக்னி சட்டி ஏந்தி வந்த சாமி, எல்லாக் குறைகளையும் தீர்த்து வைக்கிறேனப்பா... என்றது..

இவ்வாறே நள்ளிரவு ஒரு மணிக்கு சாமி அழைத்த போதும் நான் துணைக்கு இருக்கிறேன்.. கவலைப் படாதேப்பா... என்றது...

மறுநாள் புதன்கிழமை உச்சிப் போதில் கொதிக்கின்ற மஞ்சள் நீரில் விளையாட்டு..

கொதிக்கின்ற மஞ்சள் நீரில் விளையாடி வந்த சாமி - தான் அணிந்திருந்த  மல்லிகை மாலையுடன் குங்குமம் கொடுத்து ஆசி நல்கியது..

இதுவே மகாப்ரசாதம்...

புதன்கிழமை மதியத்துடன் கொடை விழா நிறைவு  பெற்றது..

வியாழனன்று பௌர்ணமி.
நிறை நிலா நாளில் குல தெய்வத்தின் கோயிலில் தங்குவது சிறப்பு என்பதால் அங்கே இரவு தங்கி விட்டு வெள்ளியன்று மாலை தஞ்சைக்குத் திரும்பினோம்...

மூன்று நாட்களும் ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி பக்தர் பேரவையினர் அன்னதான உபசரிப்பு வழங்கினர்..

கடற்கரைக் கோயில் என்பதால் ஒருநாள் சிறிது நேரம் மட்டும் கடல் அருகே நின்றிருந்தேன்...

பதிவிலுள்ள இரண்டு படங்களும் எனது தம்பி எடுத்தவை...

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மகா தீப  அலங்கார ஆராதனைகளைப் படம் எடுக்க இயலவில்லை...

இந்த அளவுக்கு எல்லாம் சிறப்பாக நடந்ததே மகிழ்ச்சி...

வேதனை தருகின்ற 
முழங்கால் வலி விரைவில் சரியாக வேண்டும்...

அன்றைக்கு நினைவின்  பிழையால் விடுபட்டிருந்த தஞ்சை  ஜம்புலிங்கம் ஐயா, கரந்தை ஜெயக்குமார், அன்பின் கில்லர் ஜி, குமார் ஆகியோரையும் இத்தருணத்தில் நினைவில் கொள்கின்றேன்..

2022 ல் திருச்செந்தூரிலும் உவரியிலும் நான் எடுத்த ஒளிப்படங்களை வரும் நாட்களில் மீண்டும் பதிவில்  தருகின்றேன்...

 நலமும் வளமும் 
இறையருளால்
அனைவரது வாழ்விலும்
பொலிவதாக!..
***

6 கருத்துகள்:

  1. அனைவருக்கும் சேர்த்து பிரார்தித்துக் கொண்டு வந்ததற்கு நன்றி.  நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. குலதெய்வ வழிபாடு மன நிறைவை தரும். உடல் நலம் விரைவில் நலம் பெறும்.
    அனைவருக்கும் பிரார்த்தனை செய்து வந்தது நல்லது.
    தம்பி எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா...

      நீக்கு
  3. குலதெய்வ வழிபாடு சிறப்பாக உள்ளது. படங்கள் நன்று.

    இறையருளால் உங்கள் உடல் நலம் விரைவில் நலமாகட்டும்.

    நீங்கள் அனைவரையும் நினைத்து வேண்டி வணங்கியதற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..