நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி
வெள்ளிக்கிழமை
ஏகாதசியும் கிருத்திகையும்
இன்று
திருநாவுக்கரசர் தேவாரம்
வேத நாயகன்
வேதியர் நாயகன்
மாதின் நாயகன்
மாதவர் நாயகன்
ஆதி நாயகன்
ஆதிரை நாயகன்
பூத நாயகன்
புண்ணிய மூர்த்தியே. . 5/100/1
வேதங்களுக்கும் வேதியர்க்கும் நாயகன்.
உமாதேவியின் நாயகன்.
பெருந்தவம் உடைய முனிவர்களுக்கும் நாயகன்..
ஆதி நாயகன் என்றாகி, ஆதிரை என்ற விண்மீனுக்கும் - பஞ்ச பூதங்களுக்கும் நாயகன் ஆகிய புண்ணியமூர்த்தியே சிவபெருமான்..
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
***

ஆதிசிவன் தாள்பணிந்து அருள்பெறுவோமே... அந்த ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே..
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. வெள்ளியன்று சிறப்பான பதிவு. திருநாவுகரசரின் தேவாரப் பாடலுடன் அதன் விளக்கமும் அருமை. சிவபெருமானின் சிறப்பை உணர்த்தும் வரிகள். ஆதி சிவனை வணங்குவோம். ஆத்மாவில் அவன் அருளை உணர்வோம். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எனும் நாமத்தை எப்போதும் நாவாலும், மனத்தாலும் சொல்லி மகிழ்வோம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். . .
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா..
பதிவில் இன்று சொற்றுணை வேதியன் பதிகம் இருக்கும் என வந்தேன்.
பதிலளிநீக்குசில நாட்களாக அந்தப் பதிகம் என் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. மனைவி, என்ன நமச்சிவாய நமச்சிவாயன்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க என்கிறா்.
முதலில் அந்த பாடலைத்தான் தேர்வு செய்திருந்தேன்..
நீக்குஎல்லாருக்கும் தெரிந்தது தானே என்று இந்தப் பாடல்
வரும் நாட்களில்
சொற்றுணை வேதியன்....
மகிழ்ச்சி..
நன்றி...
வெள்ளி நாளில்.... சிவ...சிவ...... வணங்கிக் கொள்கிறோம்.
பதிலளிநீக்குவேதங்களுக்கு வேதியரான வேதநாயகம் தாழ் பணிகின்றோம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
ஆதிரை நாயகன் பதம் பணிவோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஎல்லாம் வல்ல எம்பெருமான் தாள் பணிந்து வணங்குவோம். ஓம் நமச் சிவாய.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்